Published:Updated:

வங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..! - எச்சரிக்கை டிப்ஸ்

வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

வங்கிச் சேவையைப் பெறும்போது அதனோடு தொடர்பில்லாத வேறொரு சேவையைப் பெறுவதே கிராஸ் செல்லிங்!

வங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..! - எச்சரிக்கை டிப்ஸ்

வங்கிச் சேவையைப் பெறும்போது அதனோடு தொடர்பில்லாத வேறொரு சேவையைப் பெறுவதே கிராஸ் செல்லிங்!

Published:Updated:
வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி
முன்பெல்லாம் வங்கிகள், வங்கித்துறை சார்ந்த சேவைகளை மட்டுமே மக்களுக்கு வழங்கி வந்தன. ஆனால். இப்போது பலதரப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றன. உதாரணம், காப்பீடு, கிரெடிட் கார்டு, மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடு, பங்கு வர்த்தகம்... வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வங்கிச் சேவைகளை விற்கும்போது அதனுடன் பிற சேவைகளை விற்க முயல்கின்றனர். இவ்வாறு ஒரு சேவையைப் பெறும்போது அத்துடன் வேறு சேவைகளை விற்பது ‘கிராஸ் செல்லிங்’ என்று அழைக்கப்படுகிறது.

கிராஸ் செல்லிங் என்பது...

கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் கடன் தொகையை விரைவாகப் பெற வேண்டும் என்பதற்காகவும், வங்கி ஊழியரிடம் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் பிற சேவைகளைப் பெறுகின்றனர். உதாரணத்துக்கு, ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய நகைகளை வைத்துக் கடன் பெறுவதற்கு வங்கியை நாடுகிறார். அவரிடம் வங்கி ஊழியர் நகைக்கடனைப் பெற வேண்டுமென்றால், ரூ.2 லட்சத்துக்கு விபத்துக் காப்பீடு எடுக்க வேண்டும் என்று கூறி, அதை அந்த வாடிக்கையாளரிடம் விற்பனை செய்வதுதான் ‘கிராஸ் செல்லிங்.’

வங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..! - எச்சரிக்கை டிப்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபோல விற்பனை செய்யப்படும் சேவைகளை அந்த வங்கி சார்ந்த துணை நிறுவனம் வழங்கலாம். அல்லது வங்கி மற்றொரு நிறுவனத்துடன் கூட்டாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு விற்கப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத்தை வாடிக்கையாளரிடம் வங்கிகள் வசூல் செய்யும். வாடிக்கையாளருக்கு விபத்துக் காப்பீடு எடுக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இருக்காது. ஆனால், பாலிசி எடுக்காவிட்டால் தனக்கு நகைக்கடன் கிடைக்காது என்ற பயத்தில் காப்பீட்டை வாங்கிவிடுவார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏன் விற்கிறார்கள்?

சில வங்கிகளில் இதுபோல பிற சேவைகளை வங்கி ஊழியர்கள் விற்கும்போது அவருக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கக்கூடும். அந்த வருமானத்துக்காகவே அந்த ஊழியர் தேவையில்லாத சேவைகளை வாடிக்கையாளர் தலையில் கட்ட அதிக வாய்ப்பிருக்கிறது. கடன் தொகை உயர உயர இதுபோல, அதிக மதிப்பிலான சேவைகளை வாடிக்கையாளர்கள் அறியாமலேயே அவர்களிடம் விற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒருவர் சொத்தை வைத்து ரூ.30 லட்சம் கடன் பெறுகிறார் எனில், அவரிடம் ரூ.50,000 பிரீமியம் கட்டும் பாலிசிகளை வங்கி ஊழியர்கள் விற்றுவிடுகிறார்கள்.

வங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..! - எச்சரிக்கை டிப்ஸ்

வாங்கித்தான் ஆக வேண்டுமா?

இதுபோல வங்கிமூலம் அளிக்கப்படும் பிற சேவைகளைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த வங்கியும் வாடிக்கை யாளர்களை நிர்ப்பந்தம் செய்ய முடியாது. இது மாதிரி ஏதாவது நிபந்தனை விதித்தால், அதை நிராகரிப்பதுடன், தனது ஒப்புதல் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் தனக்குத் தரக்கூடாது, அதற்காகப் பணம் எதையும் பிடிக்கக்கூடாது என்று சொல்லலாம். கடன் பெறும்போது வேறு ஏதாவது திட்டத்துக்கான பணம் பிடித்தம் செய்திருக்கிறார்களா என்பதையும் பேசி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நல்ல திட்டங்களும் உண்டு

சில வங்கிகள் நல்ல திட்டங்களையும் ‘கிராஸ் செல்லிங்’ மூலம் விற்க முயலும். உதாரணமாக, விபத்துக் காப்பீடு ரூ.5 லட்சம் அளவுக்கு ரூ.200 பிரீமியத்தில் கிடைக்கும் என்று சலுகை விலையில் தர முயற்சி செய்யலாம். சில சமயங்களில் வங்கிககள் இந்தச் சேவைகளைப் பெற்றால்தான் கடன் தொகை வழங்கும் என்ற பாலிசி வைத்திருக்கலாம். உதாரணமாக, வீட்டுக் கடன் பெறும்போது அந்த வீட்டுக்கு சொத்துக் காப்பீடு எடுக்க வேண்டும் என்று விதிமுறை அமைத்திருக்கலாம். வாங்கும் வீட்டுக்கு இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், இந்த பாலிசி மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால், கடன் வாங்குபவர் எடுத்துக் கொள்வது நல்லது.

அதேநேரத்தில், அதிக பிரீமியத்தில் குறைவான ஆயுள் காப்பீடு கவரேஜ் அளிக்கும் பாலிசியை எடுக்கச் சொல்லும்போது உஷாராக இருக்க வேண்டும். அது போன்ற பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடன் வாங்கியவர்கள் வங்கிச் சேவை சாராத பிற சேவைகளை வாங்கி இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி வாங்கியிருந்தால், அது பற்றிக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே காப்பீடு எடுத்திருந்தால்..!

நீங்கள் ஏற்கெனவே போதுமான அளவுக்கு டேர்ம் பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் கடன் தொகைக்கு இணையாகப் பாலிசி எடுப்பது கூடுதல் செலவு வைக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் வங்கிகள் டேர்ம் பிளான் எடுக்கச் சொன்னால் எடுப்பது நல்லது. கடன் வாங்கியிருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பாக்கித் தொகையை இந்த பாலிசி ஈடுசெய்யும். குடும்பத்தினருக்குக் கடன் சுமையாக இருக்காது. வீட்டுக் கடன் வாங்கும் வாங்கும்போது இப்படி டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது நல்லது.

வங்கிகளில் கிராஸ் செல்லிங்... உஷார் மக்களே உஷார்..! - எச்சரிக்கை டிப்ஸ்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கடன் வாங்கும்போது வங்கிச் சேவை அல்லாத வேறு என்ன திட்டங்களை வங்கிகள் விற்கின்றன, அதற்கு எவ்வளவு தொகை வசூல் செய்யப்படுகிறது, அது தனக்கு உண்மையில் பயனுள்ளதுதானா என்று கேட்டு தேவை இருப்பின் அந்தச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக, இதுபோன்ற ‘கிராஸ் செல்லிங்’ சேவைகளை வாடிக்கையாளர் என்ன ஏதென்று அறியாமலேயே பெற்றிருப்பார்கள். உதாரணமாக, கிரெடிட் கார்டு ஆண்டு சந்தாவுடன் சில வங்கிகள் விபத்துக் காப்பீட்டு பாலிசியைச் சேர்த்துத் தருகின்றன. இதை அந்த வாடிக்கையாளர் அறியாமல் இருப்பார். அவர் விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் அடைந்தாலோ, அவருக்கு மரணம் ஏற்பட்டாலும் அவருடைய குடும்பத்தார் பாலிசியை க்ளெய்ம் செய்ய முடியும்.

ஆனால், அந்த வாடிக்கையாளர் நாமினி விவரங்களைச் சரியாகத் தெரிவிக்காமல் இருப்பார். குடும்ப உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற காப்பீடு எடுத்தது தெரியாமலே இருக்கும். அதனால் அந்தக் குடும்பத்துக்கு அந்த வாடிக்கையாளர் எடுத்த காப்பீட்டின் பயன் கிடைக்கப் பெறாமல் போய்விடும்.

அதனால் கடன் பெற்ற அனைத்து வாடிக்கை யாளர்களும் இதுபோன்ற பிற சேவைகளைத் தாங்கள் வாங்கியிருக்கிறோமா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோன்ற சேவைகளைப் பெற்றிருந்தால் அதைக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். வங்கிகளில் சரியான நாமினி விவரங்களைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது வாடிக்கையாளர் செலுத்திய பணத்துக்கு உண்டான சேவைகளை முழுமையாகப் பெற முடியும்.

வங்கி ஊழியர்களுக்கும் பொறுப்பு உண்டு

இன்று பல நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே உள்ள போட்டி காரணமாகவும், லாபத்தை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படாத பல சேவைகளை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள். இதை வாடிக்கையாளர்கள் உணர்ந்து வங்கி ஊழியர்களிடம் பேசி தனக்குத் தேவை இல்லாத சேவைகளுக்குத் தம்மால் பணம் செலுத்த முடியாது என்று உறுதியாகக் கூறுவது அவசியம்.

வங்கி ஊழியர்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. ஏற்கெனவே வாடிக்கையாளர் நிதித் தேவைகளுக்காகத்தான் நகைகளையோ, சொத்துகளையோ அடமானமாக வைத்து கடன் பெறுகிறார். அதனால் அவருக்கு விற்கப்படும் பிற சேவைகள் அவருக்குத் தேவை இருந்தால் மட்டுமே அவரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி விற்க வேண்டும். இந்தச் சேவைகளைப் பெற வாடிக்கையாளர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும், இந்தச் சேவையை வாங்கினால் மட்டும்தான் கடன் கிடைக்குமா போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism