Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

மும்பை

மாள்விகா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை எடுத்துக் கொண்டவுடன் வேகமாக வேலைகள் நடந்தன. சி.பி.ஐ பல சாட்சிகளை அழைத்து விசாரிக்க ஆரம்பித்ததுடன், என்.ஒய்.ஐ.பி மற்றும் பல தரப்புகளிலிருந்து தரவுகளைச் சேகரித்தது. என்.ஒய்.ஐ.பி -யிலிருந்து குறிப்பாக, அவர்கள் மாள்விகாவின் மின்னஞ்சல்கள், டெலிபோன் பதிவுகள் போன்றவற்றைக் கேட்டனர். இந்த விசாரணை தான்யாவுடனான சந்திப்பையும் உள்ளடக்கியதாக இருந்தது.

சி.பி.ஐ-யின் டெபுடி டைரக்டரும், இந்த வழக்கின் அதிகாரியுமான கபீர்கான் மும்பைக் குற்றவியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடனும், சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டுடனும் வந்துசேர்ந்தார்.

‘`உங்கள் அம்மாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப்  படித்தீர்களா? அதில் கொலைக் கான எந்தச் சாத்தியமும் இருப்ப தாகக் குறிப்பிடப்படவில்லை’’ என்றார்.

‘‘உண்மைதான். ஆனால், நான் அதை நான் நம்பவில்லை. அம்மா மிகவும் மன தைரியம் கொண்டவர். எந்த விதத்திலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கமாட்டார். தற்கொலை செய்துகொள்வது  அவரைப் பொறுத்தவரை,  கோழைத்தனமான செயல்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

‘`அது விபத்தாகக்கூட இருக்கலாம்.’’

‘`அது விபத்து இல்லை’’ என  சத்தமாகக் கூறிய தான்யா வருத்தப்பட ஆரம்பித்தாள். ‘`மந்திரிக்கு க்ளீன் சிட் தருவதில் தான் நீங்கள் அக்கறையாக இருக் கிறீர்களே தவிர, உண்மையைக் கண்டுபிடிப்பதில் இல்லை’’ என்றாள்.

‘`இது நியாயமற்ற குற்றச்சாட்டு.’’

‘`என் அம்மாவுக்கும், மந்திரிக்கும் இருந்த உறவு குறித்து யாரும் கேட்கவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?’’

‘`ஊடகத்தில் அதுபற்றிப் பூடகமாகப் பேசப்பட்டாலும் எங்களது விசாரணையில் அந்த மாதிரியான விஷயம் குறித்து எந்தத் தடயமும் வெளிப்பட வில்லை’’ என்று அதிகாரி ஒருவர் கூறினார். ‘`உங்களுடைய அம்மாவுக்கும், மந்திரிக்கும் உறவு இருந்ததற்கு ஆதாரமாக தடயம் எதாவது தர முடியுமா?”

‘`உங்கள் விசாரணை மூலம் நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே உங்கள் மனதில் ஒரு முடிவெடுத்து விட்டீர்கள். என்னையும் விசாரித்துவிட்டதாகச் சொல்ல இப்போது இதைச் செய்கிறீர்கள்” என்றாள்.

அங்கிருந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவளுடைய அகம்பாவம் கபீர்கானுக்கு எரிச்சலூட்டியது. ‘`உங்களுக்கும், அம்மாவுக்கும் இடையேயான உறவு எப்படியிருந்தது?’’ எனக் கேட்டார்.

‘`வழக்கமான அம்மா-மகள் உறவுபோல ஏற்ற இறக்கங் களுடன் இருந்தது.’’

‘`உங்கள் இருவருக்குள்ளும்  ஏதாவது பிரச்னை இருந்ததா?’’

‘`எந்த அம்மாவுக்கும், மகளுக்கும் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கிறது? சண்டைகள் போட்டோம். ஆனால், அது பரஸ்பர நலம் குறித்துதான்.’’

‘`நீங்கள் வைத்திருந்த ரிலேஷன்ஷிப் குறித்து உங்கள் அம்மா என்ன சொன்னார்? குறிப்பாக, மிஸ்டர் வருண்?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

‘`அவன் என்னுடைய நல்ல நண்பன். இப்போது விசாரணை என்னைப் பற்றியா, இல்லை என் அம்மாவைப் பற்றியா?”

‘`உன்னுடைய அம்மாவைப் பற்றித்தான்.’’

‘`வொண்டர்ஃபுல், அம்மாவுக்கு வருணைப் பிடித்திருந்தது. எனவே, எங்கள் இருவருக்குமிடையே எதுவுமிருந் தாலும் அம்மாவுக்கும் அதில் திருப்தியாகத்தான் இருந்திருக்கும். அவ்வளவுதானா, இல்லை இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கிறதா, ஜென்டில்மென்?” என்று கேட்கையில் தான்யாவின் குரல் கடுமையாக இருந்தது.

அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ‘`தாங்க் யூ’’ எனச் சொல்லிவிட்டு அவள் எழ, கபீரும் எழுந்தார். அவர் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தார். ‘`நாங்கள் எங்கள் ேவலையைச் செய்ய வேண்டுமா அல்லது உன்னுடைய பொம்மைகளாக இருக்க வேண்டுமா, யங் லேடி? நான் பொறுமையாக இருக்கும் அதே நேரத்தில், இந்த மாதிரியான முட்டாள்தனத்தை எல்லாம் சகித்துக்கொள்ள முடியாது’’ எனச் சத்தமாக அவளிடம் பேசிக் கொண்டே கதவைத் திறந்து வெளியேறினார்.

வாஷிங்டன் DC

ஆல்டாயிட்ஸ் என இன்னொரு முறை குறிப்பிடப்பட்டிருப்பதை டான் கண்டு பிடித்தவுடன் ஏட்ரியனை போனில் அழைத்தார்.

‘`ஆல்டாயிட்ஸ் முதன்முதலாக அக்டோபர் மாதம் தோற்றமளித்ததுக்குப்பின் சில மாதங்கள் கழித்து பிட்காயின்டாக். ஓஆர்ஜி (bitcointalk.org) என்கிற வலைதளத்தில் அவர், `பிட்காயின் சமூகத்தில் தொழில்நுட்ப அனுபவம் கொண்டவர் தேவை’ என்று விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் frosty@frosty.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

‘`ஃப்ராஸ்டி..?’’ ஏட்ரியன் கேட்டார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

‘`ஆமாம், ஃப்ராஸ்டி. நான் நன்றாக சரி பார்த்துவிட்டேன். அது ஒரு செல்லத்தக்க மின்னஞ்சல் ஐ.டி-தான்’’ என டான் உறுதியாகக் கூறினார்.

‘`நீங்கள் ஏன்...’’ என ஏதோவொன்றை ஏட்ரியன் பேசிக்கொண்டிருக்க அவரது உதவியாளர் டோனியின் அறைக்குள் நுழைந்து, அவர்முன் நின்றார்.

‘`ஒரு விநாடி காத்திருங்கள்...’’ என்று சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்தவர், ‘‘என்ன அவசரம்?’’ என அவரிடம் கோபமாகக் கேட்டார்.

‘`ஐ யாம் சாரி சார். ஆனால், ஒயிட் ஹவுஸிலிருந்து  அவசரமான அழைப்பு... மைக் ஹென்ரிக்ஸ், ஜனாதிபதியின் சீஃப் ஆஃப் ஸ்டாஃப் லைனில் இருக்கிறார்.’’

‘`உடனே தொடர்பைக் கொடுங்கள். டான், நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன். இன்னொரு லைனில் ஒயிட் ஹவுஸ்.’’

‘`ஏட்ரியன். இது பாதுகாப்பானா லைனா? சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறேன். ஜில்லியன் டான் கொல்லப்பட்ட அன்று அவர் ஜனாதிபதியுட னான சந்திப்புக்கு அனுமதி கேட்க அவருக்கும், ஜனாதிபதிக்கும் இருந்த நெருக்கத்தால் அவரும் அனுமதியளித்திருக்கிறார். அந்த சந்திப்பு, ஜில்லியன் தலைமையில் நடக்கும் கமிட்டி ஆஃப் சவுத் ஏசியன் பாலிசி கூட்டத்துக்குப்பிறகு இரவில் நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜில்லியன் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்பினார். ஏனென்றால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் சில விஷயங்கள் ஜனாதிபதிக்கும் கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என விரும்பியிருக்கிறார்.’’

‘`அது என்ன?’’ 

