Published:Updated:

`1 லட்சம் டெபாசிட்தாரர்களுக்கு ₹1,300 கோடி!' - டெபாசிட் காப்பீட்டுக் கூட்டத்தில் மோடி பேசியது என்ன?

Prime Minister Narendra Modi
News
Prime Minister Narendra Modi ( Jeff J Mitchell/Pool Photo via AP )

``வங்கி திவால் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மேலும் மூன்று லட்சம் பேருக்கு விரைவில் டெபாசிட் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட உள்ளது. பல சிறிய பொதுத்துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பதன் மூலம், அவற்றின் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை எல்லா வகையிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது."

வங்கிகள் திவாலானால் அல்லது நிதி நெருக்கடியில் சிக்கினால் டெபாசிட்தாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே இன்ஷூரன்ஸ் நிதியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த டெபாசிட் இன்ஷுரன்ஸ் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி புதிய மசோதா கடந்த 2020-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வங்கிகள் முடக்கப்பட்டால், அடுத்த 90 நாள்களில் டெபாசிட்தாரர்களுக்கு அவர்களின் டெபாசிட் இன்ஷூரன்ஸ் பணம் திரும்பக் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.

இந்தச் சட்டம் தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லி விக்யான் பவனில் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ``வங்கிகள் வளர்ச்சி அடைய, டெபாசிட்தாரர்களின் பணத்திற்குப் பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம். புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு, சுமார் ஒரு லட்சம் டெபாசிட்தாரர்களுக்கு ரூ.1,300 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வங்கி திவால் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மேலும் மூன்று லட்சம் பேருக்கு விரைவில் டெபாசிட் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட உள்ளது. பல சிறிய பொதுத்துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பதன் மூலம், அவற்றின் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை எல்லா வகையிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று பேசியிருக்கிறார்.

டெபாசிட் காப்பீடு!

ஒரு வங்கி திவாலாகும்பட்சத்தில் அதில் டெபாசிட் செய்திருப்பவர்களைப் பாதுகாக்கவும், வங்கி அமைப்புமீது நம்பிக்கையை ஏற்படுத்தி வங்கித் துறையின் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டுவதற்கும் 1960-ம் ஆண்டு, `டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்டது.

1978-ம் ஆண்டு, வைப்புத் தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வங்கி வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டி.ஐ.சி.ஜி.சி-Deposit Insurance and Credit Guarantee Corporation) தொடங்கப்பட்டது.

டெபாசிட்
டெபாசிட்

இந்த அமைப்பானது, இந்தியாவிலுள்ள அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் காப்பீடு வழங்குகிறது. உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு, வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்கத் தொடங்கிய இரண்டாவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.

டெபாசிட் காப்பீட்டுத் தொகை கடைசியாக மே 1, 1993-ம் ஆண்டில் ரூ.30,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு வெளிவந்த சர்வதேச வைப்புநிதிக் காப்பீட்டாளர் சங்கத்தின் அறிக்கையில், உலகிலேயே குறைந்த வைப்புநிதிக் காப்பீடு வரம்பை வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற அதிர்ச்சித் தகவலைக் குறிப்பிட்டது.

அதன்பிறகு, இந்தக் காப்பீட்டுத் தொகை வரம்பை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுப்பெற்றன. இந்நிலையில்தான், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்.பி.ஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கான ஒப்புதலை கடந்த 2020-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் அமைச்சரைக் குழு வழங்கியது.