நம்மில் பலருக்கு நிதித் தேவைக்காக சுலபமாகக் கிடைக்கும் தனிநபர் கடனை வாங்குவதா அல்லது சொத்து அடமானக் கடனை வாங்குவதா என்கிற குழப்பம் இருக்கிறது. இந்த இரு கடன்களின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டால், எந்தக் கடனை வாங்குவது லாபகரமாக இருக்கும் என்கிற முடிவை எடுப்பது சரியாக இருக்கும்.

சொத்து அடமானக் கடன்

சொத்து அடமானக் கடன் (Loan against Property - LAP) என்பது வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் கடனாகும். பெயரில் உள்ளது போலவே அந்தக் கடன், சொத்துகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடனாகும். அந்தச் சொத்து மனையாகவோ, வீடாகவோ, மனையுட சொத்தாகவோ இருக்கலாம்.

தனது கடனுக்கு ஈடாக ஒருவர் தனது சொந்த சொத்துகளை அடமானம் வைப்பது இந்த வகைக் கடனாகும். அந்த நபர் அவரது சொத்து மதிப்புக்கு ஏற்றவாறு கடன் பெற முடியும். பொதுவாக இது, கடனுக்கான மதிப்பு (Loan to Value - LTV) எனப்படும். இந்தக் கடன் மாத தவணை அடிப்படையில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். மற்ற வகைக் கடன்களை ஒப்பிடு கையில், இந்த வகைக் கடனுக்கு வட்டி விகிதம் மற்றும் பிற கட்டணங்கள் மிகக் குறைவாகும். ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்கியவர் கடனைக் கட்டத் தவறினால், அவர் அடமானம் வைத்த சொத்து, கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுவிடும் இந்தச் சொத்தை விற்று, கடன் பாக்கியை எடுத்துக் கொண்டு மீதியைக் கடன் வாங்கியவருக்கு தருவார்கள்.

தனிபர் கடன்கள்

தனிபர் கடன்கள் எனப்படும் பர்சனல் லோன்கள் (Personal loan), தனிநபர்கள் தங்களின் சொந்தத் தேவைகளுக்காக வாங்கும் கடன் இதுவாகும். இந்த வகைக் கடன்களும் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கடன், அதனை வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு அவ்வளவு பாதுகாப்பானதல்ல. காரணம், கடன் தொகைக்கு இணையாக ஜாமீன் எதுவும் பெறப்படுவதில்லை. இந்த வகைக் கடன்கள் திரும்ப வருவதில் அதிக ரிஸ்க் உள்ளதால் வீட்டு அடமானக் கடனைவிட 2-5% அதிகமாக தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் இருக்கும். ஒருவரின் வருமானத்தின் அளவு, இதர கடன்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள், கடனைத் திருப்பச் செலுத்தும் திறன் போன்றவை தனிநபர் கடன் கொடுக்கப்படும் போது முக்கியமாக ஆராயப்படும்.

சொத்து அடமானக் கடன் அல்லது தனிநபர் கடனுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது எவற்றை மனதில் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

கடன் கால அளவு

சொத்துகள்மீது வங்கிகள் கொடுக்கும் கடன்கள் நீண்ட காலக் கடன்கள் ஆகும். விண்ணப் பதாரரின் தகுதிகள், வருமானம், வயது உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு 15 ஆண்டு கால கடன்களை வரை வழங்கப் படுகின்றன. ஆனால், தனிநபர் கடன்கள் ஐந்து ஆண்டுகள் கால அளவு வரை மட்டுமே வழங்கப் படும். மேலும், கடன் தொகையும் குறைந்த அளவாகவே இருக்கும்.

கடன் தொகை

சொத்துகளை அடமானம் பெற்று வழங்கப்படும் கடன் களைப் பொறுத்தவரை அந்த சொத்துகளின் மதிப்பிற்கு ஏற்றவாறு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் பெரும் தொகையைக் கடனாக வழங்க முன்வரும். கோடி கணக்கில்கூட சொத்து அடமானக் கடன் வாங்க முடியும்.

எனினும், கடன் தர மதிப்பீடு (சிபில் ஸ்கோர்), முந்தைய காலங்களில் கடன்களைத் திருப்பிச் செலுத்திய ஆவணங்கள், வருமானம், வயது, சொத்தின் மதிப்பு போன்றவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தனிநபர் கடன்களைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 15 - 20 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படும். அதுவும் விண்ணப்பிக்கும் தனிநபரின் வருமானம் அல்லது ஊதியத்தைப் பொறுத்தே தொகை நிர்ணயிக்கப் படும்.

வட்டி விகிதம்

சொத்துகளை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் மிகக் குறைவே. அதாவது, தனிநபர் கடன்களை ஒப்பிடுகையில் சொத்துக் கடன்களுக்கு வட்டி குறைவுதான். ஏனென்றால் ரிஸ்க் காரணிகளைக் கொண்டே வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. சொத்துக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும்கூட கடன் கொடுப்பவர், கொடுத்த பணத்தை இழக்கும் ஆபத்து ஏற்படாது.

நடைமுறைகளுக்கான கால அளவு

பொதுவாக, சொத்துக் கடன்களை ஒப்பிடுகை யில் தனிநபர் கடன்கள் வழங்கப்படுவதற்கான கால அளவு குறைவு. ஏனென்றால் பாதுகாப்பாக பெறப்படும் சொத்தின் தன்மையை ஆராய வேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு உண்டு. கடன்களை ஆவணப்படுத்துதல் போன்ற பல நடைமுறைகள் உள்ளன. உள்ளீட்டுச் சோதனை கள், சட்டநடைமுறைகள், ஒப்பந்த நடைமுறைகள், உள்ளிட்டவை உள்ளன. விண்ணப்பதாரரின் விவரங்கள் மற்றும் தகுதியை மட்டும் தனிநபர் கடனில் பார்த்தால் போதும். ஆனால், சொத்துக் கடனில் சொத்தின் மதிப்பையும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் இதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

தனிநபர் கடன்கள் வழங்கப்படுவதற்கான செயல்பாட்டு நடைமுறைக் காலம் குறைவுதான் என்றாலும், அனுமதிக்கப்படும் கடன் அளவு, திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் போன்ற வற்றில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் சொத்துக் கடனில் அதிக நெகிழ்வுத்தன்மை, குறைந்த வட்டி, அதிக கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்த நீண்டகால அவகாசம் போன்ற சலுகைகள் கிடைக்கும்.

மேற்சொன்ன இந்த இரண்டு கடன்களையும் ஒப்பிடுகையில், சொத்துக் கடனே சிறந்ததாக உள்ளது. ஆனால், தனிநபர் கடன் சில தினங்களில் கிடைத்துவிடும். சொத்து அடமானக் கடன் கிடைக்க சில வாரங்கள் ஆகும். முன்கூட்டியே திட்டமிட்டு சொத்து அடமானக் கடன் வாங்கி னால் வட்டியில் கணிசமாக மிச்சப்படுத்த முடியும் என்பது நிச்சயம்!