பிளஸ்–2 வில் 200–க்கு 200: அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தோல்வி! | Anna university semester, students failed in Engineering Maths

வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (05/02/2013)

கடைசி தொடர்பு:11:09 (05/02/2013)

பிளஸ்–2 வில் 200–க்கு 200: அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தோல்வி!

சென்னை: பிளஸ்–2 தேர்வில் கணிதத்தில் 200–க்கு 200 மதிப்பெண்கள் வாங்கிய  மாணவர்கள் உள்பட 60 சதவீத மாணவர்கள், என்ஜினீயரிங் கணித பாடத்தில்  தோல்வியடைந்துள்ளது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளாக கிண்டி  என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி.  ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டுமானால்  கட் ஆப் மார்க் 200–க்கு 200 அல்லது 199, 198 என்ற அளவில் தேவை. கட் ஆப் 196,  195 என்று இருந்தால் கூட இடம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் என்ஜினீயரிங்  மாணவ–மாணவிகளில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர், மூன்றாவது செமஸ்டர் தேர்வில்  கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பிளஸ்–2 தேர்வில் கணக்கில் 200–க்கு 200 மதிப்பெண்  எடுத்தவர்கள் ஆவர். முக்கிய என்ஜினீயரிங் பாடப்பிரிவாக கருதப்படும் எலெக்ட்ரானிக்ஸ்  மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ.) பிரிவில் 50 சதவீதம்பேர் கணித தேர்வில்  தோல்வியடைந்துள்ளனர். இ.சி.இ. பாடப்பிரிவில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக்கல்,  மெக்கானிக்கல், பயோ–மெடிக்கல் பிரிவுகளிலும் இதே நிலைதான்.இதனால் அண்ணா  பல்கலைக்கழக நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

மனப்பாடம் கைகொடுக்காது


 ‘‘பிளஸ்–2 கணிதம் வேறு, என்ஜினீயரிங் கணிதம் வேறு. இங்கு எல்லாமே பயன்பாடு  சார்ந்தது. பள்ளிக்கூடத்தில் செய்வது போல வெறுமனே மனப்பாடம் செய்துகொண்டு  கணக்கு தேர்வு எழுதினால் அந்தமுறை இங்கு கைகொடுக்காது. கருத்துகளையும்,  பயன்பாடுகளையும் நன்கு புரிந்து கொண்டு அணுகினால் மட்டுமே கணக்கு தேர்வை  நல்லமுறையில் எதிர்கொள்ள முடியும்’’ என்று பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்