ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி பலமுறை குறைத்தும், வங்கிகள் அந்த அளவுக்குக் கடனுக்கான வட்டியைக் குறைக்கவில்லை. இதனையடுத்து, கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் என வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. மேலும், கடனுக்கான வட்டி விகிதத்தை, ரெப்போ விகிதம் போன்ற ஏதாவது ஒரு வெளிவிகிதத்துடன் இணைக்கவேண்டும் எனவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதற்கான கெடு தேதியாக வருகிற அக்டோபர் 1-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி 2019-லிருந்து ரெப்போ விகிதத்தை 1.10% புள்ளிகள் குறைத்தது. ஆனால், வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதே அளவு குறைக்கவில்லை என்பதால், இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை விரிவாகப் பார்ப்போம்.

வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல், தனிநபர் கடன் மற்றும் சிறு கடன்களுக்கான வட்டி (வீட்டுக்கடன் மற்றும் கார் கடன் முதலானவை), ஃப்ளோட்டிங் ரேட்டில் உள்ள சிறு, குறு தொழில்முனைவோர் கடன்களுக்கான வட்டி ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் ஐ.எஸ்.ஜி (Internal Study Group) பரிந்துரையின்படி, எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட்டுடன் (External Bench Mark Rate - EBMR) இணைக்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கை அடிப்படை யிலான ரெப்போ விகிதம் அல்லது எஃப்.பி.ஐ.எல் (Financial Bench Marks India Pvt Ltd - FBIL) வெளியிடும் இந்திய அரசின் 3/6 மாத முதிர்வுடைய டிரஷரி பில்லின் வருமானம் ஏதாவது ஒன்றை எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் விகிதமாக எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலைக் கொடுத்துள்ளது. வங்கிகள் ஒரே விதமான எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை, குறிப்பிட்ட ஒரு கடன் வகைக்குக் கடைப்பிடிக்க வேண்டும். வேறு வேறு வட்டி விகிதங்களை ஒரே கடன் வகைக்குப் பின்பற்றக் கூடாது.

வங்கிகள் இ.பி.எம்.ஆர்-க்கு மேல் வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொள்ள முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட கடனாளியின் கடனுக்கான ஆய்வில் கடன் ரிஸ்க் கூடுதலாக இருந்தால், அதற்கேற்ற வகையில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். இயக்கச் செலவு முதலான வட்டி விகிதம் அதிகரிப்பின் கூறுகளை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது வட்டி விகிதத்தை மறுசீராய்வு செய்யவேண்டும் என ஆர்.பி.ஐ சொல்லியிருக் கிறது. நிலுவையில் உள்ள கடன்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்தும் காலம் வரை எம்.சி.எல்.ஆர்/அடிப்படை விகிதம்/பி.பி.எல்.ஆர்-ல் தொடர்ந்து இருக்கும்; அதே நேரத்தில், இவற்றிலிருந்து இ.பி.எம்.ஆர்-க்கு மாறிக்கொள்ளலாம்.

மாறுபடும் வட்டி விகிதத்தில் முன்னதாகக் கடனை அடைப்பதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை யென்றால், மாறுவதற்கான கட்டணம் ஏதுமின்றி, இ.பி.எம்.ஆர்-க்கு மாறிக் கொள்ளலாம். எனினும், நிர்வாக மற்றும் நடைமுறைக் கட்டணங்கள் உள்ளிட்ட ஒருமுறைக் கட்டணங் களைச் செலுத்தவேண்டி வரும்.

இப்போதைக்கு ரெப்போ ரேட் ஒட்டிய வட்டிவிகிதம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சீரமைக்கப் படும் என்பதால், ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தால், கடனுக்கான வட்டி விகிதமும் குறையலாம். அதே சமயம், ரெப்போ வட்டி விகிதம் கூட்டப்பட்டால், கடனுக்கான வட்டி கூடலாம்.

ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியவர்கள், குறைவான வட்டி முதலான வேறு வசதிகளைப் பெற வேறு வங்கிக்கு மாறவேண்டுமானால், புதிய மதிப்பீட்டுச் செலவு, ஆய்வு அறிக்கைக் கட்டணம், கடன் விண்ணப்ப ஆய்வுக் கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் போன்ற செலவுகளைச் செய்ய வேண்டி யிருக்கும். இவற்றையெல்லாம் கணக்கிட்டு லாபமாக இருந்தால் மட்டுமே, புதிய நடைமுறைக்கு வேறு வங்கிக்குக் கடனை மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் கடன் இருக்கும் தற்போதைய வங்கி, ஆர்.பி.ஐ-யின் வட்டிக்குறைப்புக்கேற்ப, உங்கள் கடனுக்கான வட்டி குறைக்கப்பட வில்லை என்றால், ஏன் குறைக்கப்பட வில்லை என்று கேளுங்கள். நீங்கள் கடன் தவணையை ஒழுங்காகச் செலுத்தி வருபவர் என்றால் உங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.