Published:Updated:

குறையாத வீட்டுக் கடன் வட்டி... வங்கிகளிடம் பேசி குறைக்கும் வழிமுறைகள்!

வீட்டுக் கடன் 
வட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன் வட்டி

டாக்டர் ஒருவர் தனியார் வங்கியொன்றில் வாங்கிய வீட்டுக் கடன் குறித்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது!

மீபத்தில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்த ஆனந்த் என்பவர், கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு தீக்குளித்து உயிரிழந்தார்.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு பிரச்னை எழுந்துவிட்டது. மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் தனது வீட்டுக் கடன் குறித்து உரையாடிய ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ்அப்களில் வைரலாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் பல வருடங்கள் தவணைத் தொகையைச் செலுத்தியும், கடன் பெரிதாகக் குறையவில்லை என்பதுதான் அந்த டாக்டரின் வருத்தமாக உள்ளது. கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்த பிறகும், வங்கிகள் வட்டியைக் குறைக்காதது தான் இதற்கு முக்கியக் காரணம் என்ற செய்தி இந்த வைரல் ஆடியோ மூலம் பலருக்கும் சென்றடைந்திருக்கிறது.

குறையாத வீட்டுக் கடன் வட்டி... வங்கிகளிடம் பேசி குறைக்கும் வழிமுறைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வட்டியைக் குறைக்காத வங்கிகள்..!

வட்டி விகிதம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சப்ளை, டிமாண்ட் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கிறது. ரிசர்வ் வங்கி சில நேரத்தில் வட்டியை உயர்த்தும்; சில நேரத்தில் வட்டியைக் குறைக்கும்; சில நேரத்தில் வட்டியை ஏற்றி, இறக்காமல் அப்படியே விட்டுவிடும்.

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தபின், அந்த வட்டிக் குறைப்பை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று பலமுறை கூறி, இந்தத் தாமதத்தைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சி செய்துவருகிறது. ஆனால், வட்டி குறைக்கப்பட்டவுடன் அந்தப் பலனை வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் அளிப்பது வங்கிகளுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

பொதுவாக, நமது ரிசர்வ் வங்கி பல பொருளாதார பாராமீட்டர்களை அடிப்படை யாக வைத்து வட்டியை ஏற்றுகிறது அல்லது இறக்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.50% வட்டியை (ரெப்போ ரேட்டை) ஆர்.பி.ஐ குறைத்துள்ளது. வங்கிகளுக்கு ஒருபக்கம் தாங்கள் வாங்கும் டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்க வேண்டும்; மறுபக்கம் தாங்கள் கொடுக்கும் கடன்களுக்கு வட்டியை வசூலிக்க வேண்டும். இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அந்த வங்கி கொண்டுள்ள சொத்துகளால் வகுக்கும்போது கிடைப்பதுதான் நிகர வட்டி மார்ஜின் (Net Interest Margin) என அழைக்கப்படுகிறது.

நமது வங்கிகள், ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தவுடன், டெபாசிட்டுகளுக்கான வட்டியைப் பெரும்பாலான நேரத்தில் உடனடியாகக் குறைத்துவிடுகின்றன. ஆனால், வங்கிகள் தந்திருக்கும் கடனுக்கான வட்டியையும் குறைக்கிறதா என்றால், அப்படிச் செய்வதில்லை. உதாரணமாக, டெபாசிட் வட்டி விகிதத்தை 0.50% குறைத்தால், வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம்தான் குறைக்கின்றன, அதுவும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துதான் செய்கின்றன. அவ்வாறு குறைத்தாலும் அந்த வட்டிக் குறைப்பு புதிதாக வழங்கப்படவிருக்கும் கடன்களுக்கு மட்டும்தான், பழைய கடன்களுக்கு அல்ல என்று சொல்லிவிடுகின்றன. இதனால்தான் கடன் வாங்கியவர்கள் ரிசர்வ் வங்கி தரும் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மூன்று விதமான கடன்..!

நம் நாட்டில் வீட்டுக் கடன்கள் மூன்று விதமாக வழங்கப்படுகின்றன. அவை...

1. ஃபளோட்டிங் ரேட் கடன்கள்

2. ஃபிக்ஸட் ரேட் கடன்கள்

3. செமி ஃபிக்ஸட் ரேட் கடன்கள்

இந்த மூன்று வகைகளில் பெரும்பாலானோர் வாங்குவது ஃப்ளோட்டிங் ரேட் கடன்களைத் தான்.

ஃப்ளோட்டிங் ரேட் கடன்கள்!

ஃப்ளோட்டிங் என்பது, கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ ஏற்றும்போது கடன்களுக்கான வட்டி உயரும். வட்டி விகிதங்களை இறக்கும்போது, கடன்களுக்கான வட்டி குறையும். ஆனால், நம் நாட்டில் நடப்பது என்னவென்றால், வட்டி விகிதம் ஏறும்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆட்டோமெட்டிக்காக ஏறிவிடும். ஆனால், இறங்கும்போது வங்கிகள் தானாகவே குறைப்பது மிகமிகக் குறைவாகவே இருக்கும்.

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

உதாரணத்துக்கு, சந்தையில் 0.50% வட்டி குறைந்தால், நமது கடனில் வங்கிகள் வட்டியைக் குறைப்பது 0.05% - 0.10% என்ற அளவுக்கு மட்டுமே இருக்கும். இவ்வாறு செய்வதால் வங்கிகளின் நிகர வட்டி மார்ஜின் உயரும்; அதனால் லாபங்களும் கூடும். ஆகவே, வங்கிகள் ஃப்ளோட்டிங் ரேட் அடிப்படையிலான கடனை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் ஆர்வமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபிக்ஸட் ரேட் கடன்கள்..!

ஃபிக்ஸட் ரேட் கடன்களை பலவித காரணங்களுக்காக வங்கிகள் வாடிக்கையாளர் களுக்குத் தருவதில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதற்கு பெரிய வரவேற்பில்லை. காரணம், ஒருவர் கடன் வாங்கும்போது அன்றைய நிலைமையில் முழு ஃபிக்ஸட் ரேட் கடன்களின் வட்டி விகிதம், ஃப்ளோட்டிங் ரேட் கடன்களின் வட்டி விகிதத்தைவிட எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். ஆகவே, ஃபிக்ஸட் ரேட் அடிப் படையில் கடன் வாங்கினால் இ.எம்.ஐ தொகையை அதிகமாகச் செலுத்த வேண்டி யிருக்குமே என்று நினைத்து, பலரும் ஃப்ளோட்டிங் வட்டி விகித கடனையே தேர்வு செய்துவிடுகிறார்கள்.

ஆனால், வட்டி குறைவாக இருக்கும்போது முழு ஃபிக்ஸட் வட்டி விகிதக் கடன்களுக்கு செல்வது நன்மை பயக்கும் என்பது பலரும் புரிந்துகொள்ளாத உண்மை.

செமி ஃபிக்ஸட் ரேட் கடன்கள்!

மூன்றாவது வகையான செமி ஃபிக்ஸட் ரேட் கடன்களுக்கு ஓரளவு மக்கள் செல்கிறார்கள். முதல் ஒரு வருடத்துக்கு அல்லது மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு வட்டி விகிதம் ஃபிக்ஸடாக அதாவது, ஒரே மாதிரி மாறாமல் இருக்கும்; அதன்பின் மாறும். கடன் வாங்கியவுடன் வட்டி விகிதம் உயர்ந்தால், அதனால் ஏற்படும் அதிர்ச்சிகள் நம்மைத் தாக்காமல் இது தாங்கிக் கொடுக்கும். ஆனால், இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பவர்களும் குறைவுதான். ஆரம்பத்தில் இதன்மூலம் நன்மை கிடைத்தாலும் பிற்பாடு பாதிப்பு வருமோ என வாடிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள்.

வட்டியைக் குறைப்பது எப்படி?

சரி, வங்கிகளின் பிரச்னை ஒருபக்கம் இருக்கட்டும். நாம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்காத பட்சத்தில், அந்த வட்டியைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

இதை இரண்டு வகையாக நாம் பிரித்துக் கொள்வோம். ஒன்று, வங்கிகளிடம் பேசி வட்டி விகிதத்தைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது. மற்றொன்று, வட்டி விகிதத்தைக் குறைக்கிற பிரச்னையில் நமது மத்திய ரிசர்வ் வங்கி என்ன செய்ய வேண்டும் என்பது. முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நீங்கள் கடன் வாங்கியது எப்போது?

முதலில், நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியது அக்டோபர் 2019-க்கு முன்பாகவா அல்லது அதற்குப் பின்பாகவா என்று பாருங்கள். நீங்கள் அக்டோபர் 2019-க்கு முன்பாக வங்கிகளில் கடன் வாங்கியவர் எனில், நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வட்டி விகிதம் ஏறிவரும் காலத்தில் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. வங்கிகள் வட்டியை ஆட்டோமெட்டிக்காக ஏற்றி விடுவார்கள். அதை ஈடுசெய்ய தவணைத் தொகையை அதே அளவில் வைத்துவிட்டு, கடன் காலத்தை நீட்டித்துவிடுவார்கள்.

வீட்டுக் கடன் 
வட்டி
வீட்டுக் கடன் வட்டி

வட்டி விகிதம் இறங்கிவரும் காலத்தில் அவ்வப்போது (குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது) உங்களது கடனுக்கான வட்டி விகிதம் என்ன என்று முதலில் அறிந்து கொள்ளுங்கள். அந்த வட்டி விகிதத்தை தற்போது அதே நிறுவனம் கொடுக்கும் புதிய கடனுக்கான வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வித்தியாசம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் வங்கியை அணுகி உங்களது கடனுக்கான வட்டியை மாற்றித் தர (Reset) அதாவது, குறைத்துத் தரச் சொல்லுங்கள். அதற்கென்று உள்ள விண்ணப்பப் படிவத்தைக் கொடுப்பார்கள். அதைப் பூர்த்தி செய்து கொடுத்து, அதற்கென ஒரு கட்டணத்தைக் கொடுத்துவிட்டால் உங்களது வட்டி விகிதத்தை குறைவான ரேட்டிற்கு மாற்றித் தந்துவிடுவார்கள்.

ரீசெட் கட்டணம் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் போன்ற நிறுவனங்களில் ரூ.1,180 ஆக உள்ளது. எல்.ஐ.சி ஹவுஸிங் போன்ற நிறுவனங்கள் அதிக தொகை கேட்பதாகச் சில வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். சில வங்கிகள் நிலுவையில் இருக்கும் கடன் தொகையில் ஒரு சதவிகிதத்தைக் கட்டணமாகக் கேட்கிறார்கள். உதாரணமாக, உங்களுக்கு நிலுவையில் உள்ள கடன் ரூ.20 லட்சம் என்றால், அதற்கு 0.25% - அதாவது ரூ.5,000 + ஜி.எஸ்.டி (18%) என மொத்தம் ரூ.5,900 கேட்கிறார்கள்.

இந்தத் தொகையை நீங்கள் குறைக்கச் சொல்லி கேட்டுப் பார்க்கலாம். பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள இத்தருணத்தில் நல்ல வாடிக்கையாளர்களை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். ஆகவே, பேச்சுவார்த்தைக்கு வருவார்கள். கட்டணத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது.

இப்படி மாற்றியமைத்தாலும் தற்போதைய நிலையில் உள்ள வட்டி விகிதத்தைவிட உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். இருந்தபோலும், உங்களுடைய பழைய வட்டி விகிதத்தைவிட நிச்சயமாகக் குறைவாகவே இருக்கும்.

எம்.சி.எல்.ஆர் அல்லது ஆர்.எல்.எல்.ஆர்?

அக்டோபர் 01, 2019 வரை வங்கிகள் அனைத்தும் எம்.சி.எல்.ஆர் (MCLR - Marginal cost of funds-based lending rate) முறையில் வட்டி விகிதத்தை நிர்ணயித்தன. இந்த முறையில் வட்டிக் குறைப்பின் பலன்கள் சரியான முறையில் மக்களுக்குச் சென்றடையவில்லை என்பதற்காக நமது ரிசர்வ் வங்கி, அக்டோபர் 01, 2019 முதல் ஆர்.எல்.எல்.ஆர் (RLLR - Repo Rate Linked Lending Rate) முறையை அறிமுகப்படுத்தி வங்கிகளை அனைத்து தனிநபர் கடன்களுக்கும் (வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் மற்றும் இதரக் கடன்கள்), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு கொடுக்கும் கடன்களுக்கும் இந்த முறையைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்த முறையில் ரெப்போ ரேட்டை ஆர்.பி.ஐ குறைக்கும்போதெல்லாம், அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு வாங்கிய கடன்களுக்கு ஆட்டோமேட்டிக்காக மாறும். இந்த மாறுதல் குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பல முன்னனி வங்கிகள் மாதத்துக்கு ஒரு முறை வட்டி விகிதத்தை ரீசெட் செய்கின்றன. ஆகவே, நீங்கள் அக்டோபர் 2019-க்கு முன் வீட்டுக் கடன் வங்கி மூலம் வாங்கியிருந்தால், உங்களது வங்கியை அணுகி ஆர்.எல்.எல்.ஆர் முறைக்கு மாற்றித் தருமாறு விண்ணப்பம் செய்யுங்கள். இதற்கும் வங்கிகள் ஒரு கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த மாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமையும்.

ஆனால், ஹெச்.டி.எஃப்.சி, எல்.ஐ.சி போன்ற ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களில் இந்த ஆர்.எல்.எல்.ஆர் முறையை வாடிக்கை யாளர்களுக்குத் தருவதில்லை. இந்த முறை வங்கிகளால் மட்டுமே தரப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, ஹெச்.டி.எஃப்.சி, எல்.ஐ.சி போன்ற ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளவர்களுக்கு இந்த வகை ஆட்டோமேட்டிக் ரீசெட் அவ்வளவு நிச்சயம் இல்லை. எனவே, அவ்வப்போது நீங்கள் வைத்திருக்கும் கடனின் வட்டி விகிதத்தை சந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்து, ரீசெட் செய்துகொள்வது அவசியம் என்பதை உணருங்கள்.

ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன?

நாம் கீழே சொல்லியுள்ள விஷயங்களில் நமது மத்திய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தினால், வீட்டுக் கடன் வாங்குபவர்கள் இன்னும் பலன் பெறுவார்கள்.

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

1. ஆர்.எல்.எல்.ஆர் முறையில் கடன் வாங்காத வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகளை இ-மெயில், எஸ்.எம்.எஸ் அல்லது கடிதம் மூலம் வட்டிக் குறைப்பையும், ஆர்.எல்.எல்.ஆர் முறைக்கு மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பதையும் கட்டாயமாகத் தெரியப்படுத்தக் கூறலாம். அவ்வாறு மாற்றிக்கொள்வதால் ஏற்படும் லாபத்தையும் தெரியப்படுத்தலாம். இதனால், மதுரை டாக்டர் போன்ற பிசியான வாடிக்கையாளர்கள் பல லட்சம் பேர் லாபமடைவார்கள்.

2. ஹெச்.டி.எஃப்.சி, எல்.ஐ.சி போன்ற பெரிய ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களையும் ஆர்.எல்.எல்.ஆர் முறையைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தலாம்.

3. போட்டிகளை அதிகப்படுத்துவதன் மூலமே, வாடிக்கையாளர்களுக்கு பலன் அதிகரிக்கும். ஆகவே, கடன் கொடுக்கும் நிறுவனங்களை அதிகரிக்க, லைசென்ஸ் வழங்குவதை இலகுவாக்கி, மேலும் பல நிறுவனங்களைக் கடன் வழங்க ஊக்குவிக்கலாம்.

முடிவாக, வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைப்பது தொடர்பாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் வகையில் செயல்படுவதே, அவற்றை நீண்டகாலத்தில் லாபகரமாக இருக்கச் செய்யும்.

