Published:Updated:

5 லட்சம் ஊழியர்கள் போராட்டம்... வெறிச்சோடிய வங்கிகள்!

வங்கிகளை இணைப்பதன்மூலம், பல்லாண்டுகளாக இயங்கிவந்த வங்கிகள், வங்கிக்கிளைகள் மூடப்படுவதுடன் வங்கி ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன்மூலம், வங்கித்துறை கொஞ்சம்கொஞ்சமாக தனியார்மயமாகக்கூடிய சூழல் நிலவுகிறது.

வங்கி ஊழியர்கள் போராட்டம்!
வங்கி ஊழியர்கள் போராட்டம்! ( vikatan )

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கிலும், சிக்கன நடவடிக்கையாகவும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ச்சியாக எடுத்துவருகிறது. இதன்மூலம், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதோடு, வங்கித்துறை முழுவதும் தனியார்மயமாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

Strike
Strike
Vikatan

மத்திய அரசின் இத்தகைய போக்கை எதிர்த்து, இந்தியா முழுவதுமுள்ள பொதுத்துறை வங்கி யூனியன்கள் இன்று (22, அக்டோபர், 2019) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய வங்கி ஊழியர் அமைப்புகளைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். வங்கிகள் இயங்காததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகும்நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் போராட்டத்தால் சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வங்கிகளை இணைப்பதன்மூலம் பல்லாண்டுகளாக இயங்கிவந்த வங்கிகள், வங்கிக்கிளைகள் மூடப்படுவதுடன், வங்கி ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இதன்மூலம் வங்கித்துறை கொஞ்சம்கொஞ்சமாக தனியார்மயமாகக்கூடிய சூழல் நிலவுகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை முடக்க நினைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வங்கி ஊழியர்களின் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Strike
Strike
vikatan

முன்னதாக, போராட்டத்தைக் கைவிடச் செய்வதற்காக வங்கி ஊழியர்களின் சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், அடுத்த மாதம் இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.