ஹலோ வாசகர்களே..!

வங்கிகள் மனது வைக்குமா?

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பவை வங்கிகள். வங்கிகள் தரும் கடன்களை நம்பித்தான் பல நிறுவனங்கள் தொழில் நடத்தி வருகின்றன. பிற நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது வங்கிகள் அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவு என்பதுதான் இதற்குக் காரணம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தொழில் கடன் தருவதை வங்கிகள் முடிந்த அளவு தவிர்த்து வருவதுடன், கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமலே இருந்து வருகின்றன. சமீபத்தில் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25% என்கிற அளவுக்குக் குறைத்தபின்னும், ஒன்றிரண்டு வங்கிகளைத் தவிர, பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்காமலே இருக்கின்றன. வங்கி உயரதிகாரிகளைச் சமீபத்தில் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ஷக்திகந்த தாஸ் இது தொடர்பாக பேசிய பின்னும் வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் வங்கிகள் இறங்கிய மாதிரி தெரியவில்லை.

இத்தனைக்கும் தொழில் கடன் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் கடனுக்கான தேவை 12.5 சதவிகிதமாக இருந்தது. அடுத்துவந்த மாதங்களில் இது வேகமாக அதிகரித்து, கடந்த டிசம்பரில் 15.1% என்கிற அளவுக்கு உயர்ந்தது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இது 14.5% என்கிற அளவுக்குக் குறைந்தாலும், அடுத்துவரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கவே செய்யும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சி விகிதம் கடந்த ஜூலை நெகட்டிவ்வாக இருந்தது, பிற்பாடு வேகமாக உயரத் தொடங்கி, கடந்த டிசம்பரில் 4.4% என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி விகிதம் இந்த அளவுக்கு இருக்கும்போது, வங்கிகள் அந்தத் தேவையை நிறைவேற்றாமல் இருப்பது தனது பொறுப்பினைத் தட்டி கழிக்கும் செயல் இல்லையா?
‘வங்கிகளின் வாராக் கடன் ரூ.9.50 லட்சம் கோடிக்குமேல் உள்ளது. இந்த நிலையில், நாங்கள் எப்படிப் புதிதாகக் கடன் தரமுடியும்?’ என்பது வங்கிகளின் வாதம். வாராக் கடன் பிரச்னையைத் தீர்க்க உன்னிப்பான கண்காணிப்பும், திறமையான நிர்வாகமும்தான் தேவையே தவிர, கடனே தராமல் பணத்தை முடக்கி வைத்திருப்பதல்ல. வங்கிகள் அப்படிச் செய்யும் பட்சத்தில், வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வட்டியும் தரமுடியாது; நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவவும் முடியாது.

செயல்பாடற்ற நிறுவனத்தில்தான் தவறு எதுவும் நடக்காது. தொடர்ச்சியான செயல்பாடுடைய நிறுவனத்தில் சில தவறுகள் நடக்கவே செய்யும். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வதுதான் சரியான அணுகுமுறை. வாராக் கடன் என்பதைக் காரணம் காட்டி ஒதுங்கி நிற்பதைவிட, நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு சரியான நபர்களுக்கு வங்கிகள் கடன் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- ஆசிரியர்