ஹலோ வாசகர்களே..!

என்.பி.எஃப்.சி விதிமுறைகளில் கடுமை தேவை!

வெட்ட வெட்ட முளைத்துவரும் கள்ளிச்செடி போல, கிளறக் கிளற அம்பலமாகிக் கொண்டிருக்கிறது என்.பி.எஃப்.சி நிறுவனங்களின் மோசடித் திருவிளையாடல். ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பான சர்ச்சை ஓயவில்லை, அதற்குள் சூப்பர்டெக் என்கிற நிறுவனம் மேலும் சில என்.பி.எஃப்.சி நிறுவனங்களையும், சில பொதுத்துறை வங்கிகளையும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

இது மட்டுமல்ல, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளுக்கு அடமானக் கடன் தரும்போது ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள படி, அவற்றின் மதிப்பில் 50% என்கிற அளவுக்கு மட்டும் தரவேண்டும். ஆனால், சில என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் இந்த அளவைவிட அதிகமாகக் கடன் தந்துள்ளன. இந்தப் பங்குகளின் விலை இப்போது கடுமையாகக் குறைந்துள்ளது. இந்தப் பிரச்னையை என்.பி.எஃப்.சி-கள் எப்படித்தான் சமாளிக்கப் போகின்றனவோ!

என்.பி.எஃப்.சி-களைப் பொறுத்தவரை, இன்னொரு செய்தியும் உலா வருகிறது. சிபில் மதிப்பெண் அதிகமாக உள்ளவர்களின் பெயரில் அவர் களுக்குத் தெரியாமலேயே பல லட்சம் ரூபாயை என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கி, அதை சில நாள்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் திரும்பச் செலுத்தும் விஷமக் காரியத்தை சில தொழில் நிறுவனங்கள் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் புரளி எப்போது நிஜமாகுமோ என்கிற சந்தேகம் எழுந்து, எல்லோரையும் பதைபதைக்க வைக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் வங்கிசாரா நிதி நிறுவனங்கள். வங்கிகளால் மட்டுமே எல்லோருக்கும் கடன் தந்துவிட முடியாது. சமூகத்தின் சில பிரிவினருக்கு வங்கிகளின் சேவை கிடைக்காத நிலை ஏற்படும்போது, அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து, கடன் தந்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்ல கைகொடுப்பவை வங்கி சாரா நிதி நிறுவனங்கள்தான். அப்படிப்பட்ட நிறுவனங்கள் மோசடிச் சர்ச்சைகளில் சிக்குவதால், தான் அழிவதுடன், சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குத் தேவையான உதவியும் கிடைக்காமல் போய்விடுகிறது.

வங்கிசாராத நிதி நிறுவனங்களின் மோசடிகள் நடக்காமல் இருக்கத் தேவையான வரைமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக வகுத்தாக வேண்டும். இந்த விதிமுறைகளின்படியே என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். நன்கு வரைமுறைபடுத்தப்பட்ட வங்கி களிலேயே மோசடிகள் நடப்பதைத் தவிர்க்க முடியாத நிலையில், என்.பி.எஃப்.சி நிறுவனங்களில் எந்த மோசடியும் நடக்காதபடியான வரைமுறைகளைக் கொண்டுவருவது கடினம் என்றாலும், எப்பாடுபட்டாகிலும் இந்த வேலையை ஆர்.பி.ஐ செய்தே ஆகவேண்டும்.

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் விதிமுறைகளை இன்னும் கடுமை ஆக்குவது காலத்தின் கட்டாயம் என்பதை யாரும் மறுக்க முடியாது!

- ஆசிரியர்