Published:Updated:

சிக்கலில் பி.எம்.சி... தமிழகக் கூட்டுறவு வங்கிகளின் 'பாதுகாப்பு' எப்படி?

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வங்கிகள் இல்லை. கிராமங்களில் செயல்படும் வங்கிகள் மிகவும் அருகருகே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவு.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

இந்தியாவின் முன்னணி கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & மகாராஷ்டிரா வங்கியானது ஒரே நிறுவனத்துக்கு எக்கச்சக்கமாகக் கடன் வழங்கி, பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. இதில் பணத்தைப்போட்ட மக்கள் தங்கள் பணத்தை உடனே திரும்ப எடுக்க முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/35AHuoO

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் சரியாகத்தான் இருக்கிறதா என்கிற கேள்வியைப் பலரும் எழுப்ப, கூட்டுறவு வங்கிகள் தொடர்பான பல கேள்விகளை தமிழகக் கூட்டுறவு வங்கிகளின் இணைப்பதிவாளர் அந்தோணி பீட்டரிடம் கேட்டோம். நமது கேள்விகள் அனைத்துக்கும் புள்ளிவிவரத்துடன் பதில் அளித்தார் அவர்.

"மொத்தமாக ரூ.54,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் லாபகரமாகச் செயல்படுகின்றனவா?

''தமிழகத்தில் செயல்படும் 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் ஆர்.பி.ஐ-யின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள்தான். அவற்றில், சிவகங்கை மற்றும் திருநெல்வேலியில் செயல்படும் வங்கிகள் தவிர்த்து, மற்ற அனைத்து வங்கிகளும் லாபத்தில்தான் இயங்குகின்றன. அந்த இரண்டு வங்கிகளின் நஷ்டம்கூட தற்போது ஏற்பட்டதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட நஷ்டங்கள்தான் தொடர்ந்து வருகின்றன. 128 நகரக் கூட்டுறவு வங்கிகளில் 14 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தில் இயங்குகின்றன.''

தெரிந்தவர்களுக்குக் கடன் வழங்குதல், பணியாளர்கள் பணம் கையாடல் செய்தல் எனக் கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள்மீது ஏகப்பட்டப் புகார்கள் வருகின்றனவே?

"தமிழகத்தில் மொத்தம் 4,450 தொடக்க வேளாண்மைச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் சில வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவது உண்மையே. ஆனால், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வங்கிகள் இல்லை. கிராமங்களில் செயல்படும் வங்கிகள் மிகவும் அருகருகே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவு.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

உதாரணமாக, தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு வங்கி இருக்கிறது. கிராமங்களைப் பொறுத்தவரை, கூட்டுறவு வங்கிகள் சேவை அடிப்படையில்தான் இயங்குகின்றனவே தவிர, லாப நோக்கத்துக்காக இயங்குவதில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் தரப்படுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. யாருக்காவது கடன் கிடைக்கா விட்டால், மாவட்டத் துணைப் பதிவாளரிடமும் குறைதீர்ப்புக் கூட்டங்களிலும் புகார் செய்யலாம்.''

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆகியிருக்கிறது, எவ்வளவு பணம் கடன் தரப்பட்டிருக்கிறது?

"மொத்தமாக ரூ.54,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக் குழுக்களுக்குத் தரப்பட்ட கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கடன் என மொத்தமாக ரூ.30,000 கோடி கடனாகத் தரப்பட்டுள்ளது. அதில் 90% கடன்கள் முறையாக வசூலாகின்றன.''

- கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் என்ன? கூட்டுறவு வங்கிகளில் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? - இந்தக் கேள்விகளுடன் தமிழகக் கூட்டுறவு வங்கிகள் குறித்த சில புள்ளிவிவரங்களையும் முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > தமிழகக் கூட்டுறவு வங்கிகள்... பாதுகாப்பாகச் செயல்படுகின்றனவா? https://www.vikatan.com/news/general-news/how-are-the-tamil-nadu-cooperative-banks-functioning

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |