கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி முடிய இந்திய வங்கித் துறையின் வாராக்கடன் ரூ.10,00,000 கோடிக்கும் மேல். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதில் தொடங்கி, என்ன தீர்வு என்பது வரையிலான பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற பொருளாதாரப் பத்திரிகையாளரான விவேக் கெளல். ‘பேட் மணி – இன்சைட் தி என்.பி.ஏ மெஸ் அண்ட் ஹவ் இட் த்ரெடென்ஸ் தி இண்டியன் பேங்கிங் சிஸ்டம் (Bad Money – Inside the NPA Mess and How It Threatens the Indain Banking System) என்ற இந்தப் புத்தகத்தைத்தான் இப்போது பலரும் சுடச்சுட வாங்கிப் படித்து வருகிறார்கள். வாராக்கடன் பற்றி இந்தப் புத்தகத்தில் உள்ள சுவராஸ்யமான தகவல்களில் சில...

விஜய் மல்லையாவும் நீரவ் மோடியும்...

வாராக்கடன் என்றவுடன் நம் நினைவுக்கு உடனடியாக வருவது ‘கிங் ஃபிஷர்’ விஜய் மல்லையாவும், வைர வியாபாரி நீரவ் மோடியும்தான். ஆனால், 2012-ம் ஆண்டு மார்ச் இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடனில் சுமார் 12.6% அளவுக்குக் கடன் வாங்கி திருப்பிக் கட்ட முடியாமல் இருந்த பெருங்குழுமங்கள் அதானி, எஸ்ஸார், ஜி.வி.கே, ஜி.எம்.ஆர், லான்கோ, வேதாந்தா, ரிலையன்ஸ் அடாக் (Reliance ADAG), ஜே.எஸ்.டபிள்யூ, வீடியோகான், ஜே.பி இன்ஃப்ரா ஆகியவையாகும்.

2007-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய இவை வாங்கிய கடன்களின் மதிப்பு ரூ.99,300 கோடி. ஆனால், 2012-ம் ஆண்டு இது சுமார் ரூ.5,39,500 கோடி அளவுக்கு அதிகரித்தது. நிறுவனங்கள் அதனுடைய தொழில் வளர்ச்சிக்குக் கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டக்கூடிய நிலையில் இல்லாதபோதும் வங்கிகள் தொடர்ந்து கடன் கொடுத்து வந்ததுதான் பிரச்னையானது.

அக்கறை காட்டாத அரசியல்வாதிகள்..!

பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் பதவிக் காலம் சில ஆண்டுகள்தாம் என்பதால், அவர்கள் இந்தப் பிரச்னையில் அதிக அக்கறை காட்டவில்லை. அரசானது வங்கிச் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர பல கமிட்டிகளை நியமித்தாலும் அந்தக் குழுக்களின் பரிந்துரைகளை அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அழுத்தங்களால் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப் பட்டன. ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுராம் ராஜன் பதவியேற்றாலும் 2014-ம் ஆண்டின் இறுதியில்தான் அவர் இந்தப் பிரச்னை குறித்து பேச ஆரம்பித்து அதற்கான நடவடிக்கையாக 2015-ம் ஆண்டு வங்கிகளிடையே ‘சொத்து தர மதிப்பாய்வை (Asset Quality Review)’ அறிமுகப்படுத்தினார். ‘நான் எதிர்பார்த்ததை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக வாராக்கடன் தொகை இருக்கும்’ என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் ரகுராம் ராஜன்.

பூஜாரியின் கடன் மேளா..!

இந்தியா விடுதலையான பின்பு தொழில் துறைக்குக் கடன் கொடுக்கும் பொருட்டு சில நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஐ.எஃப்.சி.ஐ (1948), எம்.ஐ.ஐ.எல் (1949), ஐ.சி.ஐ.சி.ஐ (1955), ஐ.டி.பி.ஐ (1964) போன்றவை. ஆனால், காலப்போக்கில் சாதாரண வங்கிகளும் தொழில்களுக்கு நீண்டகால கடன் கொடுக்க ஆரம்பித்தன. இதனால் பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் அதன் முக்கியத்துவத்தை இழந்தன. தொழில் துறைக்கு மட்டுமல்லாமல் சாமான்யர்களும் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜனார்த்தன் பூஜாரி நிதி மந்திரியாக இருந்த 1984-87 காலகட்டத்தில் தொடர்ந்து லோன் மேளாக்கள் நடத்தப்பட்டன. 1989-ம் ஆண்டு தேவிலால் துணை பிரதமராக இருந்த நேரத்தில் முதன்முதலாக தேசிய அளவில் விவசாயிகளுக்கான கடன் ரத்து செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.7,825 கோடிதான். ஆனால், சமீப காலத்தில் மாநில அரசுகள் தள்ளுபடி செய்த கடன்களின் மதிப்பு ரூ.2,00,000 கோடி. இதனால் 3.2 கோடி கடனாளிகள் பயனடைந்தனர். இதில் 52% பேர் விவசாயக் கடன் பெற்றவர்கள்.

கண்டுகொள்ளாத வங்கிகள்..!

1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தம் அமலுக்கு வந்தபின் சில ஆண்டுகள் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 8-9% என்ற அளவுக்கு அதிகரித்தது. இந்த வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என்று நினைத்த வங்கிகள் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சியடைய வேண்டுமென்கிற நோக்கில் மின்துறை சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, ஸ்டீல் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கு தொடர்ந்து கடன் வழங்கிவந்தன. ஆனால், அவற்றின் செயல்பாட்டை வங்கிகள் கண்டுகொள்ளவில்லை. கடன் வாங்கிய நிறுவனங்கள் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அத்துடன் சில நிறுவனங்கள் அந்தப் பணத்தை தங்களின் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தன. 2008-09-ம் ஆண்டில் கைவிடப்பட்ட, தாமதமான புதிய திட்டங்கள் சுமார் 303. இதில் தனியார் துறையைச் சேர்ந்தவை 260 ஆகும். 2009-10-ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு அளித்த கடன் தொகை சுமார் ரூ.9,18,975 கோடி. இது 2013-14-ம் ஆண்டில் ரூ.20,96,976 கோடியை எட்டியது.

என்.பி.ஏ காரணங்கள்..!

கடன் வாங்கிய நிறுவனங்கள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன?

1. எதிர்பார்த்தபடி இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொழில் துறையால் எட்ட முடியவில்லை. 2. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செய்யப் பட்டு வரும் வட்டிவிகித அதிகரிப்பு. 3. சுற்றுச் சூழல், மாசுக்கட்டுப்பாடு ஆணையங்களிட மிருந்து தொழில் தொடங்க கிடைக்கும் அனுமதியில் தாமதம். 4. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி.

ஹைமன் மின்ஸ்கி என்ற பொருளாதார நிபுணர் ‘ஸ்திரமான தன்மையேபொருளாதாரத்தை ஸ்திரமற்றத் தன்மைக்கு எடுத்துச் செல்லும்’ என்று சொன்னது உண்மை ஆகியிருக்கிறது. பொருளாதாரம் ஸ்திரநிலையில் இருக்கும்போது இன்னும் வளர்ச்சி அடையும் என எண்ணி தொடர்ந்து கொடுக்கப்பட்ட கடன் பல்வேறு காரணங்களால்பொருளாதாரத்தை ஒரு ஸ்திரமற்ற தன்மைக்குக் கொண்டு செல்ல, அது வாராக்கடன் என்ற ஒரு பெரும் பிரச்னைக்கு வழிவகுத்திருக்கிறது. இதில் ரியல் எஸ்டேட் துறை விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் விற்காத நிலை இன்னும் உள்ளது.

என்னதான் தீர்வு?

திவால் சட்டத்தின் (IBC) மூலம் அரசு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முயன்று வருகிறது. இதுபோன்ற சட்டம் இதற்குமுன் இருந்தாலும் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. வங்கி சீரமைப்புக்கு நரசிம்மம் கமிட்டி மற்றும் சில கமிட்டிகளின் பரிந்துரைகளைத் தயவு தாட்சணயமின்றி அமல்படுத்த வேண்டும். ‘‘வாராக்கடன் எனும் பிரச்னை இன்னும் வளராமல் இருக்க அரசும் நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வரி செலுத்தும் மக்களின் பணம், தவறு செய்த பொதுத்துறை வங்கிகளையும் தொழில் குழுமங்களையும் காப்பாற்ற இல்லை என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டும்’’ என ஆசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். அதுபோல, அரசானது பொதுத்துறை வங்கிகளில் அதனுடைய பங்கை 50 சதவிகிதத்துக்கும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நரசிம்மன் கமிட்டி பரிந்துரையையும் ஆசிரியர் சில இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.

அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் கருத்துகள் இன்றைய காலத்தின் கட்டாயம்!