Published:Updated:

``வங்கிகள் திவாலானால் இனி டெபாசிட் இன்ஷூரன்ஸ் ₹5 லட்சம் கிடைக்கும்!" - ஒப்புதல் அளித்த மத்திய அரசு

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு, வங்கி வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு இந்தியா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு வங்கி திவாலாகும்பட்சத்தில் அதில் டெபாசிட் செய்திருப்பவர்களைப் பாதுகாக்கவும், வங்கி அமைப்புமீது நம்பிக்கையை ஏற்படுத்தி வங்கித் துறையின் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டுவதற்கும் 1960-ம் ஆண்டு, `டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்டது.

1978-ம் ஆண்டு, வைப்புத் தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வங்கி வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டி.ஐ.சி.ஜி.சி-Deposit Insurance and Credit Guarantee Corporation) தொடங்கப்பட்டது.

பணம்
பணம்
கூடுதல் பணத்தை அச்சிடுவது நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய உதவுமா? உண்மை என்ன?

இந்த அமைப்பானது, இந்தியாவிலுள்ள அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் காப்பீடு வழங்குகிறது. உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு, வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.

டெபாசிட் காப்பீட்டுத் தொகை கடைசியாக மே 1, 1993-ம் ஆண்டில் ரூ.30,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு வெளிவந்த சர்வதேச வைப்புநிதிக் காப்பீட்டாளர் சங்கத்தின் அறிக்கையில், உலகிலேயே குறைந்த வைப்புநிதிக் காப்பீடு வரம்பை வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற அதிர்ச்சித் தகவலைக் குறிப்பிட்டது.

அதன் பிறகு, இந்தக் காப்பீட்டுத் தொகை வரம்பை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுப் பெற்றன. இந்நிலையில்தான், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்.பி.ஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கான ஒப்புதலைத்தான் தற்போது அமைச்சரை குழு வழங்கியிருக்கிறது.

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``நிதி நெருக்கடியால் முடங்கும் வங்கிகளில் டெபாசிட் வைத்திருப்போருக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெபாசிட் திட்டம்
டெபாசிட் திட்டம்
அவசரகால நிதி... லிக்விட் ஃபண்ட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்... எந்த முதலீடு சரி..?

இந்த மசோதாவின்படி, அனைத்து வங்கி டெபாசிட்டுகள், அனைத்து வர்த்தக வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் ஆகியவை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவரப்படும். ஒருவேளை வங்கிகள் முடக்கப்பட்டால், வங்கி முடக்கப்பட்டு 90 நாள்களுக்குள் காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றார்.

இந்த மசோதா நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஒரு வங்கி திவாலான பிறகு, அதன் வாடிக்கையாளருக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம். ஒருவர், ஒரே வங்கியின் பல கிளைகளில் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு தனிநபருக்கான காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பு ரூ.5 லட்சம் மட்டுமே. அதே சமயம், வெவ்வேறு வங்கிகளில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் தனித்தனியாக இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு