தற்போது, நிலையான வைப்பு நிதி, என்.எஸ்.சி., தபால் அலுவலக வைப்பு நிதி போன்ற பெரும்பாலான சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்துவருகிறது. ரிசர்வ் வங்கி கடந்த 18 மாதங்களில் வட்டி விகிதத்தை ஒன்பது முறை குறைத்திருக்கிறது. அடுத்த இரண்டாண்டுகளில் வட்டி விகிதம் இன்னும் குறைய வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. மேலும், வங்கிகளின் வைப்பு நிதி வட்டி 5.5% முதல் 6.5% வரை மட்டுமே இருக்கிறது. மறுபுறம், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் பெருகிக்கொண்டே போகின்றன. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் கடன் தருவதை நிறுத்தி வருகின்றன. தவிர, கடந்த ஓராண்டு காலமாக கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் குறைவாக இருக்கிறது. சில நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திரும்பத் தராததால், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் சற்று தயங்குகிறார்கள்.

ரிசர்வ் வங்கி பத்திரங்கள்

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் சேமிப்பு பாண்ட் (சேவிங்ஸ் பாண்ட்) ஏழு வருட லாக்இன் காலத்தில் 7.75% வருமானத்தைத் தருவதால், முதலீட்டாளர்களை குறிப்பாக, மூத்த குடிமக்களை ஈர்க்கின்றன. இந்த வட்டி அரை ஆண்டுகால அடிப்படையில் வழங்கப்படுவதால் ஆர்.பி.ஐ பாண்டின் வட்டி, கூட்டு வட்டி அடிப்படையில் 7.9 சதவிகிதமாக ஆகிறது. ரிசர்வ் வங்கியின் பத்திரங்களுக்கான வட்டியை வங்கிகளின் எஃப்.டி-யுடன் ஒப்பிட்டால், 2% அதிகமாக வழங்கப்படுகிறது; பாதுகாப்பு அதிகம் என்றும் பார்க்கப்படுகிறது.

ஆனால், ஆர்.பி.ஐ பாண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வைப்பு நிதியைப்போல, முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வட்டி விகிதத்துக்கு தனிநபர் வருமான வரி அடிப்படையில் முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும் என்பதை மறக்கக் கூடாது!

கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

யார் முதலீடு செய்யலாம்?

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஆர்.பி.ஐ பாண்ட் ஏற்றதாக இருக்கும். மேலும், ஏழு வருட காலத்துக்குத் தேவையில்லாத பணத்தை ஆர்.பி.ஐ பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்து விட்டால், ஏழு ஆண்டு காலத்துக்கு எந்தக் காரணத்தைக்கொண்டும் திரும்பப் பெற முடியாது. எனவே, ஏழு ஆண்டுகளுக்குள் பணம் தேவைப்பட்டால், இந்த பாண்டில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் கடன் வசதி இல்லை. என்.ஆர்.ஐ-கள் ரிசர்வ் வங்கிப் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியாது.

இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். தபால் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.7% வருமானத்தை அளிக்கிறது. என்றாலும், ஒரு முதலீட்டாளருக்கு ரூ.15 லட்சம் வரை வரம்பு உள்ளது. அவர்கள் இந்த வரம்புக்குமேல் முதலீடு செய்ய விரும்பினால், ஆர்.பி.ஐ பத்திரங்களைத் தேர்வு செய்யலாம். மேலும், மூத்த குடிமக்கள் இடைப்பட்ட காலத்தில் பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 60-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளில் திரும்பப் பெறுமாறும், 70-80 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் திரும்பப் பெறுமாறும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்கு ஆண்டுகளில் திரும்பப் பெறுமாறும் வழிமுறை செய்யப்பட்டுள்ளது.

மாற்று முதலீட்டு வழிகள்

ரிசர்வ் வங்கிப் பத்திரங்களில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், வேறு எந்தெந்த மாற்று முதலீடுகள் உள்ளன என்பதையும் பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கிப் பத்திரங்கள் பாதுகாப்பு மற்றும் நிலையான வருவாயை வழங்கினாலும், பணப்புழக்கம் மற்றும் கால அவகாசத்தைப் பொறுத்தவரை, இது ஒரு நடுத்தரகால அவகாசத்துக்கேற்ற முதலீடாகக் கருதப்படுகிறது.

முதலீடு செய்யும் பணம் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும். சிறிதளவு ரிஸ்க் எடுக்கத் தயார்; வரி விதிப்புக்குப் பிறகு அதிக வருமானம் தேவை என நினைக்கும் முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இவை தவிர, கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் பணவீக்கத்தைச் சரிகட்டும் அளவுக்கு வருமானம் கிடைக்கும். (பார்க்க, எதிர்பக்கத்திலுள்ள அட்டவணை).

ஆகவே, ஒவ்வொரு தனிமனிதரின் முதலீட்டுக் காலம், ரிஸ்க் எடுக்கும் திறன் தனிமனிதரின் வரி விகிதம் மற்றும் பணவீக்கத்தைச் சரிகட்டும் வருமானம் போன்றவற்றை நினைவில்கொண்டு, ஆர்.பி.ஐ பாண்டுகளில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம்!