Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் திருவிழாவில் துப்பாக்கி சூடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் முனியசாமி கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயில் திருவிழாவில் நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காவடி எடுத்த பக்தர்கள் தேவிபட்டினம் தெற்கு தெரு வழியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இருந்த சிலர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியுள்ளனர்.

இதையடுத்து காவடி எடுத்து வந்தவர்களும் பதிலுக்கு கல்வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டும் அமைதி ஏற்படவில்லை. இதனால் கலவரத்தை கட்டுபடுத்த போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இதன் பின் தேவிபட்டணத்தில் அமைதி திரும்பியது.

இந்த கலவரத்தில் காயம் அடைந்த செய்யது அகமதுல்லா, முகம்மதுசலீம், நல்ல முகமது, முனியசாமி, பெரியசாமி, பால்சாமி உள்ளிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவிபட்டினம் போலீஸார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிபட்டினம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

##~~##

இந்நிலையில் தேவிபட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன் மதகலவரத்தை தூண்டி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் கூறி தேவிபட்டினம் படையாச்சி சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்துள்ளனர்.

இரா.மோகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement