Published:Updated:

அதிகரிக்கும் வாராக்கடன்கள்: நர்ஸிங் படிப்புகளே அதிகம்... தமிழகத்தின் நிலை என்ன?

கல்விக்கடன்
கல்விக்கடன்

கல்விக்கடனைப் பொறுத்தவரை, வாராக் கடன் விகிதங்களில் வடக்கு இந்தியப் பிராந்தியங்கள் மற்றும் மேற்கு இந்தியப் பிராந்தியங்கள் முறையே 3.3% மற்றும் 3.9% பங்கு வகிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த டிசம்பர் 2020 நிலவரப்படி (2020-2021-ம் நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகள்), இந்திய வங்கிகள் அளித்த கல்விக்கடனில் வாராக்கடன் விகிதம் 9.7% என எஸ்.எல்.பி.சி (state-level bankers’ committees) தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் உள்ள வங்கிகள் மொத்தம் 23.3 லட்சம் பேருக்கு கல்விக்கடன் வழங்கியுள்ளன. இதன் மொத்த மதிப்பு 84,965 கோடி ரூபாய். இதில், சுமார் 3.5 லட்சம் பேரின் கல்விக்கடன்கள் கணக்குகள் வாராக்கடன்களாக மாறியுள்ளன. அதாவது 8,263 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடனாக மாறியுள்ளது.

கல்விக்கடன்
கல்விக்கடன்
கல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன?! #DoubtOfCommonMan

தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கிழக்கு இந்திய பகுதியில் பீகார் ஆகிய இவ்விரு மாநிலங்களில், வழங்கியிருக்கும் கல்விக்கடன்களின் வாராக்கடன் விகிதம் அதிக அளவில் இருப்பதாகவும், வாராக்கடன் அல்லாத கல்விக்கடன் என்கிற அடிப்படையில் வட இந்தியா மற்றும் மேற்கிந்திய மாநிலங்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் எஸ்.எல்.பி.சி அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், தேசிய அளவில் கல்வித் துறையில் வாராக்கடன் 9.7 சதவிகிதமாக இருக்கையில், கிழக்கு இந்தியப் பிராந்தியங்களில் இது 14.2 சதவிகிதமாகவும், தென் இந்தியப் பிராந்தியங்களில் இது 11.9 சதவிகிதமாகவும் உள்ளது. வட இந்தியப் பிராந்தியங்கள் மற்றும் மேற்கிந்தியப் பிராந்தியங்கள் முறையே 3.3% மற்றும் 3.9% வாராக் கடனில் பங்கு வகிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

வங்கிகளால் வழங்கப்பட்டிருக்கும் மொத்தக் கடன் மதிப்பில், மருத்துவம் சார்ந்த படிப்பு படிப்பதற்காக மாணவர்கள் 11.9% கடன் தொகையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, அவர்கள் வாங்கியிருக்கும் மொத்தக் கடன் 10,147 கோடி ரூபாய். அதே போல, பொறியியல் படிப்பதற்காக 39.2% கடன் தொகையை மாணவர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கடன் தொகையின் மதிப்பு 33,316 கோடி ரூபாய். நர்ஸிங் படிப்புக்கு 4.3% (ரூ.3,675 கோடி), எம்.பி.ஏ படிப்புக்கு 11.2% (ரூ.9,541 கோடி) மற்றும் இதர படிப்புக்காக 33.2% (28,286 கோடி) கடன் தொகையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கல்விக்கடன்
கல்விக்கடன்

கல்விக் கடனில் வாராக்கடன்களாக இருக்கும் கணக்குகளில் நர்ஸிங் படிப்புக்காக வாங்கிய கடன் 14.1 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. பொறியியல் படிப்புக்காகக் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாததால், அதன் வாராக்கடன் 12.1 சதவிகிதமாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எம்.பி.ஏ 7.1%, மெடிக்கல் 6.2% மற்றும் இதர படிப்புகளிலிருந்து வாராக்கடன் விகிதம் 8.4 சதவிகிதமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு