Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

மும்பை

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33வருணும், கேம் மேம்பாட்டுக் குழுவும் மீட்டிங்கில் இருந்த அறைக்குள் கோபத்துடன் ஆதித்யா நுழைந்தார். அறைக்குள் பதினைந்துபேர் இருப்பதைப் பார்த்தவுடன் தனது கோபத்தைச் சிறிது தளர்த்திக்கொண்டு நார்மல் நிலைக்கு வர முயன்றார். “இந்தக் கூட்டம் முடிந்தபின் என்னை வந்து பார்க்க முடியுமா?” எனக் கேட்டார்.

“யெஸ், டாட். ஏதாவது அவசர வேலையா? இந்தக் கூட்டத்தை இப்போதே முடித்துக்கொள்கிறோம். சேவை சம்பந்தமான சில பிரச்னைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.”

“சேவை?”

“யெஸ். டவுன்ஸ்விலே மொபைல் ஆப் செயலில் இருக்கும்போது போனில் இருக்கும் மற்ற அம்சங்கள் எல்லாம் மிகவும் மெதுவாகச் செயல்படுவதாக நமக்குப் புகார் வந்திருக்கிறது.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

“அப்படி எத்தனை புகார்கள் வந்திருக்கின்றன?”

“அதிகமாக இல்லை, மூன்றுதான். ஆனால், அது நம் கட்டுப்பாட்டை மீறி பெரிதாக ஆவதற்கு முன்பாகவே தீர்வு காணலாம் என நினைத்தோம். இது க்ரேட் – 3 புகார்தான். மிதமான விளைவைத்தான் ஏற்படுத்தும். இந்த வாடிக்கை யாளர்கள் செலுத்திய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதோடு ஆப்பையும் நீக்கி விடும்படி கேட்டுக்கொள்ள இருக்கிறோம். நாம் இந்தப் பிரச்னையைச் சரி செய்தபின், அவர்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கலாம்” என்றான்.

“எனக்கும் சரி என்றேபடுகிறது” என்றார்.

ஆதித்யா அங்கிருந்து சென்ற பதினைந்து நிமிடங்கள் கழித்து ஆதித்யாவின் அலுவலகக் கதவை வருண் தட்டினான்.

“வருண், என்னிடம் சந்தீப் இன்று காலையில் பேசினார். `அதிகமாகத் தரவிறக்கம் செய்யப் பட்ட’ பட்டியலை மாற்றுவது குறித்து எப்படி உன்னால் நினைத்துப்பார்க்க முடிந்தது?”

“டாட், இது வெறும் மார்க்கெட்டிங் கிமிக்தான். நம்முடைய புரோக்ராமில் சில நகல்களைத் தரவிறக்கம் செய்வதற்கு பாட்ஸ்(bots)-ஐ பயன்படுத்துகிறோம்; அதனால் விற்பனையின் அளவு அதிகமாகி விட்டது போல தோற்றமளிக்கும். `அதிகமாகத் தரவிறக்கம்’ செய்யப் பட்ட பட்டியலில் சில நாள்கள் இருந்தபின், நாம் பாட்ஸை நீக்கி விடலாம். இது உதவும் ஏனென்றால்…”

“இது எப்படி உதவும் என்று எனக்குத் தெரியும், வருண்!” என ஆதித்யா கோபமாகச் சொன்னார். “நான் இந்தத் தொழிலை சில விதிமுறைகள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் நடத்தி வருகிறேன் என்பதை நீ அவசியம் உணர வேண்டும். குறைந்த அளவே வெற்றியாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சியடைபவன் நான். என்னைப் பார்த்து கைநீட்டி யாரும் தவறான வழியில் வெற்றிய டைந்ததாக கூறாமல் இருப்பதே எனக்கு ஆறுதல். ஆனால் இப்போது என்னுடைய மகனான நீயே விதிகளைப் பின்பற்றவில்லை, நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

அவர் எந்த விஷயத்தால் தாக்குண்டு இருக்கிறார் என வருணுக்குத் தெரியவில்லை. முதல் தடவையாக, வருணை அவர் இப்படி எடுத்தெறிந்து பேசுகிறார். அவன் அறைக்கு வெளியே பார்த்தான். சந்தீப் வராந்தாவில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

“நீ மிகவும் நேர்மையுடனும், கெளரவத்துடனும் இந்தத் தொழிலை நடத்துவாய் என்கிற நம்பிக்கையில்தான் இதைக் கையாள உன்னை அனுமதித் தேன். என்னுடைய ஆப் விற் பனையை உயர்த்துவதற்காக நான் இந்த பாட்ஸ் வேலையில் எல்லாம் இறங்கமாட்டேன். நம் முடைய அனைத்துத் தொழில் களிலும் நாம் விதிகளுக்கு இணக்கமாகச் செயல் படுகிறோமா என்பதை மேற்பார்வையிட சந்தீப்பை நியமித்திருந்தேன். கேமிங் பிசினஸில், இதுகுறித்து அவரை அதிகமாகக் கவனம் செலுத்துமாறு சொல்லவிருக் கிறேன்” என்றார்.

