வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குகிறவர்கள் பயன் பெறும் வகையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ. அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளை அணுகி கடன் தொகை, வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, பிணை, கைப்பணம் (Down Payment) பலவகைக் கட்டணங்கள் முதலானவற்றைக் கேட்டறிந்து,வங்கி தருவதாகச் சொல்லும் சலுகைகளை எழுத்துபூர்வமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை நன்கு படித்துப் பார்த்து தனக்கு உடன்பாடு என்றால் மட்டுமே கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.

கடன் நிபந்தனைகள் பற்றிய தெளிவு இல்லாமல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது பின்விளைவு களுக்குக் காரணமாகிவிடும் என்பதே ரிசர்வ் வங்கியின் அறிவுரை. அதிலும் குறிப்பாக, தற்போதைய வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, வட்டி விகிதம் மாறுதல், வட்டி விகிதத்தை நிர்வகிக்கும் முறை முதலானவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் எஸ்.பி.ஐ வங்கி, வீட்டுக் கடன் தொடர்பான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தெந்த நோக்கங்களுக்காக வீட்டுக் கடன் பெற முடியும், சொத்து மதிப்பில் கடன் தொகையின் சதவிகித அளவு, வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதம் (Floating rate of interest), நிலையான வட்டி விகிதம் (Fixed rate of interest), வட்டி விகித மாறுதல் பற்றிய வங்கியின் அறிவிப்பு, அபராத வட்டி உட்பட அனைத்து விவரங் களும் தரப்பட்டுள்ளன.

இவற்றுள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, வட்டி விகிதத்தில் செய்யப்படும் மாற்றம் குறித்த நடைமுறையைத்தான். அதாவது, கடன் பெறுபவர் வீட்டுக்கடனைத் தேர்வு செய்யும்போது, மாறுபடும் வட்டி விகிதம் மற்றும் நிலையான வட்டி விகிதம் என இரண்டு வகை வட்டிக் கணக்கீட்டு முறையில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

மாறுபடும் வட்டி விகிதம் என்பது எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of Funds based Lending Rate) அடிப்படையில் இருக்கும். இந்த எம்.சி.எல்.ஆர் மாறும்போதெல்லாம் வீட்டுக் கடனுக்கான வட்டியும் மாறும்.

இதன் அடிப்படையில், எஸ்.பி.ஐ வங்கியானது நினைக்கும் பட்சத்தில், கடனுக்கான இ.எம்.ஐ தொகையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்; அல்லது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கலாம்.

நிலையான வட்டி விகிதக் கடன் என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கால இடைவெளிக்குப் பிறகு, அப்போது நிலவும் நிலையான வட்டி விகிதத்தின்படி வட்டியை மறுநிர்ணயம் செய்யப்படும். இதில் கால இடைவெளி எவ்வளவு என்று தீர்மானிப்பதும் எஸ்.பி.ஐ வங்கிதான். மேலும், வழக்கத்துக்கு மாறாக வட்டி விகிதம் ஏறியிறங்கினால் (Major Volatility), தனது பிரத்யேக உரிமையின் படி, வங்கியானது வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கலாம். அந்தத் தேதி முதல் வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்படும். நிலையற்றதன்மை நிலவுகிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பிரத்யேக உரிமையும் இந்த வங்கிக்கு உண்டு.

இவ்வாறு மாற்றப்படும் வட்டி விகிதத்துக்கு கடன் பெற்றவர் உடன் படாதபட்சத்தில், மாறுபட்ட வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு கிடைத்ததில் இருந்து 15 தினங் களுக்குள் கடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம்.

சுருக்கமாக, எந்த வகை வீட்டுக் கடன் பெறுவதாக இருந்தாலும் கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிடும்முன், சுமார் 50 பக்கங்கள் கொண்ட ஒப்பந்தப் பத்திரத்தை நன்கு படித்துப் பார்த்து சந்தேகம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், வீட்டுக் கடன் வாங்கிய பிறகு, நாம் இந்த விஷயத்தை எல்லாம் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற மாதிரியான மனக்குறைகள் இல்லாமல் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்!