Published:Updated:

ரூ.10-க்கு கிஃப்ட் வவுச்சர்... ரூ.1.6 லட்சம் மாயம்! - கே.ஒய்.சி மோசடி உஷார்!

கண்டுகொள்ளாமல் கே.ஒய்.சி விவரங்களை ஆப்பில் நிரப்பிவிட்டு, மெயிலைப் பார்த்தபோதுதான், அவர் வங்கிக் கணக்கிலிருந்து 15 கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

kyc
kyc

அவருக்கு 52 வயது. மும்பையிலிருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புராஜெக்ட் மேனேஜர். கடந்த மாதம் அவருக்கு ஒரு வங்கியின் பெயரிலிருந்து சில மெசேஜ்கள் வந்தன. 'உங்கள் இ-வாலெட்டைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால், கே.ஒய்.சி வெரிஃபை செய்யப்பட வேண்டும்' என்றன அந்த மெசேஜ்கள். இவரும் மெசேஜ் வந்த நம்பரை அழைத்துப் பேசியிருக்கிறார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2MvfBah

''இந்த கே.ஒய்.சி வெரிஃபிகேஷனை நீங்கள் ஆன்லைனிலேயே எளிதாகச் செய்துவிட முடியும். நாங்கள் சொல்லும் ஆப்பை மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்'' என்றிருக்கிறது வங்கி ஊழியர்போல எதிர்முனையில் பேசிய குரல்.

அதை நம்பி இவரும் அந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்திருக்கிறார். இந்த பிராசஸின்போது இ-வாலெட் ஆக்டிவ்வாக இருக்க வேண்டுமென்றும் இவருக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 10 ரூபாய்க்கு ஒரு கிஃப்ட் வவுச்சர் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்.

அதற்குப் பிறகு அவருக்குத் தொடர்ந்து பல ஓ.டி.பி-க்கள் (OTP) வந்திருக்கின்றன. ஏதோ தவறுதலாக வருகிறது என்று அவற்றைக் கண்டுகொள்ளாமல் கே.ஒய்.சி விவரங்களை ஆப்பில் நிரப்பிவிட்டு, மெயிலைப் பார்த்தபோதுதான், அவர் வங்கிக் கணக்கிலிருந்து 15 கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அவற்றில் ஒரு பே டிஎம் கணக்குக்கு மட்டும் 1.6 லட்ச ரூபாய் சென்றிருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர், காவல் துறையின் உதவியை நாடியிருக்கிறார்.

இதை விசாரித்த காவல்துறை, பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த ஆப்பினால்தான் இந்த மோசடி நடந்திருக்கிறது என்று தெரிவித்தது. அந்த ஆப், அவரின் மொபைல் ஸ்கிரீனில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை அப்படியே மறுமுனையில் இருப்பவருக்குக் காட்டியிருக்கிறது. அவர் 10 ரூபாய்க்கு கிஃப்ட் வவுச்சர் வாங்கியபோது கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களையும், ஓ.டி.பி-களையும் எளிதாகப் பார்த்து, பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல். இப்போது எந்தெந்த கணக்குகளுக்குப் பணம் அனுப்பப் பட்டது என்ற விவரம் பெறப்பட்டு, காவல்துறையால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

kyc
kyc

இவர் மட்டுமல்ல, அண்மையில் இந்தியா முழுக்கப் பலரும் இது போன்ற கே.ஒய்.சி (KYC) மோசடிகளில் பணத்தை இழந்திருக்கிறார்கள். உணவு டெலிவரி ஆப், வங்கி, தனியார் இ-வாலெட் எனப் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள்போலப் பேசியே இந்த மோசடிகளைச் செய்கிறார்கள் இந்த டிஜிட்டல் திருடர்கள்.

இன்று பணப் பரிவர்த்தனைகள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் அளவுக்கு எளிதாக மாறிவிட்டன. யூ.பி.ஐ (UPI) முறையில் கூகுள் பே, பே டிஎம், போன் பே என விதவிதமான வசதிகளை மக்களும் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், இவற்றிலிருக்கும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. இந்தியா டிஜிட்டல்மயமாகும்போது திருடர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன... அவர்களும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டார்கள். அப்படி அண்மையில் தலைதூக்கியிருப்பதுதான் கே.ஒய்.சி (KYC - Know Your Customer) மோசடி. தொடர்ந்து நடக்கும் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு வழிகாட்டுதலை வழங்கும் நாணயம் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க > கே.ஒய்.சி மோசடி... பணம் பறிக்கும் டிஜிட்டல் திருடர்கள்! https://www.vikatan.com/news/general-news/digital-thieves-are-targeting-kyc-details

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |