இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்கள் ரூ.10,000-க்குமேல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க புதிய விதிமுறைகளை செப்டம்பர் 18-ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளது.

இதற்கு முன்னரே, 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.10,000-க்குமேல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்கள் தங்களது மொபைலுக்கு வரும் ஓ.டி.பி எண்ணையும் பதிவிட்ட பின்னரே பணத்தைப் பெற முடியும். ஆனால், இந்த வசதியானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே இருந்தது. தற்போது இதை மாற்றி 24 மணி நேரமாக உயர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ. இதனால் வாடிக்கையாளர்கள் வாரத்தின் எல்லா நாள்களிலும், எல்லா நேரங்களிலும் ரூ.10,000-க்குமேல் பணம் பெற டெபிட் கார்டு பின்னுடன் (PIN) மொபைலுக்கு வரும் ஓ.டி.பி-யையும் வழங்க வேண்டும்.

இந்த வசதியை இனி நாள் முழுவதும் பயன்படுத்தும்படி மாற்றியிருப்பதால், டெபிட் கார்டு பயனாளர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து தப்பிக்கலாம். மேலும், பயனாளருக்குத் தெரியாமல் பணம் எடுத்தல், போலியான கார்டைத் தயாரித்து பயன்படுத்துதல் ஆகியவற்றையும் இந்த விதிமுறையைக் கையாளுவதன் மூலம் தடுக்க முடியும்.

`நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச்’ (National Financial Switch) என்பது ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தைப் பிற வங்கி ஏ.டி.ஏம்-களுடன் இணைக்கும் நெட்வொர்க் ஆகும். பிற வங்கிகளின் ஏ.டி.எம்களுக்கு நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச் வசதி இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதால், தற்போதைய நிலையில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது!