Published:Updated:

`ஆய்வில் சிக்கிய கள்ள நோட்டுகள்!'- ரிசர்வ் வங்கியை அதிர்ச்சியடைய வைத்த தஞ்சை வங்கிகள்

வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி, காட்சிகளை கொண்டு யார் அதிகளவில் பணம் டெபாசிட் செய்துள்ளார்கள் அதிக முறை வங்கிக்கு வந்துள்ள வாடிக்கையாளர்கள் யார் சந்தேகத்துகிடமான வகையில் யாராவது வந்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

representational image
representational image

தஞ்சாவூரில் உள்ள வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு வந்த பணத்தில் நான்கு வங்கிகளின் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இது வங்கிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

representational image
representational image

தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களால் செலுத்தபடும் பணம் சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்படுவது வழக்கம். வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன்படி அதிகாரிகள் பணத்தை ஆய்வு செய்த போது தஞ்சை வங்கிகள் சிலவற்றில் இருந்து வந்த பணத்தில் 37 கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குறிப்பாக 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து, கடந்த ஜனவரி மாதத்தில் வரப்பெற்ற பணத்தில் 3 கள்ள நோட்டுகளும், ஜூன் மாதத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் இந்தியன் வங்கிகளிலிருந்தும் மற்றும் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியிலிருந்தும் வந்த பணத்தில் 28 கள்ள நோட்டுகளும், ஆகஸ்ட் மாதத்தில் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் இருந்து வரப்பெற்ற பணத்தில் 6 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

representational image
representational image

இது குறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர், தஞ்சாவூர் மாவட்ட குற்றபிரிவு போலீஸாரிடம் சில தினங்களுக்கு முன்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி, காட்சிகளை கொண்டு யார் அதிகளவில் பணம் டெபாசிட் செய்துள்ளார்கள். அதிக முறை வங்கிக்கு வந்துள்ள வாடிக்கையாளர்கள் யார் சந்தேகத்துகிடமான வகையில் யாராவது வந்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் கள்ள நோட்டு என தெரியாமலேயே வங்கியில் செலுத்தினார்களா என்கிற வகையிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.