Published:Updated:

தொடர்ந்து நடைபெறும் வங்கி மோசடிகள்! - அதிகரிக்கும் வாராக்கடன் சிக்கல்!

வங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கி

BANK FRAUD

டிசம்பர் 18-ம் தேதி வெளிவந்த செய்திகளைப் பார்க்கும் போது, வங்கிகளின் தலைவலி இன்னும் தீர்ந்தபாடில்லை என்றே தோன்றுகிறது. இரண்டு வெவ்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.8,240 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

கனரா வங்கி, ஹைதராபாத்தில் உள்ள டிரான்ஸ் ட்ராய் (இந்தியா) என்ற கம்பெனிக்குக் கொடுத்த ரூ.7,926 கோடியும், ஸ்டேட் பேங்க் சென்னையில் உள்ள அக்னைட் எஜுகேஷன் லிமிடெட் என்ற கம்பெனிக்குக் கொடுத்த ரூ.314 கோடியும் வாராக்கடன்களாக மாறியுள்ளன.

கிரெடிட் கார்டு மோசடி, ஏ.டி.எம் கொள்ளை, காசோலை மோசடி என பலவிதமான வங்கி மோசடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வங்கிகளின் செயல்பாடு பற்றி அதிகம் அறிந்திருந்தவர்கள், பொய் யாகக் கம்பெனியைத் தொடங்கி, அதில் விற்பனையும் லாபமும் அதிகம் இருப்பதுபோல் காட்டி, வங்கிகளில் கணக்குகள் ஆரம்பித்து, வங்கிகளின் நம்பிக்கையைப் பெற்று, கடன் மேல் கடன் வாங்கி ஒரு கட்டத்தில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு இடத்தைக் காலி செய்வது தொடர்கதையாகவே இருப்பது வேதனையான விஷயம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

வங்கிகளை இப்படிச் சிலர் ஏமாற்றுகிறார்கள் என்றால், இன்னும் சிலர் தங்கள் கம்பெனியை விஸ்தரிப்ப தற்காகவும், பிற கம்பெனிகளைக் கையகப்படுத்துவதற்காகவும் வங்கி களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடன் வாங்கி, அதைப் பொறுப்பில்லாமல் கையாண்டும், சொந்த உபயோகத்துக்காக வாரி இறைத்தும் விடுகின்றனர். இதனால் அந்த கம்பெனிகள் நொடித்துப் போக, அந்த கம்பெனிகள் மட்டுமன்றி, கடன் கொடுத்த வங்கிகளும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் விஜய் மல்லையாதான். அவரிடமிருந்து வங்கிகளுக்கு வர வேண்டிய வாராக்கடன் பல ஆயிரம் கோடிகள் எப்போது திரும்ப வரும் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்!

வங்கி வரலாற்றில் ஒருகட்டம் வரை மோசடிப் பித்தலாட்டங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், புல்லுருவிகளாக முளைத்த ஒரு சில வங்கி ஊழியர்கள் மோசடியாளர் களுடன் கைகோக்க ஆரம்பித்த பின் வங்கிகள் பாடு இன்னும் திண்டாட்ட மாகியது.

ஒரு ஜூனியர் அதிகாரியின் உதவியுடன் மோசடியை ஆரம் பித்தார் நிரவ் மோடி. இன்னும் சில அதிகாரிகளையும் துணையாகக் கொண்டு, ரூ.11,700 கோடியை அபகரித்து, இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் இரண்டாம் இடத்தில் கோலோச்சிய பஞ்சாப் நேஷனல் வங்கியைப் படுபாதாளத்தில் தள்ளினார்.

வங்கி
வங்கி

ஒருசில ஜூனியர் அதிகாரிகளா லேயே இவ்வளவு லாபம் என்றால், வங்கியின் தலைவர் கடைக்கண் காட்டினால் எத்தனை லாபம் அள்ளலாம்? ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை அதிகாரி சந்தா கோச்சர் உதவியுடன் வங்கிகளைக் கொள்ளை அடித்த வீடியோகான் கம்பெனிக்கும், அவர் கணவரின் நியூ பவர் ரினியூவபிள்ஸ் கம்பெனிக்குமே வெளிச்சம்.

வங்கிகளுக்கு இது சோதனைக் காலம்தான். முகமூடிக் கொள்ளை யரைப் பிடிக்க முடியும்; முகமே காட்டாமல் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் பல கொள்ளைகளுக்கு சாட்சிகளும் இல்லை; ஆதாரங்களும் இல்லை. அதனால்தான் வங்கிகளைச் சூறையாடும் முயற்சிகளில் அறிவு நிரம்பிய திறமைசாலிகள்கூட ஈடுபடுகின்றனர்.

இந்தச் சவாலைச் சமாளிக்கவும், தண்டிக்கவும் தேவையான ஆற்றலைப் பெற வங்கிகளும், அரசு இயந்திரங்களும் முழு மூச்சுடன் முயல்கின்றன. ஆனால், திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால்... எனப் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலைதான் முணுமுணுக்கத் தோன்றுகிறது!