Published:Updated:

மக்களுக்கான வங்கிகளால்தான் பொருளாதார மறுமலர்ச்சி சாத்தியம்... எப்படி?

உள்ளூர் தேவைகளை சரிவர உணர்ந்து செயல்படக்கூடிய வங்கிகள் மிக மிக அவசியம்.

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக, கடந்த காலாண்டின் (ஏப்ரல் - ஜூன் 2019) பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்த தாகத் தகவல் வெளியாவதற்குச் சில மணித்துளிகள் முன்னதாக, இந்தியாவின் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றும் மெகா மெர்ஜர் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நிதி அமைச்சரின் தற்போதைய இந்த அறிவிப்பால், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆகக் குறையும். முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2m7r3OI

வருகிற 2024-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா உயரவேண்டும் என்றால், அதிகமாகக் கடன் உதவி வழங்கப்பட வேண்டியிருக்கும். அதற்குத் துணிச்சலுடன் முடிவெடுக்கக்கூடிய வலுவான வங்கிகள் தேவைப்படுவதால் வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் வங்கியின் (கோட்டக் மஹிந்திரா வங்கி) தலைவரான, உதய் கோட்டக், வங்கிகளின் இணைப்பு முடிவை வரவேற்றுள்ள அதே வேளையில், வங்கி ஊழியர் சங்கத்தினர் அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசின் எதிர்பார்ப்பை மெய்யாக்கும் வகையில், வங்கிகளின் இணைப்பு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடுமா?

உள்ளூர் தேவைகளை சரிவர உணர்ந்து செயல்படக்கூடிய வங்கிகள் மிக மிக அவசியம். கடந்த வாரம், மத்திய நிதி அமைச்சர் அறிவித்தபடி, வங்கிசாரா நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது நன்மை பயக்கும்.

சமீபத்தில், பெரும் தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் குறைந்த வட்டியில் எளிய முறையில் கடன் பெறும் வகையில் ரிசர்வ் வங்கியால் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சலுகைகளை வட்டிச் செலவின குறைப்பிற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட பெரு நிறுவனங்கள், பெருவாரியான புதிய முதலீடுகளைச் செய்ய முன்வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம், இந்தியச் சந்தையில் சாமான்யர்களின் தேவைகள் குறைந்துபோனது தான். பெரிய கடன்கள் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்பது காலம் தரும் பாடம்.

இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி அமைப்புசாரா தொழில் துறையையே சார்ந்துள்ளது. அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் பட்சத்தில், அவர்களின் தேவைகள் அதிகரிக்கும். அப்போது அமைப்புசார்ந்த தொழில் துறையில் தாமாகவே உற்பத்தி அதிகரிப்பதுடன் பொருளாதார மறுமலர்ச்சியும் எளிதில் கைகூடும். எனவே, அமைப்புசாரா துறையினருக்கு உரிய வங்கி சேவைகள் எளிதில் சென்றுசேர அரசு ஆவண செய்ய வேண்டும். இதற்கு உள்ளூர் தேவைகளை சரிவர உணர்ந்து செயல்படக்கூடிய வங்கிகள் மிக மிக அவசியம். கடந்த வாரம், மத்திய நிதி அமைச்சர் அறிவித்தபடி, வங்கிசாரா நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது நன்மை பயக்கும்.

bank
bank

ஆக மொத்தத்தில், பெரிய கடன்களை வழங்கி, ஒருசில மாபெரும் பணக்காரர்களை உருவாக்கும் வலுவான வங்கிகளைவிட அடித்தட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதை உறுதிசெய்யும் பொறுப்புள்ள வங்கிகள்தான் பொருளாதார மறுமலர்ச்சிக்கான அவசியத் தேவை மட்டுமல்ல, அவசரத் தேவையும்கூட. வங்கிகள் இணைப்பின்மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிய இன்னும் சில காலம் பொறுமையாக இருப்போம்!

- இது, ஆர்.மோகன பிரபு, CFA பார்வையில் நாணயம் விகடன் இதழில் வெளியான சிறப்புக் கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமே. முழுமையாக வாசிக்க > வங்கிகள் இணைப்பு... பொருளாதார முன்னேற்றதுக்கு உதவுமா? https://www.vikatan.com/news/general-news/can-merging-the-banks-help-our-economy

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு