பேங்க் நிஃப்டிக்கு புதிய எக்ஸ்பைரி உள்ள கான்ட்ராக்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது செபி. பேங்க் நிஃப்டியைப் பொறுத்தவரை, தற்போது வியாபாரத்துக்கு அனுமதிக்கப் பட்டுள்ள கான்ட்ராக்டுகள் 7 வாரத்துக்கு வாரம்தோறும் எக்ஸ்பைரி ஆகும் கான்ட்ராக்டுகள் மற்றும் 3 மாதத்துக்கு மாதம்தோறும் எக்ஸ்பைரி ஆகும் கான்ட்ராக்டுகள் (நவம்பர், டிசம்பர், ஜனவரி) ஆகும்.

இந்த நிலையில், பேங்க் நிஃப்டிக்கு புதிய எக்ஸ்பைரி உள்ள கான்ட்ராக்ட்டுகளை செபி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கான்ட்ராக்ட்டுகள் மூன்று மாத முடிவில் எக்ஸ்பைரி ஆகும் வகையிலும், இந்த வகையில் நான்கு காலாண்டு கான்ட்ராக்ட்டுகளும் வியாபாரத்துக்கு கிடைக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் எக்ஸ்பைரி ஆகும் மாதங்கள் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகும்.
இந்த வகை கான்ட்ராக்ட்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒருவர் பேங்க் நிஃப்டி கான்ட்ராக்ட்டை வாங்கி அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை வைத்திருக்க முடியும். தற்போதுள்ள நிலையில், அதிகபட்சமாக மூன்று மாதங்கள் மட்டுமே வைத்திருக்க முடியும். இந்த வகை கான்ட்ராட்டுகள், நீண்டகால முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளின் மதிப்பைக் காப்பாற்ற உதவும். அதாவது, ஹெட்ஜிங் செய்ய உதவும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபங்குச் சந்தை என்பது குறுகியகாலத்தில் அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டு காணப்படும். ஆனால், நீண்டகால அடிப்படையில் சந்தையின் போக்கை அறிந்து கொள்ளவும், தெளிவான திசையை அறிந்து செயல்படவும் இந்த கான்ட்ராக்ட்டுகள் உதவும்.

இந்தக் காலாண்டு கான்ட்ராக்ட்டுகளின் லாட் அளவு அதே 25 ஆக இருந்தாலும், ஸ்டிரைக் பிரைஸ் இடைவெளி தற்போது 100 என்ற அளவிலிருந்து மாறி, 1,000 என்ற அளவில் உள்ளது. அதாவது, 24,000 என்ற ஸ்டிரைக் பிரைஸுக்குப் பிறகு 25,000-தான் வரும். எனவே, நடுவே நகரும் சலசலப்பை இந்த வகை ஸ்டிரைக் பிரைஸ்கள் பொருட்படுத்தாது.
ஆனால், குறுகியகால முதலீட்டாளர்களுக்கு இது உதவாது. தற்போது 5–1–5 என்ற ஸ்டிரைக் பிரைஸ்கள் எப்போதும் கிடைக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, இப்போது 25,000 என்பது சந்தை விலையாக இருந்தால் அதை ‘அட் தி மணி (ATM)’ என்று சொல்வோம். இதற்கு மேலே ஐந்து கான்ட்ராக்ட்டுகளும், கீழே ஐந்து கான்ட்ராக்ட்டுகளும் இருக்கும்படி தேசிய பங்குச் சந்தை பார்த்துக்கொள்ளும்.

தற்போதைய நிலையில், ஆப்ஷன்ஸ் வியாபாரம் என்பது பங்குச் சந்தையில், மற்ற வியாபாரங்களைவிட அதாவது, கேஷ் மார்க்கெட், ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டைவிட மிக அதிக அளவில் நடந்து வருகிறது.
ஆப்ஷன் வியாபாரம் என்பது பொதுவாக ஹெட்ஜிங் எனப்படும் கையில் இருக்கும் சொத்தின் மதிப்பைப் பாதுகாக்கவும், நமது ரிஸ்க்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வியாபாரம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
பேங்க் நிஃப்டியில் தற்போது அதிக மானவர்கள் வியாபாரம் செய்து வருவதால், செபி இந்தப் புதிய கான்ட்ராக்டுகளைக் கொண்டு வந்திருக்கிறது!