Published:Updated:

வாராக்கடன் அதிகரிக்குமா..? எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி..! - உண்மை நிலை என்ன?

ரிசர்வ் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
ரிசர்வ் வங்கி

BANK NPA

வாராக்கடன் அதிகரிக்குமா..? எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி..! - உண்மை நிலை என்ன?

BANK NPA

Published:Updated:
ரிசர்வ் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
ரிசர்வ் வங்கி
டந்த 29.12.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள வங்கித் துறையின் செயல் பாடுகள் குறித்த அறிக்கையில், வருங்காலத்தில் வங்கிகளின் வாராக்கடன் சவால் நிறைந்ததாக இருக்கும் என எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கை சொல்வதென்ன?

வாராக் கடன் நிலவரம்...

2019-20-ம் நிதியாண்டின் தொடக்கத்தில், ரூ.9,15,355 கோடியாக இருந்த மொத்த வாராக்கடனின் அளவு நிதியாண்டின் முடிவில் ரூ.8,99,803 கோடியாகக் குறைந்தது. இதற்கு முக்கியமான காரணம், ஒரே ஆண்டில், ரூ.2,37,876 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதே. இந்தத் தள்ளுபடி தொழில்நுட்ப ரீதியானது மட்டுமே என்றும் வாராக் கடனாளிகள் மீதான நடவடிக்கைகள் கடன் தள்ளுபடி நடவடிக்கையால் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது வங்கிகள் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் உண்மை நிலை வேறுவிதமாகத்தான் உள்ளது. 2019-20-ம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் தரப்பிலிருந்து மட்டும் ரூ.1,78,305 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்பதும் ரிசர்வ் வங்கி அறிக்கை வழங்கும் மற்றொரு தகவல். 2019-20-ம் நிதியாண்டில், ரூ.1,55,905 கோடி அளவுக்கு வாராக் கடன் வசூல் மேற்கொள்ளப்பட்டிருந் தாலும், ரூ.3,78,228 கோடி அளவுக்கு புதிய வாராக்கடன்கள் உருவாகி யுள்ளன என்பது வருத்தத்துக்குரிய தகவல் ஆகும்.

கடன் மோசடிகள் அதிகரிப்பு...

2018-19-ம் நிதியாண்டில், ரூ.64,548 கோடியாக இருந்த கடன் மோசடி அளவு, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.1,82,117 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் (2020-21) முதல் பாதியில் மட்டும், ரூ.1,10,639 கோடி அளவுக்குக் கடன் மோசடிகள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. 2017-18-ம் ஆண்டில் ரூ.22,558 கோடி அளவுக்கு மட்டுமே கடன் மோசடிகள் பதி வானது குறிப்பிடத்தக்கது. வருடா வருடம் கடன் மோசடிகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

பெருமுதலாளிகள் கவனம் தேவை..!

ஒப்பீட்டு ரீதியாக, கடந்த சில வருடங்களாகத் தொழிற்துறை நிறுவனங்களின் வாராக்கடன் விகிதாசாரம் குறைந்துவரும் அதே வேளையில் சேவைத் துறை நிறுவனங்களின் வாராக்கடன் வீதம் அதிகரித்து வருகிறது. தனிநபர் வாராக்கடன் விகிதாசாரம் அதிக வேறுபாடு இல்லாத நிலையில், விவசாயக் கடன்களில் வாராக்கடன் விகிதம் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி சொல்கிறது.

ஒப்பீட்டு ரீதியாக சிறு குறு மற்றும் மத்திய அளவு நிறுவனங்களின் வாராக்கடன் விகிதாசார அளவு கடந்த சில வருடங்களாகக் குறைந்து வருவதும் பெரு நிறுவனங்களின் வாராக்கடன் விகிதாசாரம் உயர்ந்து வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு தகவலாகும்.ரூ.5 கோடி மற்றும் அதிகமாகக் கடன் பெற்றுள்ள பெருநிறுவன வாராக் கடன்களின் பங்கு, மொத்த வாராக் கடன்களில் 79.8% அளவுக்கு உள்ள தாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வாராக்கடன் மோசடிகளில் ஈடுபட்டு வரும் பெரு முதலாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்து வதே வங்கிகளை உலுக்கிவரும் வாராக்கடன் பிரச்னைக்கு முக்கியத் தீர்வாகும்.

கொரோனா தாக்குதலும் வாராக்கடன் எச்சரிக்கையும்...

கொரோனா சிக்கலைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி வழங்கிய சிறப்புக் கடன் விடுமுறைத் திட்டம் மட்டும் இல்லையென்றால், கடந்த சில மாதங்களில் வாராக்கடன் அளவு மேலும் அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, கொரோனா பெருந்தொற்று உருவாக் கியுள்ள பொருளாதார பாதிப்புகள் வாராக்கடன் வருங் காலத்தில் அதிகரிக்க முக்கியமான காரணமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளது.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்படும் சிறு, குறு நிறுவனங் களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவியை வழங்குவது ஒட்டுமொத்த பொருளாதார மீட்சிக்கு வழி வகுப்ப துடன் வேலை இழப்புக்களைத் தவிர்க்கவும் உதவும். அதே சமயம், வங்கிக் கடன் மோசடிகளில் ஈடுபடும் நபர்களைக் கடுமையாகத் தண்டிப் பதன் மூலம் வாராக் கடன் அளவை வெகுவாகக் குறைப்பதுடன் புதிய வாராக் கடன்கள் உருவாவதையும் தடுக்க முடியும்!