வெகுகாலமாகவே ஆர்.டி எனப்படும் தொடர்வைப்புக் கணக்கு நீண்டகால சிறுசேமிப்புத் திட்டங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வந்தது. வங்கி வட்டி விகிதங் களின் வீழ்ச்சி, வட்டியில் வருமான வரி பிடித்தம் கட்டாயமாக்கப்பட்டது மற்றும் எஸ்.ஐ.பி எனப்படும் மாதாந்திர மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வளர்ச்சி போன்ற காரணங்களினால் தொடர் வைப்புத் திட்டங்களின் மீதான ஈர்ப்பைக் குறைந்துள்ளது. அதேசமயம், வங்கி வட்டி விகிதங் கள் சற்றே உயர்ந்துவரும் சூழ்நிலையில், வருமான வரி குறைவாக உள்ள (அல்லது இல்லாத) சிறு முதலீட்டாளர்களுக்கு இன்னும்கூட தொடர்வைப்புத் திட்டங்கள் பயனுள்ளவையாகவே உள்ளன.

முதிர்வுக் காலம்

எத்தனை வருடங்கள் கழித்து முதிர்வுத் தொகை தேவைப்படும் என்பதைப் பொறுத்து ஆர்.டி கணக்கை 1 முதல் 10 ஆண்டுகள் வரை வைத்திருக்க முடியும். சேமிப்பானது வீடு வாங்குவதற்கா அல்லது பிள்ளைகளின் மேற்படிப்பிற்கா என்பது போன்ற நீண்ட கால இலக்குகளில் நல்ல தெளிவு இருப்பது நலம். நவீன சமூகத்தின் பெருந்தேவையான வருடாந்திரக் கல்வி கட்டணங்களைச் செலுத்த ஓராண்டு ஆர்.டி திட்டங்களில் பங்குபெறுவோரும் உண்டு.

மாதாந்திர சேமிப்புத் தொகை முழுமைக்கும் ஒரேவொரு கணக்காகத் தொடங்காமல், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்.டி திட்டங்கள் (வெவ்வேறு முதிர்வு காலங்களுக்கானது) வைத்திருப்பது வெவ்வேறு இலக்குகளைத் தனித்தனியாக அடைய உதவும். மேலும், அவசர செலவுக்காக பகுதி பணம் மட்டுமே தேவைப் பட்டால் ஒரு சில கணக்குகளை மட்டுமே முடிவுக்குக் கொண்டுவந்து வங்கியின் அபராதங்களில் இருந்து தப்ப உதவும். குறுகிய காலத் தேவைக்காக மட்டுமே பணம் எடுக்க வேண்டியிருந்தால், ஆர்.டி இருப்பில் 80-90% வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கிக் கணக்கில் உரிய பேலன்ஸ்

ஆர்.டி-யில் மாதந்தோறும் வரவு வைக்க, நமது வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்துகொள்ளும்படி வங்கிகளுக்கு எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வழங்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில், வங்கிக் கணக்கில் உரிய தொகை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தவறினால் அபராதம் மற்றும் தவணை தவறியதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டியதிருக்கும். சில சமயங்களில், வங்கிக் கணக்கில் உரிய பேலன்ஸ் இருந்தாலும் சில தொழில்நுட்ப காரணங்களால், தவணைத் தொகை பிடித்தம் செய்யாமல் போக வாய்ப்பு உள்ளது. மாதந்தோறும் நமது கணக்குகளைச் சரிபார்த்து, பிடித்தம் தவறியிருந்தால் வங்கி களுக்குத் தெரிவிப்பது நல்லது.

முதிர்வு விவரம்

சில அவசர அலுவல்கள் அல்லது வெளியூர் பயணங்கள் காரணமாக, நம்மால் முதிர்வுத் தேதியன்று ஆர்.டி கணக்குத் தொகையை உபயோகப்படுத்த முடியாமல் போய்விடலாம். எனவே, கணக்கைத் தொடங்கும்போதே ஆர்.டி கணக்கு முடிவடைந்தவுடன் முதிர்வுத் தொகையைப் புதிய வைப்புத் தொகையாக மாற்றம் செய்வதா அல்லது சேமிப்புக் கணக்கில் சேர்ப்பதா என்ற முடிவை வங்கிக்கு எழுத்துப் பூர்வமாக வழங்குவதன் மூலம் முதிர்வுத் தொகை வட்டி வரவில்லாமல் வங்கியில் தேங்கி இருப்பதைத் தவிர்க்க உதவும்.

பயனாளியை முன்மொழிதல்

வங்கிக் கணக்குகளில் நாமினேஷன் மிகவும் அவசியமானது. ஏதேனும் தவிர்க்க முடியாத அசம்பாவிதம் நடைபெறும்பட்சத்தில், குடும்பத்தினர் அலைச்சல் இல்லாமல் வைப்புத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

15 G/H படிவங்கள்

ஏற்கெனவே சொன்னபடி, ஆர்.டி வட்டியும் வருமான வரி பிடித்தத்திற்கு உட்பட்டவைதான். வருமான வரி பிடித்தத்தைத் தவிர்க்க வேண்டு மென்றால், ஆர்.டி கணக்குத் தொடங்கும்போதும், அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டின் ஆரம்பத்திலும் 15 G/H படிவங்களை வங்கியில் சமர்ப்பிப்பதுடன், அதற்கான ஒப்புகை நகலையும் பெற்றுக்கொள்வது நல்லது.

- சுமதி மோகனப் பிரபு