Published:Updated:

மீண்டும் ஏற்றம்... பேங்க்கிங் செக்டார் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் சொல்வது என்ன?

பேங்க்கிங் செக்டார்
பிரீமியம் ஸ்டோரி
News
பேங்க்கிங் செக்டார்

BANKING FUND

குறுகிய காலத்தில் நிறைய லாபம் தரும் முதலீட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பலரது ஆசை. சமீப காலமாக நல்ல ஏற்றத்தைக் கண்டிருக்கும் பேங்க்கிங் செக்டார் ஃபண்டில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாமா என்ற எண்ணம் சிறு முதலீட்டாளர்களின் மனதில் தற்போது அடிக்கடி வந்துசெல்கிறது. பேங்க்கிங் செக்டார் ஃபண்டில் இப்போது முதலீடு செய்யலாமா என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
சுரேஷ் பார்த்தசாரதி மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
சுரேஷ் பார்த்தசாரதி மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்

செக்டார் ஃபண்டுகள் எல்லோருக்கும் உகந்ததா?

பேங்க்கிங் செக்டார் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்குமுன் செக்டார் ஃபண்டுகளின் இயல்புகளை முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள பங்குகளின் முதலீடு செய்யும் செக்டார் ஃபண்டுகளில் எல்லோரும் முதலீடு செய்யலாமா என்னைக் கேட்டால், கூடாது என்றுதான் சொல்வேன். காரணம், செக்டார் ஃபண்ட் எல்லாருக்கும் பொருந்தாது. ஏனெனில், அது அதிக ரிஸ்க் உடையது. அத்துடன் அந்தத் துறை சார்ந்த அறிவு இருந்தால்தான், அந்த ஃபண்டுகளில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், எப்போது யூனிட்டுகளை விற்று பணமாக்க வேண்டும் என்பது தெரியும். ஒருவர் முதலீடு செய்ய நினைக்கும் மொத்தத் தொகையில் 5 - 10% வரை செக்டார் மற்றும் தீமெட்டிக் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

தவிர, குறுகிய காலத்தில் நல்ல வருமானம் தந்தாலும் சற்று நீண்டகாலத்திலும் சராசரியாக நல்ல வருமானம் தந்திருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். உதாரணமாக, பல ஆண்டுகள் பார்மா ஃபண்டுகள் மிகவும் மோசமான வருமானத்தைக் கொடுத்தன. ஆனால், கோவிட் பரவலால் சூழ்நிலை முற்றிலுமாக மாறி, குறுகிய காலத்தில் பார்மா பங்குகள் 60 - 80% வரை வருமானம் கொடுத்துள்ளது. இதில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமாக பார்மா ஃபண்டுகள் வருமானம் தந்துள்ளன. இருப்பினும் ஐந்து ஆண்டு சராசரி வருமான என்பது பார்மா ஃபண்டுகளில் 8.5% என்ற அளவிலேயே இருக்கிறது. செக்டார் ஃபண்டுகளில் இருக்கும் ரிஸ்க் இதுதான்.

மீண்டும் ஏற்றம்... பேங்க்கிங் செக்டார் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் சொல்வது என்ன?

பேங்க்கிங் செக்டார் எப்படி?

இனி நாம் பேங்க்கிங் செக்டார் ஃபண்டைப் பார்ப்போம். பேங்கிங் மற்றும் ஃபைனான்ஷியல் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் பணமானது வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC) காப்பீடு போன்ற துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியப் பொருளா தாரம் மோசமாக இருக்கும் தற்போதைய நிலையில் வங்கிப் பங்குகளில் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். ஆகையால், அதன் வீழ்ச்சி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியப் பொருளாதாரம் சூழ்நிலை சரியாக இல்லை யென்றால், கடும் வீழ்ச்சிக்குப் பிறகு, சில ஆண்டுகள் பொறுத்த பின்புதான் அதிலிருந்து நல்ல வருமானம் பார்க்க இயலும். கோவிட் தாக்கம் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் எவ்வளவு இருக்கும் என சரியாக இன்னும் கூற இயலாது. சூழ்நிலை சரியான பின்னால் எவ்வளவு நஷ்டம் என்று கூற முடியும்.

மீண்டும் ஏற்றம்... பேங்க்கிங் செக்டார் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் சொல்வது என்ன?

பேங்க்கிங் ஃபண்டுகளின் என்.ஏ.வி இன்னும் உயருமா?

ஏழு பேங்க்கிங் ஃபண்டுகளை ஆராய்ந்ததில், அவை பரவலாகத் தனியார் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அத்துடன் ஐந்து அல்லது ஆறு பங்குகளில் (ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், கோட்டக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு இன்ஷூரன்ஸ்) பெருமளவில் முதலீடு செய்துள்ளன. இந்தப் பங்குகள் சந்தை பெருமளவு உயர்ந்ததன் காரணமாக, இந்த ஃபண்டுகள் ஜனவரியில் இருந்த நிலைக்குத் திரும்பியுள்ளன.இந்தப் ஃபண்டுகளின் என்.ஏ.வி இங்கிருந்து மேலே செல்லும் என உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், அடுத்த ஓராண்டுக்கு இந்தப் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் காணாது என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

மேலும், பேங்க்கிங் ஃபண்டுகள் பொதுத்துறை பங்குகளில் அதிகம் முதலீடு செய்யவில்லை. இந்த ஃபண்டுகள் அதிகமாக 5 - 6 வங்கிப் பங்குகளில் முதலீடு செய்திருப்பதால், சில பங்குகள் சரியாக வருமானம் தரவில்லை என்றால், வருமானம் ஒற்றை இலக்கத்தில்தான் கிடைக்க வாய்ப்புள்ளது.

பங்குகளில் எஸ்.ஐ.பி...

இவ்வாறு உள்ள சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்க நினைக் கும்பட்சத்தில் மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் பேங்க்கிங் பங்குகளில் முதலீடு செய்துவந்தால் ஓரிரண்டு ஆண்டுகளில் அனைத்துப் பங்குகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா ஃபைனான்ஸ், சோழமண்டலம் ஃபைனான்ஸ் மற்றும் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்சி லைஃப், எஸ்.பி.ஐ லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ லைஃப் ஆகிய பங்குகளில் முதலீடு செய்துள்ளன. ஓரிரு பங்குகளைத் தவிர பல பங்குகள் 52 வார உச்சத்தில் உள்ளன.

பொறுமையாகப் பார்த்து...

இந்த ஃபண்டுகளில் ஒரே நேரத்தில் முதலீடு செய்ய நினைக்காமல் இதன் வளர்ச்சியைப் பொறுமையாகப் பார்த்து அதற்கேற்ப முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஓரளவுக்கு நல்ல வருமானம் பார்க்க முடியும்!

பிட்ஸ்

ரச் சாமான்களை விற்கும் ஐ.கே.இ.ஏ நிறுவனம் இந்தியாவில் ரூ.10,500 கோடியைப் புதிதாக முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதில் ரூ.6,000 கோடியை மும்பையில் முதலீடு செய்யப் போகிறது!