Published:Updated:

`பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் கண்டனம்

பாபா ராம்தேவ்
News
பாபா ராம்தேவ் ( vikatan )

ஐ.எம்.ஏ சார்பில் ஆஜரான வக்கீல் அமர்ஜித் சிங் பல விளம்பரங்களைச் சுட்டிக்காட்டி, ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாபா ராம்தேவ் நிறுவனத்தால், இப்படி இழிவான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் என்றார்.

`பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ - உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஐ.எம்.ஏ சார்பில் ஆஜரான வக்கீல் அமர்ஜித் சிங் பல விளம்பரங்களைச் சுட்டிக்காட்டி, ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாபா ராம்தேவ் நிறுவனத்தால், இப்படி இழிவான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் என்றார்.

Published:Updated:
பாபா ராம்தேவ்
News
பாபா ராம்தேவ் ( vikatan )

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில், பாபா ராம்தேவ் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். `ஆங்கில மருந்துகள் சாப்பிட்டுதான் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்த மருந்துகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது' எனத் தெரிவித்தார்.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்
vikatan

இதற்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தது. `அலோபதி மருத்துவர்களையும் மருத்துவத்தையும் குறித்து அவதூறாகப் பேசியதற்கு எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால், ரூ.1,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என நோட்டீஸ் அனுப்பியது.

அத்துடன், நவீன மருந்துகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் செய்த அவதூறு பிரசாரத்தைக் குற்றம் சாட்டிய இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆகஸ்ட் 12-ல் ஐ.எம்.ஏ-வின் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

தடுப்பூசி இயக்கம் மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) மனு மீது, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவை பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்குத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

ஐ.எம்.ஏ சார்பில் ஆஜரான வக்கீல் அமர்ஜித் சிங், அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்களை தரக்குறைவாக விமர்சித்த பல விளம்பரங்களைக் சுட்டிக்காட்டி பேசினார். `நவீன மருந்துகளை உட்கொண்டாலும் மருத்துவம் செய்பவர்களே உயிரிழப்பதாக இந்த விளம்பரங்கள் கூறுகின்றன. ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் இப்படி இழிவான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது, பொது மக்களை தவறாக வழிநடத்தும். இந்தச் செயல்பாடுகள் தடையின்றி தொடர்ந்தால், அது மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை அலோபதி மருத்துவத்தின் மீது ஏற்படுத்தும்" என்றார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, `யோகா குரு ராம்தேவ் பாபாவுக்கு என்ன ஆயிற்று? அவர் யோகாவை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருவதால் அவரை மதிக்கிறோம். ஆனால், அவர் மற்ற மருத்துவ அமைப்பை விமர்சிக்கக் கூடாது.

ஆயுர்வேத மருத்துவம், அலோபதி மருத்துவத்தைவிட சிறந்த முறை என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா?

எல்லா மருத்துவர்களையும் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டும் வகையில், பிரமாண்டமான விளம்பரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. யோகா குரு ராம்தேவ், மருத்துவர்கள் மற்றும் பிற சிகிச்சை முறைகளைத் தவறாகப் பேசக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.