Published:Updated:

பல்வேறு வங்கிகள் தள்ளுபடி செய்த ரூ.5.85 லட்சம் கோடி..! எங்கே போகிறது வங்கித்துறை..?

வங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கி

B A N K N P A

இனி வரவே வராது என்கிற முடிவெடுத்து, ரூ.5.85 லட்சம் கோடியை வாராக்கடன் கணக்கில் தள்ளுபடி செய்திருக்கின்றன இந்திய வங்கிகள். அதாவது, இந்தக் கடன்கள் வங்கிகளின் பேலன்ஸ்ஷீட்டிலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையாகும்.

வங்கி
வங்கி

கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.2.36 லட்சம் கோடி, 2019-2020-ம் நிதி ஆண்டில் ரூ.2.34 லட்சம் கோடி, 2020-2021-ம் நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் ரூ.1.15 லட்சம் கோடி எனத் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் கடன்களில் ரூ.68,000 கோடிதான் இதுவரை கடன் வாங்கியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. மீதமுள்ள கடனை வசூலிக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.

இந்தக் கடன்களை வாங்கியவர்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மற்றவர்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் கடனாகத் தந்த பணத்தை வங்கிகள் வசூலிக்க முடியாமல் தவிப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

போனது போகட்டும். இனியாவது வாராக் கடன் உருவாகாமல் இருக்க என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வி!