கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப்பின் பணமில்லாப் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊக்க நடவடிக்கைகள் காரணமாக பிளாஸ்டிக் பணம் மற்றும் இ-வாலட்டுகள் போன்றவை பிரபலமாகி வருகின்றன. இவற்றில், முதலில் செலவு செய்துவிட்டு, பின்னர் அதற்குரிய பணத்தைக் கட்டலாம் என்பதுடன், தள்ளுபடிகள் மற்றும் பரிசுகள் கிடைப்பதால் கிரெடிட் கார்டுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இன்றைக்குப் பலருக்கும் தோன்றுகிறது.

சந்தையில் பலவகையான கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன என்றாலும், உங்களது செலவழிக்கும் பழக்கம், கார்டின் பயன்கள் மற்றும் அதற்கான கட்டணம் போன்றவற்றைக் கட்டாயம் பரிசீலனை செய்து, சரியான கிரெடிட் கார்டினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சரியான கிரெடிட் கார்டினை எப்படித் தேர்வு செய்வது? இதுகுறித்த அனைத்து அம்சங்களையும் பார்ப்போம்.

கிரெடிட் கார்டுக்கான கட்டணங்கள்

சில கிரெடிட் கார்டுகள் ஆண்டுக் கட்டணம் அல்லது புதுப்பித்தல் கட்டணம் போன்ற கட்டணங்கள் எதுவுமே இல்லாமல் இலவசமாகவே கிடைக்கின்றன. மற்ற கார்டுகளுக்கு, இவற்றில் ஏதாவது ஒன்றுக்கோ அல்லது இரண்டுக்குமேகூட கட்டணம் விதிக்கப்படுகிறது.

சில கார்டுகளுக்கு முன்னரே வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் கட்டணத்தில் விலக்கும் அளிக்கப்படுகிறது. அடிப்படையில், ஒரு கார்டிலிருந்து கிடைக்கும் அதிகபட்ச வெகுமதியே அதன் ஆண்டுக் கட்டணமாகத்தான் இருக்கக்கூடும்.

இலவச கிரெடிட் காலம் மற்றும் அபராதத்தைத் தாண்டிய நிலுவைத் தொகைக்கான வட்டி உள்ளிட்டவை மற்ற கட்டணங்களாகும். எனவே, ஒரு கார்டின் பூஜ்ய நிலுவைத் தொகைக்கு முன்ன தாகத் தரப்படும் வெகுமதிக்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இலவச கிரெடிட் காலத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே ஒரு கிரெடிட் கார்டை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், இலவச கிரெடிட் கார்டுகள் நிச்சயம் பயனளிக்கக்கூடியதாகவே இருக்கும். நீங்கள் எந்த கார்டை வாங்கினாலும், கசப்பான அனுபவங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க, அதன் அனைத்து விதமானக் கட்டணங்கள், அபராதங்கள், வட்டி விகிதம் போன்றவற்றைச் சரிபார்த்தபின்னரே வாங்கவேண்டியது மிகமிக அவசியம். உதாரணமாக, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுவதற்குப் பயன்படுத்தினால், அதற்கு நீங்கள் சர்சார்ஜ் செலுத்த வேண்டியதிருக்கும்.

செலவுப் பழக்கம்

நீங்கள் விரும்புகிற வாழ்க்கைமுறையை அடைவதற்கு உதவக்கூடிய கிரெடிட் கார்டை நீங்கள் வாங்கலாம். உதாரணமாக, நீங்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்பவராக இருந்தால், இலவசத் தங்கும் விடுதி, விமான டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி, ஆன்லைனில் பதிவு செய்வதற்கான வெகுமதிப் புள்ளிகள் (ரிவார்டு பாயின்ட்டுகள்) போன்றவை உங்களுக்குக் கிடைக்க உதவும் டிராவல் கார்டை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம்.

கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சில நிறுவனங் களுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும்கூட, சில பிராண்டுகளின் குறிப்பிட்ட பொருள்களை வாங்கினால், அவற்றுக்கு வெகுமதிகள் மற்றும் பலன்களை அளிக்கின்றன.

மேலும், பிராண்ட் மீதான விசுவாசத்துக்கான பலன்களை விரைவாக அளிக்கும் பிராண்டு களுடன் இணைந்த கிரெடிட் கார்டுகளும் உள்ளன. உதாரணமாக, நீங்கள் விமானத்தில் அடிக்கபடிப் பயணம் செய்பவராக இருந்தால், பிராண்டுடன் இணைந்த விமான நிறுவனம் அளிக்கும் சலுகைகளை நீங்கள் பெற முடியும். இந்த கார்டுகளால், வரையறுக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி நீங்கள் பொருள்களை வாங்கும்போது, உங்களுக்கு அளிக்கும் தள்ளுபடிகள் மூலம் கூடுதல் பொருள்களையோ அல்லது பெட்ரோலையோ உங்களால் பெற முடியும்.

இதேபோன்று, ஒரு பிராண்டுக்கு நீங்கள் விசுவாசமாக இருந்து, அந்த பிராண்ட் பொருளை குறிப்பிட்ட சில கடைகளில் தொடர்ந்து வாங்கும்போது கூடுதல் பலன்களை அளிக்கக்கூடிய கார்டையும் நீங்கள் வாங்க முடியும்.

அதேசமயம், நீங்கள் எப்போதாவது செலவழிக்கக்கூடிய வராக இருந்தால், எவ்வித சேர்க்கைக் கட்டணமோ அல்லது குறைந்தபட்ச வெகுமதிகளோ இல்லாத எளிமை யான கிரெடிட் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.

வட்டி

பொதுவாக, கிரெடிட் கார்டு களில், வட்டி இல்லாத காலத்துக்குப் பின்னர் விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, ஒரு கிரெடிட் கார்டை வாங்குவதற்குமுன் இணையதளத்துக்குச் சென்று, சந்தையில் கிடைக்கும் கார்டுகளுக் கான வட்டி விகிதங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து, குறைந்த வட்டியுடன் கூடிய கார்டுகளை வாங்குவது சிறந்தது. மேலும், வட்டி இல்லாத கால அவகாசம் எத்தனை நாள்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜாமீன் Vs ஜாமீன் அல்லாத கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகள், உங்கள் கார்டுக்கு எதிராகப் பிணை அளிக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து ஜாமீன் மற்றும் ஜாமீன் அல்லாதது என இரண்டு வகையிலும் கிடைக்கின்றன.
ஜாமீன் கார்டுக்கான கடன் வரம்பு என்பது பிணையாக இருக்கும் பணத்தின் அளவைப் பொறுத்து, அது வங்கி எஃப்.டி-யாகக்கூட இருக்கலாம். அதுபோன்ற கார்டு, கடன் வரலாறு இல்லாத எவருக்கும் உதவியாக இருப்பதுடன், ஜாமீன் இல்லாத கார்டுக்குத் தகுதியற்றதாகவும் இருக்கலாம். ஒருமுறை உங்களுக்குக் கடன் வரலாறு இருந்தாலே, நீங்கள் ஜாமீன் இல்லாத கார்டைத் தேர்வு செய்ய முடியும். ஏனெனில், அதற்குப் பிணை எதுவும் தேவையில்லை.

கடன் வரம்பைச் சரிபாருங்கள்

ஒரு கிரெடிட் கார்டுக்கு அளிக்கப்படும் கடன் வரம்பு என்பது, சம்பந்தப்பட்ட தனிநபரின் வருவாய்த் திறன், கடன் வரலாறு போன்றவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படும். அதிகமான கடன் வரம்பு இருந்தால், அது சீரான கடன் பயன்பாட்டு விகிதத்தைப் பராமரிக்க உங்களுக்கு உதவும்.

கடன் பயன்பாட்டு விகிதம் என்பது, உங்களுக்கான மொத்தக் கடன் வரம்புடன் ஒப்பிடும்போது இருக்கும் நிலுவைத் தொகையாகும். அதிகமான கடன் பயன்பாட்டு விகிதம் இருந்தால், அது அடிக்கடி கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். இதனால் உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.

எனவே, கிரெடிட் கார்டு மூலமான உங்களது செலவுகள், ஒரு நல்ல கடன் பயன்பாட்டு விகிதத்தைப் பராமரிக்கும் விதத்தில், உங்களது மொத்தக் கடன் வரம்பில் 30 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்வதே கிரெடிட் கார்டைச் சிறப்பாகப் பயன்படுத்தும் முறையாகும். எனவே, அதிக கடன் வரம்பை அளிக்கக்கூடிய கிரெடிட் கார்டையே தேர்வு செய்யுங்கள்.

கிரெடிட் கார்டினை நம்மைத் தேடி வந்து தரும் காலம் இது. இப்படித் தருவதினாலேயே நமக்குப் பொருத்தமில்லாத கார்டுகளை நாம் வாங்கிவிடக் கூடாது. நமக்குச் சரியாக இருக்கும் கார்டுகளை மட்டுமே நாம் வாங்க வேண்டும்!

- அதில் ஷெட்டி, சி.இ.ஓ, பேங்க் பஜார்

தமிழில்: பா.முகிலன்

படம் : ஜெ.வேங்கடராஜ்

பழைய கிரெடிட் கார்டுக்குப் பதில் புதிய கிரெடிட் கார்டு!

உங்களிடம் உள்ள கிரெடிட் கார்டினை இந்த ஆண்டு முடிவதற்குள் மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆர்.பி.ஐ உத்தரவிட்டிருக்கிறது. தற்போதுள்ள கார்டுகள் காந்த சக்தி கொண்ட ஸ்ட்ரிப்பினால் இயங்குவதாக உள்ளன. இதை இ.எம்.வி. கொண்ட கார்டாக மாற்ற வேண்டும் என ஆர்.பி.ஐ உத்தரவிட்டிருக்கிறது. இ.எம்.வி என்பது யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா என்பதன் சுருக்கம் ஆகும். வங்கிகள் பழைய கார்டினை வாங்கிக்கொண்டு புதிய கார்டினை இலவசமாகவே தருகிறது. இன்றைய நிலையில், இந்தியா முழுக்க 39.4 மில்லியன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக மாற்றிக்கொள்வது நல்லது!