Published:Updated:

சிலிண்டர் விலைக்குறைவு முதல் இணைய பரிவர்த்தனை கட்டணம் ரத்து வரை! - ஜூலை 1-ல் அமலான புதிய நடைமுறைகள்

புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில் உங்களின் மாதாந்தர வரவு - செலவு பட்ஜெட்டைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் சில நடைமுறைகளில் இன்று முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

சிலிண்டர் விலைக்குறைவு முதல் இணைய பரிவர்த்தனை கட்டணம் ரத்து வரை! - ஜூலை 1-ல் அமலான புதிய நடைமுறைகள்

ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எஃப்.டி சேவைக் கட்டணம் ரத்து! 

இணையம் மூலம் வங்கிச் சேவைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இரண்டு சேவை மூலம் பணம் அனுப்பலாம். ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) உடனடியாகப் பணம் மற்றொரு கணக்குக்குச் சென்றுவிடும். என்.இ.எஃப்.டி (NEFT) மூலம் பணம் அனுப்பினால் சிறிது நேரம் கழித்து பணம் செல்லும். இத்தனை நாளாக இந்தப் பணப்பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலித்து வந்தன.

இந்நிலையில், இணைய பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இனி சேவைக்கட்டணத்தை வசூலிக்கப்போவதில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்று பல்வேறு வங்கிகளும் சேவைக் கட்டணத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளன.

சிலிண்டர் விலைக்குறைவு முதல் இணைய பரிவர்த்தனை கட்டணம் ரத்து வரை! - ஜூலை 1-ல் அமலான புதிய நடைமுறைகள்

மானியமில்லா கேஸ் சிலிண்டர்கள் விலைக்குறைவு!

இந்தியாவில் மானிய விலை கேஸ் சிலிண்டர்கள், மானியமில்லா கேஸ் சிலிண்டர்கள் என இரண்டு வகை சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை எரிவாயு நிறுவனங்களே முடிவு செய்கின்றன. இந்நிலையில், சர்வதேச எரிவாயு சிலிண்டர் சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நேற்று இரவு முதல் மானியமில்லா சிலிண்டர்களின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சென்ற மாதம் 737 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை இந்த மாதம் 637 ரூபாயாக விற்கப்படுகிறது. மானிய சிலிண்டர்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாதம் 497 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இந்த மாதம் 494 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

சிலிண்டர் விலைக்குறைவு முதல் இணைய பரிவர்த்தனை கட்டணம் ரத்து வரை! - ஜூலை 1-ல் அமலான புதிய நடைமுறைகள்

ரயில்களின் நேரம் மாற்றம்!

இந்தியா முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இயங்கும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 24 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மும்பை மண்டத்தில் 39 ரயில்களும், வதோதரா (Vadodara) மண்டலத்தில் 105, அகமதாபாத் மண்டலத்தில் 148, ரட்லம் (Ratlam) மண்டலத்தில் 39, ராஜ்கோட் மண்டலத்தில் 7 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தவிர 29 விரைவு ரயில்கள் மூன்று முதல் 20 நிமிடங்கள் வரை விரைவுபடுத்தப்பட்டுள்ளன.  

சிலிண்டர் விலைக்குறைவு முதல் இணைய பரிவர்த்தனை கட்டணம் ரத்து வரை! - ஜூலை 1-ல் அமலான புதிய நடைமுறைகள்

ரெப்போ விகிதத்தில் வீட்டுக்கடன்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் வீட்டுக் கடன் நடைமுறையை மத்திய அரசின் ரெப்போ விகிதத்துடன் இணைத்துள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதம் மாறும்போது அதைப் பொறுத்தே வீட்டுக் கடன் வட்டியும் மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு