Published:Updated:

`வருஷா வருஷம் இப்படிக் கிளப்புறீங்களேய்யா?!' - தொடர் விடுமுறை வதந்தி குறித்து வங்கி ஊழியர்கள்

பொதுவாகவே, நிதியாண்டு முடிவடையும் சமயம் அதன் கணக்கு வழக்குகளை முடிக்க வங்கிப் பணியாளர்கள் மும்முரமாகப் பணியில் ஈடுபடுவார்கள். அந்தச் சமயத்தில் விடுமுறையைப் பற்றி யோசிப்பதற்கே நேரம் இல்லை என்பதை அவர்கள் கூறவே கேட்டிருப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வருகிற மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரையில் ஒரு நாள் (30-ம் தேதி) தவிர மற்ற நாள்கள் வங்கிப் பணியாளர்களுக்கு விடுமுறை. இந்தச் செய்தி வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளாக வேகமெடுத்து வருகிறது. ஹோலிக்கு விடுமுறை, குட் ஃப்ரைடேவுக்கு விடுமுறை, சனிக்கிழமை எல்லாம் விடுமுறை என்கிற மாதிரி அந்த வாட்ஸ் அப் கார்டு வேகமாக பார்வேர்டு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு வார காலம் விடுமுறையென்றால் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ற முன்னெச்சரிகைகளை எடுத்துக்கொள்வது அவசியமல்லவா? இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை அறிய வங்கித் தரப்பினரை தொடர்பு கொண்டோம்.

Yes Bank
Yes Bank
Photo: Vikatan / Kalimuthu.P

பெரிய வெள்ளிக்கிழமையை (குட் ஃப்ரை டே) தவிர்த்து மற்ற எல்லா நாள்களும் வழக்கம் போலவே தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதாவது, இரண்டாவது நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை வழக்கமாக விடுமுறை என்றால் அதேதான் இந்த முறையும். ஹோலி பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை கிடையாது.

31 மார்ச் ஏப்ரல் 1 என இரு தினங்கள் இந்த நிதியாண்டு நிறைவடைவதாலும் புது நிதியாண்டு ஆரம்பிப்பதாலும் விடுமுறை என்று வாட்ஸ் அப் ஃபார்வார்டில் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 1 அன்று வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்குச் சென்று அடையும் சேவைகள் மட்டும் நடக்காதே தவிர அன்றும் வங்கி பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது.

Whatsapp Rumour
Whatsapp Rumour

பொதுவாகவே, நிதியாண்டு முடிவடையும் சமயம் அதன் கணக்கு வழக்குகளை முடிக்க வங்கிப் பணியாளர்கள் மும்முரமாகப் பணியில் ஈடுபடுவார்கள். அந்தச் சமயத்தில் விடுமுறையைப் பற்றி யோசிப்பதற்கே நேரம் இல்லை என்பதை அவர்கள் கூறவே கேட்டிருப்போம். ஆக, வரும் 30-ம் தேதி மட்டும்தான் வங்கிகள் செயல்படும் என வேகமெடுத்து வரும் வாட்ஸ் அப் தகவல் முழுக்க முழுக்க வதந்தியே!

''எங்க வாழ்க்கைல இப்படி அடுக்கடுக்கான லீவுகளை நாங்க பாத்ததே இல்லையா. அதுவும் கணக்கு வழக்குகளை முடிக்குற இந்த நாள்கள்லதான் இன்னும் ரொம்ப ஹெக்டிக்கா எங்களுக்கு போகும். அப்படி ஓடுற எங்களை பண்ற நக்கல் தானேங்க இந்த வாட்சாப் தகவல். ஓட்டுங்க பரவா இல்லை, ஆனா இப்படியா மனசை நோக அடிக்குற மாதிரி ஓட்டுறது? வருஷா வருஷம் கிளப்புறாங்களே யா! இதுக்கு ஒரு விடிவே கிடையாதா! என ஆதங்கப்படுகின்றனர் சில வங்கிப் பணியாளர்கள்.

இந்த வாட்ஸ் அப் செய்தியில் இருப்பது போல் வங்கிகளுக்கு விடுமுறை என்பது கிடையாது தான். ஆனால், ஊழியர்களுக்கு அப்படியல்ல. ஹோலிப் பண்டிகை தினத்தைத் தவிர்த்து மற்ற தினங்களில் வங்கிப் பணியில் ஈடுபடுவர். ஆனால், வாடிக்கையாளர் சேவையில் பாதிப்பு எற்படலாம். எனவே, அதற்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு