Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29

ஓவியங்கள்: ராஜன்

வாஷிங்டன் டி.சி

அலுவலகத்துக்கு வந்து டோனியிடம் நடந்த கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோது ஏட்ரியனின் மனதில் மறுபடியும் மறுபடியும் ஒரு கேள்வி எழுந்துகொண்டேயிருந்தது. ‘‘க்ளோரியா, நிக்கிக்கு மிகவும் நெருக்க மாக, அதுவும் காட்டன் ட்ரெயில் விஷயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கும்பட்சத்தில் அவள் தங்களால் தத்தெடுக்கப்பட்டவள் என்பதை ஜில்லியன் ஏன் சொல்ல வேண்டும், ஏன் அதை நிக்கி சொல்லியிருக்கக் கூடாது?’’

‘‘அவள் சந்தேகத்துக்கு உரியவளா? அப்படி அவள் இருந்தால், உங்களிடம் ஏன் எல்லா வற்றையும் சொல்ல வேண்டும்?”

‘`அவள் முழுக் கதையையும் நம்மிடம் சொல்கிறாளா என்பது எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. எப்படியிருந்தாலும், அவளைக் கைது செய்வது குறித்தான விஷயங்களைப் பாருங்கள். அவள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த பதிவு இருக்க வேண்டும்.’’ அவர் மேஜைக்குச் சென்று குவியலாகக் கிடந்த காகிதங்களில் சிலவற்றைப் புரட்டிக்கொண்டே, ‘‘தடயவியல் அறிக்கை வந்துவிட்டதா?’’ எனக் கேட்டார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29

‘`ஆமாம். சிறிது நேரத்துக்குமுன் வந்தது. நான் அதைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.’’

‘`அதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது?’’

‘`நம் நண்பர் ஜோஷ் ஒரு சிக்க லான ஆசாமி போலத் தெரிகிறது. அவருடைய ஹார்ட்டிஸ்கில் தடை செய்யப்பட்ட மருந்துகளை/போதைப் பொருள்களை காட்டன் ட்ரெயிலில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பட்டியலும் அதில் இருக்கிறது. அது இந்த நாட்டில் போதை மருந்து வியாபாரிகளின் விற்பனைக்கே உலை வைத்துவிடும்.’’

‘`அங்கே எப்படிச் செல்ல முடிந்தது?” சுவராஸ்யமான தகவலுக்காக ஏட்ரியன் காதுகள் காத்துக்கொண்டிருந்தன.

‘`நமது நண்பர்தான் காட்டன் ட்ரெயிலின் அட்மின். அவர் தான் பேக்-எண்ட் முழுவதையும் – விற்பனையாளர்கள், வாடிக்கை யாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வது, இணையதளத் தில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது என அனைத்தையும் நிர்வகித்து வருபவர்.’’

‘‘அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’’ 

‘`அவருடைய லேப்டாப்பில் இருந்து குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு டார் (TOR) நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, அவர் நுழைந்திருக் கிறார். அட்மினாக இல்லாத பட்சத்தில், யாரும் காட்டன் ட்ரெயிலின் அந்தப் பகுதிக்குள்  நுழைய முடியாது. அவர் அந்த இணையதளத்தில் இருக்கக்கூடிய `பக்ஸ்’ பற்றி விளக்கமான குறிப்பு களையும் எழுதி வைத்திருக்கிறார். அவருடைய டைரியில் நாம் கண்டுபிடித்த, கிறுக்கியிருந்த பிட்காயினின் பப்ளிக் கீ பற்றியும் இது விளக்கமாகச் சொல்கிறது. அவர்கள் எல்லாம் காட்டன் ட்ரெயில் மூலம் செயல்படும் வணிகர்கள். வாடிக்கையாளர் களுக்குப் பொருள்களை டெலிவரி செய்தபின் அவர்கள் ஏற்கெனவே செலுத்தியிருந்த தொகையை அந்தப் பொருள் களை சப்ளை செய்த வணிகர் களுக்கு இந்த `கீ’களின் உதவி யுடன் நமது நண்பர் ட்ரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்.அவர் மட்டும் ஜில்லியன் வீட்டில் பிடிபடாமல் இருந்திருந் தால், நாம் அவர் வீட்டிற்குச் சென்று அவருடைய எல்லா விஷயங்களையும் கைப்பற்றி யிருக்க முடியாது.’’

அதைக் கேட்டு தலையசைத்த ஏட்ரியன், ‘‘இதுதவிர, வேறு ஏதாவது நமக்குத் தெரியுமா?”

‘`ஜோஷ் பணம் செலுத்துவதில் சில தவறுகளையும் செய்திருக்கிறார். அவருக்காக வேலை பார்த்த சிலர் பணத்தோடு தலைமறைவாகியிருக் கிறார்கள். ஆனால், பணத்தை உடனடியாகத் தரும்படி அவரை நெருக்கியிருக்கிறார்கள். மிகவும் கடுமையான இரண்டு மெயில்கள் அவரது லேப்டாப்பில் இருந்தன. இந்த நிலையில், அவர் ஏன் நிக்கி டான் வீட்டிற்குச் சென்றார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவருகிறோம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29

‘`அவர் பணத்தை எங்கே டெலிவரி செய்தார்?”

‘`டொமினிக்கன் ரிபப்ளிக். நம்மிடம் பெயர் எதுவும் இல்லை; ஆனால், முகவரி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பணத்தைக் கொடுக்க வேண்டும்.’’

ஏட்ரியன் பதில் எதுவும் பேச வில்லை. அவர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

‘`டானின் வீட்டை நாம் சென்ற டைந்ததிலிருந்து இரண்டு கேள்விகள் என் மனதிற்குள் எழுந்துகொண்டே இருக்கின்றன. கொள்ளை நடந்த அன்று நிக்கி டான் அந்த கஃபேயில் என்ன செய்துகொண்டிருந்தார், ஜோஷ் ஏன் அவருடைய விரலைத் துண்டிக்க வேண்டும்?” என்று கேட்ட ஏட்ரியன் புகைப் படத்திலிருந்த இமேஜ்களை யெல்லாம் மீண்டும் ஒருமுறை கவனமாகப் பார்த்தார். இறைச்சி வெட்டக்கூடிய கத்தியின் இமேஜும் அதில் இருந்தது. வெட்டிய விரலில் மோதிரம் இருந்தது. அவர் அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, டோனியின் பக்கம் திரும்பி, ‘`அந்தத் தடயவியல் அறிக்கையைக் காண்பியுங்கள்” என்று கேட்டார்.

அறிக்கையில் மோதிரம் பற்றிய குறிப்பு இருந்தது. அது ஒயிட் கோல்டால் ஆனது. 22 கேரட். எந்த பேட்டனும் இல்லை. கைவேலைப்பாடு செய்யப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட மோதிரத்தின் இமேஜும் இணைக்கப்பட்டிருந்தது. தொடரலை போன்றிருந்த அந்த மோதிரம் ஏதாவது பழமையான கருவியால், அமெரிக்காவுக்கு வெளியே செய்யப்பட்டிருக்க வேண்டும் என உணர்த்தியது.

மோதிரத்தின் உட்பகுதியை வெறும் கண்களால் பார்க்க முடியவில்லை. ஆனால், அதில் நீண்ட ஆல்பா நியூமெரிக் கிலான ஒரு குறியீடு இருப்பதுபோல தெரிந்தது. ஏட்ரியன் சிந்தித்துக்கொண்டே அவருடைய மேஜையிலிருந்த போனில் இருந்து ஏதோவொரு எண்ணுக்கு போன் செய்தார்.

‘`ஹாய், டான் மல்லாய் (Dan Malloy).’’ மூக்கிலிருந்து பேசுவது போன்ற குரல் ஒன்று கேட்டது. டான் CRRU (Cryptanalysis and Racketeering Records Unit) அமைப்பின் தலைவர். இது            எஃப்.பி.ஐ-யின் கோட் க்ராக்கிங் பிரிவாகும்.

‘‘டான், பேசுவதற்கு இது சரியான நேரமா?”

‘`எந்த நேரமும் உனக்குச் சரியான நேரமில்லை, சன் ஆஃப் எ பிட்ச், என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’’

‘`கழுத்தை நெரிக்கும் வேலை.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29

‘`நான் ப்ரிக் தி ப்ரிக்-ஐ (Brick the Prick) இரண்டு நாள்களுக்கு முன்பு சந்தித்தேன். உன் மேல் வெறுப்பாக இருக்கிறார்!”

‘`ஏன்?’’

‘`ஜில்லியன் டானின் கொலை வழக்கின் அடிநாதத்தைக் கண்டுபிடிக்க அவரிடமிருக்கும் ஒரே திறமையான அதிகாரி நீதான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தாமதம் ஆகிக் கொண்டிருப்பதைத்தான் அவரால் பொறுக்க முடியவில்லை, அவருக்கு வேறு சாய்ஸும் இல்லை’’ என்றார்.

‘`டான் மல்லாய், நிக்கி டானின் மோதிரத்தில் இருந்த ஒரு ஆல்பா நியூமெரிக் குறியீட்டை உங்களுக்கு அனுப்புகிறேன். அது என்ன வென்று எனக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.’’

‘`நான் முயற்சி செய்து பார்க்கிறேன். ஏதேனும் தகவல் இருந்தால் உடனே சொல்கிறேன்’’ என்று  சொல்லிவிட்டு, போனை வைத்தார்.

டான் மீண்டும் அழைப்பதற்கு அதிக நேரமாக வில்லை. ஏட்ரியனும், டோனியும் கேட்க வேண்டும் என்பதற்காக போனில் இருந்த ஸ்பீக்கர் `ஆன்’ செய்யப் பட்டது. 

‘`ஏட்ரியன், இது பிட் காயின் வாலட்டின் பிரை வேட் கீ’’ எனக் கூறினார்.

‘`ம்ம்ம்… நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், வழக்கமாக இருக்கும் எண்களைவிடக் குறைவாக இருந்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது.’’

‘`பிட்காயினை உபயோகிப் பவர்கள் அவர்களுடைய பிரைவேட் கீ-யை ரகசியமாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். நிக்கி டான் அதிலிருந்து ஒருபடி மேலே சென்று தனது மோதிரத்தில் பொறித்து வைத்திருக்கிறார்.”

‘`இப்படி செய்தால், மற்ற யாருக்காவது இந்த கீ எளிதாகக் கிடைத்துவிடுமே’’ என்று ஏட்ரியன் கேட்டார்.

‘`நிக்கி டான் முழுக் குறியீட்டையும் மோதிரத் தில் பொறித்திருக்கவில்லை. மோதிரத்தில் 24 எழுத்துகள்தான் இருந்தன. வழக்கமாக, பிட்காயின் பிரைவேட் கீ குறியீடுகள் 27 முதல் 34 எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும்’’ என்றார்.

‘`அப்படியென்றால் எத்தனை எழுத்துகளை நாம் மிஸ் பண்ணுகிறோம் என்பது நமக்குத் தெரியாது, அப்படித்தானே?”

‘`நிக்கிக்கு மட்டும்தான் அது தெரியும். எனவே, மோதிரத்தை யாரும் திருடினால்கூட அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நம்முடைய `டிகிரிப்ஷன்’ கருவியை வைத்து முழுக் குறியீடையும் ஏறக்குறைய ஒரு வாரத்தில் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கான புரோக்ராமை ரன் செய்ய அவ்வளவு கால அவகாசம் தேவையானதாகும். சாதாரண மனிதர்களால் அவர்கள் வாழ்நாளுக்கும் மிஸ் ஆன எழுத்துகளைக் கண்டுபிடிக்க முடியாது.’’

‘`தாங்க்ஸ், டான்’’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்த ஏட்ரியன், டோனியின் பக்கம் திரும்பி, ‘‘டோனி, இந்த மோதிரத்துக்காகத்தான் நிக்கி தாக்கப்பட்டிருக்க வேண்டும். அவருடைய விரல் துண்டிக்கப்பட்டதும் அதற்காகத்தான்’’ என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29

டோனிக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு இருந்தது. ‘`அவரைக் கொலை செய்யும் அளவுக்குப் போவ தென்றால், அவர் பிட்காயின் வாலெட்டில் அதிகமான நிதியை முதலீடு செய்திருக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது’’.

‘`அவரைக் கொல்ல முயற்சி செய்தது காட்டன் ட்ரெயிலின் அட்மின். காட்டன் ட்ரெயில் பற்றி விசாரிப்பதற்கு நம்மிடம் போதுமான தகவல் இருக்கிறது என நினைக்கிறீர் களா…’’ சில நிமிட சிந்தனைக்குப் பிறகு அவர், ‘‘அதை முழுவதுமாக மூடுவதற்கான சாத்தியம் இருக்கிறதா?” எனக் கேட்டார்.

‘`கண்டிப்பாக, நம்மால் முடியும்’’ என டோனி பதிலளித்தார். ‘`ஆனால், காட்டன் ட்ரெயிலை நெருங்குவது இயலாத காரியம். அதை யார் இயக்குகிறார்கள் அல்லது எங்கிருந்து அது இயங்கி வருகிறது என்பது நமக்குத் தெரியவில்லை. இந்தத் தகவல்களைப் பெற முடியுமென்றால், அது நிச்சயமாக ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.’’

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்