வீட்டுக் கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைக்கும் பலருக்கும் இருக்கிறது. ஆனால், புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் அளவு குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்திய அளவில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் சராசரி அளவு கடந்த ஐந்தாண்டு காலத்தில் 17% குறைந்துள் ளது. அதாவது, 2014-ம் ஆண்டில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் சராசரி அளவு 1,390 சதுர அடியாக இருந்த நிலையில், 2018-ம் ஆண்டில் 1,160 சதுர அடியாகக் குறைந்துள்ளது என ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான அனராக் புள்ளிவிவரங்களைத் தந்திருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் சென்னையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் சராசரி அளவு 1,290 சதுர அடியிலிருந்து 1,100 சதுர அடியாகக் குறைந்துள்ளது. அதாவது, சராசரி அளவு 15% குறைந்துள்ளது. இதுவே, மிக அதிகபட்சமாக கொல்கத்தாவில் 23% (1,230 ச.அடிலிருந்து 950 ச.அடி) குறைந்துள்ளது.

குடியிருப்புகளின் சராசரி அளவு குறையக் காரணம், வீடுகளின் விலை அதிகமாக இருப்பதே. வீடுகளின் விலையில் பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் சரக்குப் போக்குவரத்து மற்றும் சேவை வரி பெரும்பகுதியாக இருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

சி.சரவணன்