‘`அது எனக்குத் தெரியாது. ஜனாதிபதிக்கும், செனட்டருக்குமான நட்பு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்லக்கூடியது. ஜனாதிபதிக்கு அவரது குடும்பம் பற்றி நன்கு தெரியும். எனவே, அது என்னவாக இருக்க முடியும் என அறிந்து கொள்ள ஜனாதிபதி ஆவலுடன் இருக்கிறார்’’ என்றார்.

ஏட்ரியன் ஒரு நிமிடம் யோசித்தார். ‘`அசாதரணமாக இதுவரை எதுவும் நமக்குத் தெரியவரவில்லை, சார்’’.

ஹென்ரிக்ஸ் மென்மையாக, ‘‘ஜனாதிபதி மிகவும் அக்கறையுடன் இருக்கிறார். உங்களுடைய விசாரணையின்போது டான் குடும்பத்தின் கெளரவத் துக்குப் பங்கம் விளைவிப்பது போல ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனே ஜனாதி பதிக்குத் தெரிவித்து அவரது ஒப்புதலை வாங்க வேண்டும். அவர் உங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார், ஏஜென்ட் ஸ்காட்’’ என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

‘`நிச்சயமாக நான் அதைக் காப்பாற்றுவேன். ஆனால், ஒரு வேண்டுகோள்’’ என்று கேட்டார் ஏட்ரியன்.

‘`ஜில்லியன் டான் மாற்றுக் கரன்சிக்கான ரகசிய கமிட்டி கூட்டத்துக்கு தலைமை யேற்றிருந்தார். நிதித் துறை சீர்திருத்தம் மற்றும் பிட்காயின் ஆகியவை அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்திருக்கின்றன. அந்தக் கூட்டத்தின் `மினிட்ஸ் ஆஃப் தி மீட்டிங்’கை நான் பார்க்க விரும்புகிறேன். டான் ஒரு லிபர்டேரியன் என்றும், அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு முன்பு வரை பிட்காயினுக்கு மிகப் பெரிய ஆதர வாளராக இருந்திருக்கிறார் எனவும், அதன்பின் அதற்கு முற்றிலும் எதிர்ப்பாளராக மாறினார் எனவும் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.’’

‘`அந்த மினிட்ஸ் ரகசிய ஆவணம். ஆனால், என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, மைக் ஹென்ரிக்ஸ் அழைப்பைத் துண்டித்தார்.

ஏட்ரியனுக்கு குழப்பமாக இருந்தது. தகவல் மிகவும் விநோதமாக இருந்தது. இவ்வளவு நாள்கள் கழித்து இந்தத் தகவலை ஜனாதிபதி தன்னிடம் சொல்ல என்ன காரணம்? அவர் தான் தொலைபேசியில் உரையாடியதை டோனியிடம் கூறினார்.

தொலைபேசியின் மீண்டும் ஹென்ரிக்ஸ் வந்தார். ‘`ஜில்லியன் கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்பு அவர் நிதித்துறை சீர்திருத்தம் சம்பந்தப் பட்ட கூட்டத்துக்குத் தலைமை வகித்திருக்கிறார். அதில் நீங்கள் சொன்னதுக்கு மாறாக, பிட்காயினைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பதற்கு அவர் பலத்த ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தவிர, வேறு எதுவும் தகவல் வேண்டுமெனில், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று கூறிவிட்டு உரையாடலை முடித்துக்கொண்டார்.

ஏட்ரியன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். ‘`டோனி, பிட்காயினையும், காட்டன் ட்ரெயிலையும் ஜில்லியன் முடக்கிவிடுவ தாகப் பயமுறுத்தியதாக க்ளோரியா கூறினாளே?’’ என்று யோசித்தவேளையில் டோனி உள்ளே நுழைந்தார்.

‘‘ஏட்ரியன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான காவல்துறை ஆவணங்கள் அனைத்தையும் சோதித்துப் பார்த்துவிட்டோம். க்ளோரியாவின் பெயர் குற்றவாளியாகவோ அல்லது சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவளாகவோ குறிப்பிடப்படவில்லை. சொல்லப்போனால், ரெய்ட் நடத்தப்பட்ட விருந்து குறித்துக்கூட தகவல் எதுவுமில்லை. காவல்துறை ஆவணங்களிலிருந்து அவை நீக்கப் பட்டிருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.’’

ஏட்ரியனுக்குக் குழப்பம் அதிகரித்தது!

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்