அதே சமயம், ‘buyer beware’ எனச் சொல்கிற மாதிரி ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும்போதும், வாங்கிய பின்னும் வாடிக்கையாளர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். வட்டி விகிதம் குறைக்கப் பட்டிருக்கிறதா அல்லது உயர்த்தப் பட்டிருக்கிறதா, இ.எம்.ஐ தொகை எவ்வளவு செலுத்துகிறோம், நாம் செலுத்தும் தொகை சரியானதுதானா என்பதையெல்லாம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சரிபார்ப்பது அவசியம். இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால்தான், பலன் அடைய முடியும் என்பதை மறக்கக் கூடாது!

எப்படிப்பட்ட நிறுவனத்தில் கடன் வாங்கியிருக்கிறீர்கள்?

வ்வொரு வங்கியும் அல்லது நிதி நிறுவனமும் லாபம் ஈட்டினால்தான், அந்த நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டை வெற்றிகரமாகத் தொடர முடியும். ஆகவே, அந்த நிறுவனங்கள் தாம் வாங்கும் கடனுக்கான வட்டி, டெபாசிட்டுகளுக்குத் தரும் வட்டி ஆகியவற்றைப் பொறுத்து, தங்களது கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்கின்றன. அதை ஆர்.பி.ஐ ஒருபோதும் தடை செய்வதில்லை. சிறிய நிதி நிறுவனங்களில் பல, சந்தையில் 15% ஆண்டு வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி, தன் வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருகின்றன. அந்த வகை நிறுவனங்கள் சந்தையில் 18 சதவிகிதத்துக்குக் கடன் வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் அஃபோர்டபிள் ஹவுஸிங் நிறுவனங்கள் (Affordable Housing Finance Companies) என அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் குறைவான வருமானம் உடைய மக்களுக்குக் கடன்களை வழங்குகின்றன. அதுபோன்ற மக்களுக்கு கடன் வரலாறு ஏதும் இருக்காது. மேலும், அவர்களுக்கு வரும் வருமானம் வங்கிக் கணக்குகள் மூலம் வராது என்பதால், அவர்களின் வருமானம், வருமான வரி வரம்புக்குள் வராது; ஆகவே, அவர்கள் வருமானவரிக் கணக்கையும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள். அது போன்றவர்கள் ஆரம்பத்ததில் சில ஆண்டுகளுக்குச் சரியாக கடனைச் செலுத்தினால், அவர்களின் சிபில் ஸ்கோர் நன்றாக உயரும். பிறகு, குறைவான வட்டிக்கு வேறு நிறுவனங்களில் தங்களது கடனை மாற்றிக்கொள்ளலாம்!

அதிக வட்டிக்கு கடன் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாம் ஏற்கெனவே சொன்னதுபோல, வங்கியை அணுகி தற்போதைய ஆர்.எல்.எல்.ஆர் முறைக்கு கொண்டுவருவதற்கு என்ன செய்ய வேண்டும் என விசாரித்து, அதற்குண்டான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஆர்.எல்.எல்.ஆர் என்பது வட்டியைக் குறைப்பதற்கு சிறந்த தேர்வு ஆகும். அவ்வாறு மாற்றுவதால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருப்பதிலேயே குறைவான வட்டி கிடைத்துவிடாது. அந்த வங்கியின் லாபத்துக்கு வேண்டிய சதவிகிதம் (spread) மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் ரிஸ்க்கைப் பொறுத்து, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெரிய வங்கிகளை ஒப்பிடும்போது, சிறிய வங்கிகளில் வட்டி விகிதம் எப்போதும் சற்று அதிகமாக இருக்கும். அதுபோல் பெரிய வங்கிகள் பணப்புழக்கம் அதிகம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கின்றன. சிறிய வங்கிகள், ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ரிஸ்க் எடுத்து சிறிய வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுக்கின்றன. மேலும், அந்நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் கடன்களுக்கும் டெபாசிட்டுகளுக்கும் கொடுக்கும் வட்டி விகிதமும் அதிகம். ஆகவே, அந்நிறுவனங்களில் கடன்களுக்கு வட்டி விகிதமும் சற்று கூடுதலாக இருக்கும்!