“சந்தீப் அங்கிள் மேற்பார்வை யிடுவதில் எனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை” என்றான்.

நார்மல் நிலைமைக்குத் திரும் பிய ஆதித்யா, “வருண், வெற்றி என்பது டாலர் சம்பாதிப்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப் படுவதில்லை. உன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் நீ என்ன வேறுபாட்டை ஏற்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் அளவிடப்படும்” என்றார்.

“யெஸ், டாட்.”

வருண் அறையைவிட்டு வெளியேறினான்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

“பாட்ஸை எல்லாம் இப்போதே செயலிழக்க செய்துவிடு” என மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

சந்தீப் இன்னும் வெளியிலேயே இருந்தார். வருண் திரும்பி அவனது அறையை நோக்கிச் செல்லும்போது அவரைப் பார்த்தானேயொழிய வேறெதுவும் சொல்லவில்லை.

வாஷிங்டன் டி.சி

மாலை மணி ஆறு. டானின் வீட்டிற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு ஏட்ரியன் அவருடைய வீட்டிற்குள் சென்றார்.

ஏட்ரியன் வருவதைப் பார்த்த வுடன் டான், “மாஜிக் மஷ்ரூம் பற்றி கேட்டிருக்கிறீர்களா?” எனக் கேட்டார்.

“யெஸ், ஆனால் அதைப்பற்றி நான் இதுவரை கேள்விப்பட்ட தில்லை.”

“ஏட்ரியன், நீங்கள் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த உத்தியோகத்தில் இருந்தால் நீங்கள் எந்தவொரு போதை மருந்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது. மாஜிக் மஷ்ரூம்ஸ் அல்லது                 ஸ்ரூம்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், மூட் மற்றும் நடத்தை களில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.”

“ட்ர்ப்பிங் பற்றி கேள்விப்பட்டிருக் கிறேன். ட்ரக் தாக்கத்தினால் ஒழுங்கற்ற நிலையில் இருப்பது.”

“ஷ்ரூமெரி பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?”

“யெஸ். அது என்ன?”

“ஷ்ரூமெரி என்பது சட்டத்துக்கு உட்படாத மஷ்ரூம்களுக்கான ஒரு இணையத்தளமாகும். பொழுதுபோக்கு சைக்கோட்ராபிக் ட்ரக்மீது விருப்பம்கொண்ட ஏராளமானவர்கள் இந்த இணையத்தளத்துக்குச் செல்வதுண்டு. மாஜிக் மஷ்ரூம்ஸை எளிதாகப் பயிரிட முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ஷ்ரூமெரிக்குச் சென்று யோசனை கேட்பதுண்டு.”

“எட்டு மாதங்களுக்கு முன்பு, `Altoids’ என்கிற பெயர் கொண்ட ஒரு பயன்பாட்டாளர் காட்டன் ட்ரெயிலை புரமோட் செய்வதற்காக ஷ்ரூமெரியில் பதிவொன்று இட்டிருக்கிறார்.”

ஏட்ரியனிடம் எந்தவித அசைவும் இல்லை. அவரை நோக்கி என்ன வந்து கொண்டிருக்கிறது என அவருக்குத் தெரியவில்லை.

டான் மேசையின் மேலிருந்த பேப்பர் குவியலின் ஊடேயிருந்து ஒரு சில பேப்பர்களை எடுத்து கண்ணாடி அணிந்துகொண்டு அதைப் படிக்க ஆரம்பித்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

`காட்டன் ட்ரெயில் என்கிற இந்த இணையத்தளத்தை நான் எதிர்கொள்ள நேரிட்டது. இது மறைக்கப்பட்ட TOR சேவை யாகும். இதை உபயோகித்து சுலபமாக எதையும், வாங்கவும் விற்கவும் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை நான் வாங்கலாமென எண்ணுகிறேன். ஆனால் இதைப் பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பரிந்துரை செய்யமுடியுமா? இதை நான் Cottontrail420.wordpress.com வாயிலாகத் தெரிந்துகொண்டேன். உங்களிடம் TOR browser இருந்தால் அது உங்களை உண்மையான வலைதளமான http://tydgccykixpbu6uz.onion-க்கு இட்டுச் செல்லும். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லவும்...”  டான் அந்தப் பேப்பரை ஏட்ரியனிடம் கொடுத்தார். ஏட்ரியன் அதைப் படித்துக் கொண்டிருக்கும்போது டான் அவருடைய கணினியில் ஷ்ரூமெரி இணையத்தளத்தில் லாக்-ஆன் செய்தார். `தேர் யூ கோ’ என்று சொல்லிக் கொண்டே ஏட்ரியன் பக்கம் கணினியின் திரையைத் திருப்பினார். இந்த ‘Altoids’ என்கிற பெயரில் இருப்பவன் உங்களில் ஒருவராக இருக்கலாம் என நினைக்கிறோம்” என்றார்.

“அப்படி உங்களுக்குச் சந்தேகம் வருவதற்கானக் காரணம் என்ன?” அவர் குரலில் தயக்கமிருந்தாலும் கண்களில் நம்பிக்கை ஒளி வீசியது.

“சில காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, Altoids என்கிற ஐடி சமீபத்தில், ஏறக்குறைய ஒரு வருடத்திற்குள், உருவாக்கப்பட்டது. அதிலிருந்து இன்று வரை ஷ்ரூமெரியில் ஒரே ஒரு பதிவுதான் இடப்பட்டிருக்கிறது. எனவே, காட்டன் ட்ரெய்லை புரமோட் செய்வதுதான் இதன் முக்கிய நோக்கம் எனத் தெரியவருகிறது. காட்டன் ட்ரெயில் எப்போது பொதுவெளிக்கு வந்ததோ அந்தச் சமயத்தில் தான் இந்த நிலைத்தகவலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே Altoids, காட்டன் ட்ரெயிலின் புரமோட்டராக இல்லாவிட்டாலும்கூட மிகவும் நெருக்கமானவராக இருக்க வேண்டும்.”

“இந்த ஐடி குறித்து வேறு தடங்கள் இருக்கிறதா? எதிலிருந்து லாக்இன் செய்யப்பட்டிருக்கிறது?”

டான் இல்லையென்று தலையசைத்தார். “Altoids இந்த நிலைத்தகவலுக்கு TOR ஐ உபயோகப்படுத்தியிருப்பதால் தடத்தைக் கண்டுபிடிக்க முடியாது.”

“சே!”

“ஏட்ரியன், இதில் கேள்வி என்னவென்றால் வழக்கமான ஒருவன் தீங்கற்ற ஒரு கருத்துக்கு ஏன் TOR-ஐ உபயோகிக்க வேண்டும்?”

“அது சரியாக இருக்காது. அவன் தனது அடையாளத்தை ஆன்லைனில் பாதுகாப்பு செய்து கொள்ளக்கூடிய ஒரு லிபர்ட்டேரியனாக இருக்க வேண்டும். அந்த மாதிரியாக மக்கள் இருக்கிறார்கள், டான்!” ஏட்ரியன் ஒரு விவாதத்தைக் கிளப்பும் பொருட்டு இப்படிக் கூறினார். “உண்மை. ஆனால் இதேமாதிரியான ஒரு நிலைத்தகவல் bitcointalk.org -யிலும் இரண்டு நாள்களுக்குப் பிறகு தோன்றக் காரணமென்ன? அதுவும் Altoids என்ற பெயரில்.”

“அவன் அப்படிச் செய்திருக்கிறானா?”

“ஆமாம். பிட்காயின் உலகத்தில் என்ன வெல்லாம் நடக்கிறதோ அதுகுறித்துத் அனைத்து விஷயங்களும் Bitcointalk.org -யில் பதிவு செய்யப் படும். அவன் புரமோட் செய்யவில்லையெனில் காட்டன் ட்ரெய்ல் பற்றி அவன் ஏன் bitcointalk.org-யில் பதிவிட வேண்டும்? இரண்டு நிலைத்தகவல்களையும் அவன், “இதுபற்றி என்ன நினைக்கிறீர்களோ அதை என்னிடம் சொல்லவும்... என முடித்திருக்கிறான். மிகவும் தற்செயலானது போலத் தெரிகிறது. ஒரே மாதிரியான நிலைத்தகவல், ஒரேமாதிரியான வேண்டுகோள். நீங்கள் நினைக்கிறீர்களா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், இது காட்டன் ட்ரெய்ல்மீது ஒரு சுவாரஸ்யத்தை உருவாக்கு வதற்கான Altoids-ன் ஒரு mission ஆகும்.”

ஏட்ரியன் பரவசத்தால் புழுங்கிக் கொண்டிருந்தார். லிபர்ட்டேரியன் என்கிற கருத்தை அவர் டானிடம் சொல்லி அவருடைய லாஜிக்கை தடம்புரளச் செய்ய நினைத்தாலும் அது நடக்கவில்லை. Altoids ஷ்ருமெரி மற்றும் bitcoinstalk.org-யில் TOR-ஐ பயன்படுத்தி நிலைத்தகவல் போட்டிருப்பதால் அவனுடைய மனதில் ஏதோவொரு கெட்ட எண்ணம் இருக்க வேண்டும். கண்டிப்பாக இது வழக்கமானதாகத் தெரியவில்லை. அவர்கள் இதன்குறித்து வேலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது.

“இவனை நாம் பிடித்தாக வேண்டும்” என்பதை மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

ஓவியங்கள்: ராஜன்