இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (IL&FS) என்ற இந்த நிறுவனம், இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம். இந்த நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து சுமார் 2,060 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றம்சாட்டி உள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பஞ்சாப் நேஷனல் வங்கி இது குறித்து தெரிவிக்கையில், ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனம் 2,060 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளது. இந்த வங்கியிலிருந்து விதிமுறைகளின் படி ஏற்கெனவே 824.06 கோடி ரூபாயையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஐ. எல் & எஃப்.எஸ்-ன் நிலுவை தொகை 148 கோடி ரூபாய் இருப்பதாக அறிவித்தது. இந்தக் கடன் செலுத்தப்படாமல் இருந்ததால் இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.