Published:Updated:

வங்கிப் பணியிலும் தமிழக மாணவர்களுக்கு செக்! கொந்தளிக்கும் மாணவர்கள்

வங்கிப் பணியிலும் தமிழக மாணவர்களுக்கு செக்! கொந்தளிக்கும் மாணவர்கள்
வங்கிப் பணியிலும் தமிழக மாணவர்களுக்கு செக்! கொந்தளிக்கும் மாணவர்கள்

வங்கிப் பணியிலும் தமிழக மாணவர்களுக்கு செக்! கொந்தளிக்கும் மாணவர்கள்

தமிழகத்தில் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்குத் தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் தமிழக மாணவர்களின் வாய்ப்புப் பறிக்கப்பட்டுள்ளதாக வங்கித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், "இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவாக 1,277வங்கி உதவியாளர் பணியிடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தமிழகப் பொதுத்துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்குத் தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டிருக்கிறது. பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குள் மாநில மொழித் தேர்வு நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில மொழித் தேர்வு நடத்தப்படாமல் புறக்கணித்து வருகிறார்கள்.

மேலும், பிராந்திய மொழித் தேர்வு புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். பிற மாநில இளைஞர்கள் அதிகளவில் பணியிடங்களுக்குத் தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால், வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் தமிழக மாணவர்கள் உரிமை பறிக்கப்படுகிறது. வேற்று மாநிலத்தவர் இங்கு அதிக அளவில் பணியமர்த்தப்பட்டால் பொதுமக்கள் வங்கிகளைத் தொடர்புகொள்வதிலும் சிக்கல் ஏற்படும். தமிழகத்தில் உள்ள 1,277 பணியிடங்களும் தமிழ் தெரிந்த தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தபால் மூலம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு