Published:Updated:

"மத்தியஅரசு தொழிற்சங்க உரிமைகளை பறிக்கிறது!" - நாடு முழுவதும் நாளை வங்கி வேலை நிறுத்தம்...

வங்கி வேலை நிறுத்தம் ( Zee News )

வங்கிகளை பொறுத்தவரை இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால்தான், அவர்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்ற வங்கி பணியிட மாற்ற பாலிசி உள்ளது. இதைமீறி மத்திய இந்திய வங்கி 3,300 பேரை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள்.

"மத்தியஅரசு தொழிற்சங்க உரிமைகளை பறிக்கிறது!" - நாடு முழுவதும் நாளை வங்கி வேலை நிறுத்தம்...

வங்கிகளை பொறுத்தவரை இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால்தான், அவர்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்ற வங்கி பணியிட மாற்ற பாலிசி உள்ளது. இதைமீறி மத்திய இந்திய வங்கி 3,300 பேரை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள்.

Published:Updated:
வங்கி வேலை நிறுத்தம் ( Zee News )

ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வது, ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்காதது போன்றவற்றை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நிறுத்தம் செய்யப்போவதை அகில இந்திய சம்மேளனம் அறிவித்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம்
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம்

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது, "வங்கிகளை பொறுத்தவரை ஏதாவது ஒரு வங்கி கிளையில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்தால், ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு அவர்களை மாற்றலாம். இதன்மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர் மற்றும் வங்கி பணிகளும் சீராக செல்லும். ஆனால், இதற்கு எதிராக சில வங்கிகள் செயல்படுகிறது.

மேலும் சில வங்கிகள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால் வங்கிகள் பணி நீக்கம் செய்த ஊழியர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை. இவைகளை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

வங்கி(Bank)
வங்கி(Bank)
Freepik

அதன் பின்னர், கடந்த 10-ந் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று நேற்று வங்கிககள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 19-ந் தேதி நாடு தழுவிய ஒருநாள் வங்கி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது" என்று கூறினார்.

எஸ்.பி.ஐ வங்கியாளர் தாமஸ் பிரான்கோ
எஸ்.பி.ஐ வங்கியாளர் தாமஸ் பிரான்கோ
The Indian Express

இந்த வேலை நிறுத்தத்தை குறித்து எஸ்.பி.ஐ வங்கியாளர் தாமஸ் பிரான்கோ கூறியதாவது, "முதலாவதாக, தொழிற்சங்கங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெடரல் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டரட் வங்கி போன்ற நான்கு வங்கிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. தொழிற்சங்க தலைவர்களாக இருந்தவர்களை பணியிட மாற்றம் அல்லது பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, வங்கிகளை பொறுத்தவரை இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால்தான், அவர்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்ற வங்கி பணியிட மாற்ற பாலிசி உள்ளது. இதைமீறி மத்திய இந்திய வங்கி 3,300 பேரை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். இதுவும் ஒரு தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது.

வங்கி வேலை நிறுத்தம்
வங்கி வேலை நிறுத்தம்
Zee News

மூன்றாவதாக, பல ஒப்பந்தங்களை இன்னும் அமல்படுத்தாமல் உள்ளனர். இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் வேலைநிறுத்த போராட்டம் முக்கியமாக நடைபெறுகிறது. இந்தவேலை நிறுத்த போராட்டத்தை அகில இந்திய சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கு 9 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தொழிற்சங்க சட்டம் மற்றும் தொழிற்துறை பூசல்கள் சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஆகும்.

மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சங்க உரிமைகளை பறித்து வருகிறது. மேலும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க புதிய தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நாட்டிலும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக்கூடாது. அது மக்களின் வளர்ச்சியை பாதிக்கும்" என்று கூறினார்.

வங்கி வேலை நிறுத்தம்
வங்கி வேலை நிறுத்தம்
Zee News

மக்களே, இந்த வேலை நிறுத்த போராட்டதால் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இதனால், வேலைநிறுத்தத்தின் முந்தைய நாளான இன்றே தேவையான பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் எதாவது வங்கி பணி சனிக்கிழமை மேற்கொள்ள வேண்டியது இருந்தால், முன்னரே திட்டமிட்டு செயல்படுங்கள்!