Published:Updated:

பெண் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு!- அசத்தும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்

பெண் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு!- அசத்தும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்
பெண் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு!- அசத்தும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு  நிதி உதவி வழங்கப்பட்டது.

பெண் குழந்தைகளின் நலனை பாதுகாத்திடும் வகையிலும், பாலின சமநிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் 'ஜனனி சுரக்‌ஷா யோஜனா' திட்டத்தின் கீழ் 19 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ 700 -க்கான காசோலை மற்றும் பிறப்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் நடராஜன் வழங்கினார்.

மேலும் வரும் காலங்களில் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்களை பெற வசதியாக புதிய வங்கி கணக்கு துவங்கி வைக்கப்பட்டு அதற்கான வங்கிக் கணக்கு புத்தகங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன், சமூக நல அலுவலர் குணசேகரி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட மருத்துவமனை அலுவலர் ஞானகுமார், வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.