பிரீமியம் ஸ்டோரி

ஜூலை 19, 1969... இந்த நாளில்தான் 14 வங்கிகளைத் தேசியமயமாக்கினார் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி. இதன் விளைவாக, ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு நமது ஜி.டி.பி-யின் வளர்ச்சியில் 12.2 சதவிகிதமாக இருந்த வங்கிகளின் பங்கு, கடந்த 2018-ல் 56.1 சதவிகிதமாக உயர்ந்திருப்பது ஆச்சர்யம் தரும் முன்னேற்றம்.

எஸ்.பத்மாவதி, முதன்மை பொருளாதார நிபுணர், ஐ.ஓ.பி
எஸ்.பத்மாவதி, முதன்மை பொருளாதார நிபுணர், ஐ.ஓ.பி

ஜூலை 19, 1969-ம் ஆண்டு ரூ.50 கோடி டெபாசிட் பெற்ற 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்த முக்கியமான நடவடிக்கைக்குப் பிறகு சாமானியர்களுக்கு வங்கிகள் கடன் தருவது அதிகரித்தது. கிராமப்புற மக்களுக்கும் எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் 1975-ம் ஆண்டு பிராந்திய ஊரக வங்கிகள் தொடங்கப்பட்டன. 14 வங்கிகள் தேசியமய மாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியபின், 1980-ல் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1999-ம் ஆண்டு ஏ.டி.எம் மையங்கள்மூலம் எளிதில் பணம் எடுக்க டெபிட் கார்டுகள் அறிமுகமாகின.

அரை நூற்றாண்டைக் கடக்கும் பொதுத்துறை வங்கிகள்!

2000-ம் ஆண்டுக்குப் பிறகு மகளிர் சுய உதவிக்குழு, அனைத்து மக்களையும் நிதிச் சேர்க்கைக்குள் கொண்டுவருவது (Financial Inclusion) என எல்லா மக்களுக்கும் வங்கிச் சேவை தந்து, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் இன்றைக்கு இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருக்கின்றன. வருங்காலத்தில் நம் பொருளாதார வளர்ச்சியில் நமது பொதுத்துறை வங்கிகளின் பங்கு மிகப் பெரிதாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு