Published:Updated:

ரூ.86,188 கோடி ; மல்லையா, நிரவ் மோடியைவிட 10 மடங்கு அதிக கடன் - நெருக்கடியில் அம்பானி?

அனில் அம்பானி, முகேஷ் அம்பானி
அனில் அம்பானி, முகேஷ் அம்பானி

கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானியின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என்கிறார்கள் தொழில் வல்லுநர்கள்! பண நெருக்கடியில் அனில் அம்பானி... என்ன பிரச்னை?

`இந்தியாவின் பெரும் பணக்காரர் யார்?' என்ற கேள்வியைக் கேட்டவுன், நம் மனதில் தோன்றும் முதல் பெயர் அம்பானி. திருபாய் அம்பானி இந்தியத் தொழில்துறையில் நிகழ்த்திய சாதனைகள் மிகப்பெரியவை. தந்தைவழியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் தொழில்துறையில் பல முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றில் வெற்றிகளையும் அடைந்து வருகிறார் திருபாய் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் இவருக்கு 9-ம் இடம். அதேவேளையில், முகேஷ் அம்பானியின் தம்பியும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி தொழில்துறையில் மிகப் பெரும் சரிவைச் சந்தித்து, நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி
`ஒருகாலத்தில் கோடீஸ்வரன்... இப்போது அப்படியில்லை!' - லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி

கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானியின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என்கிறார்கள் தொழில் வல்லுநர்கள். காரணம், தொடர் வர்த்தகச் சரிவு, அதீத கடன், இதன் காரணமாக அடுத்தடுத்து அவருக்கு ஏற்பட்ட இழப்பு என எல்லாம் சேர்ந்து அனில் அம்பானியின் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை வீழ்ச்சியை நோக்கிக் கொண்டு சென்றுவிட்டன.

இந்தநிலையில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மோசடிக் கணக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் அளித்திருக்கும் தரவுகளின்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாஃங் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கணக்குகளை மோசடிக் கணக்குகளாக அறிவித்துள்ளன.

 கடன் நெருக்கடியில் அனில் அம்பானி
கடன் நெருக்கடியில் அனில் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன வங்கிக் கணக்குகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் மோசடிக் கணக்குகளாக அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் வங்கிக் கணக்கை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மோசடிக் கணக்காக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடர்ந்த வழக்கில், ``ரிலையன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடிக் கணக்குகளாக அறிவிக்கும் முடிவை ஜனவரி 13-ம் தேதி நடைபெறவிருக்கும் விசாரணை வரை ஒத்தி வைக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். இது ஒருபுறமிருக்க, எரிக்ஸன் நிறுவனம், தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்மீது புகாரளித்திருக்கிறது. ஜியோ வருகைக்குப் பிறகு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. இதன் காரணமாக டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு வழங்கிவந்த ஸ்வீடன் நாட்டு நிறுவனமான எரிக்ஸன் ரிலையன்ஸ் நிறுவனம்மீது புகாரளித்திருக்கிறது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
பிசினஸ் 2020: சாதித்த முகேஷ் அம்பானி... மோதிய டாடா - மிஸ்திரி!

இந்தநிலையில் மும்பையிலுள்ள தேசிய சட்ட தீர்ப்பாயம், ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் கடன் பிரச்னைக்கான தீர்வுகாணும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதோடு, அதற்கான தனித் தீர்வுக்குழு ஒன்றையும் அமைத்தது. ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லின் சொத்துகள் அனைத்தையும் வாங்குவதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விண்ணப்பித்திருக்கிராது. இதன்படி ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் 43,000 டவர்கள், 1,72,000 கி.மீ ஃபைபர் நெட்வொர்க் ஆகியவற்றை 4,400 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்களுக்கான தீர்வு காணும் திட்டத்துக்கு மும்பை சட்ட தீர்ப்பாயம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தேசிய தீர்ப்பாயம் அமைத்திருக்கும் தீர்வுக்குழு அறிக்கை ஒன்றை சமர்பித்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கும் 26,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது வங்கிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கணக்குகளை மோசடிக் கணக்குகளாக அறிவித்திருக்கும் நிலையில் தீர்வுக்குழுவின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனில் அம்பானி
அனில் அம்பானி

இதைத் தொடர்ந்து தொழில் வல்லுநர்கள், சில ஆய்வுகளை மேற்கொண்டு, அனில் அம்பானி இந்திய வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ. 86,188 கோடி என்று கணித்திருக்கின்றனர். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 49,193 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 24,306.27 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனம் 12,687.65 ரூபாயும் கடன் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

மல்லையா, நீரவ் மோடி
மல்லையா, நீரவ் மோடி
மல்லையா, நீரவ் மோடி சுப்ரதோ ராய்... செய்த குற்றம் என்ன? - ஓ.டி.டி சீரிஸ் சொல்லும் உண்மைகள்!
இது குறித்து தொழில் வல்லுநர்கள் கூறுகையில், ``விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை 9,000 கோடி ரூபாய். வைர வியாபாரி நிரவ் மோடி செலுத்த வேண்டிய கடன் தொகை 7,407 கோடி ரூபாய். இவர்கள் இருவரின் கடன் தொகையையும் ஒப்பிட்டால் அனில் அம்பானியின் கடன் நிலுவை 10 மடங்கு அதிகம். இதோடு அனில் அம்பானி அரசுக்குச் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகை ரூ. 28,837 கோடியையும் சேர்த்துக்கொண்டால், அனில் அம்பானி திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 1,15,000 கோடி ரூபாயைத் தாண்டும்'' என்று அதிர்ச்சி தருகிறார்கள்.
அடுத்த கட்டுரைக்கு