வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (23/02/2015)

கடைசி தொடர்பு:13:44 (23/02/2015)

தமிழ்மொழி படித்தோருக்கே வேலை: வலியுறுத்தி பேரணி!

சென்னை: தமிழகத்தில் தமிழே கல்விமொழி, தமிழ்மொழி படித்தோருக்கே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் சார்பில் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடைபெற்றது.

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் தமிழே கல்வி மொழி,  தமிழ்வழிப்படிதோர்க்கே வேலை, தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் –ஆசிரியர்கள்- பெற்றோர்கள் பங்கேற்ற பேரணியை நடத்தியது தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்.

தஞ்சை மாவட்டத்தில் குடந்தை மற்றும் மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் திரளாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசியவர்கள், “அரசு மற்றும் தனியார் துறைகளில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தோர்க்கே 80 விழுக்காடு ஒதுக்கீடு, இந்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகள், பன்னாட்டு அரசு நிறுவனப் பள்ளிகளைதமிழ்நாட்டில் தடை செய்தல், மழலையர் பள்ளிகளை அரசே நடத்த வேண்டும், மழலை வகுப்புகள் உள்ளிட்ட தமிழ் வழிப்பள்ளிகள் அனைத்தையும் அரசு உதவி
பெறும் பள்ளிகளாக ஏற்று நடத்தவேண்டும் , கல்வி வணிகமயமாக்கத்தை எதிர்க்கும் வகையிலும் தனியார் கல்விக்கூடங்களை அரசு தடைசெய்து அரசே அவற்றை நடத்தவும் அருகாமைப்பள்ளிகள்,பொதுப்பள்ளிகள் எனும் தன்மைகளை நடைமுறைப்படுத்தவும் வேண்டும், மக்கள் நலன் நோக்கிய உலக அறிவியல் வளர்ச்சிக்கு இணையாக ஒரே வகைச் சமச்சீர் உயர்தரக் கல்வியைத் தமிழ்நாடு அரசே தந்திட வேண்டும்“ என வலியுறுத்தினர்.

மேலும், “ தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழியாகஇருப்பதோடு,ஆங்கிலம் மொழிப்பாடமாக 5ஆம் வகுப்பிற்கு பிறகே அறிமுகப்படுத்திட வேண்டும், 10ஆம் வகுப்புவரை முப்பருவத்தேர்வுமுறையை நடைமறைப்படுத்துவது, இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர் கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வையும் தமிழ்நாட்டில் தமிழில் கேள்வித்தாள் தந்து, தமிழிலேயே எழுதிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை இன்மை,சுற்றுசூழல் நலமின்மை, எனும் நிலைகளை மாற்றி அரசு
ஒழுங்கமைப்பதோடு, அரசின் வரவு செலவு திட்டத்தின் கீழ் கல்விக்கு அதிகப்படியாக ஒதுக்கீடு செய்திடல் வேண்டும்.

தமிழ் வழியில் உள்ள கல்விப் பாடங்களில் பயன்படுத்தப்பெறும் கலைச்சொற்கள் முறைப்படி வரையறுத்து உறுதிப்படுத்தப்படாத நிலையில் குழப்பத்தையும் ,நெருடலையும் ஏற்படுத்துவனவாக உள்ள நிலையை மாற்றித் தமிழறிஞர்கள் கொண்ட குழுவை கொண்டு வரையறுத்து உறுதிப்படான கலைசொற்களையே பயன்படுத்த வழிவகை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா
( மாணவ பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்