Published:Updated:

ஒரே நாளில் 14 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி; என்ன காரணம்?

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அபராதமாக எஸ்.பி.ஐ-க்கு ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நம்மைப் போன்ற அப்பாவி வாடிக்கையாளர்கள் மீது எடுத்ததற்கெல்லாம் அபராதம் விதிப்பதுதான் வழக்கம். ஆனால், அப்படிப்பட்ட வங்கிகள் மீது நேற்று அபராதம் விதித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. அண்மைக் காலமாக இந்திய வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கி நிர்வாகம், கட்டமைப்பு, ஒவ்வொரு வங்கியின் கணக்கு, இயங்கும் முறை, கட்டுப்பாடுகளை முழுமையாக வங்கிகள் கடைப்பிடிக்கிறதா என்று பல்வேறு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வருகிறது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் என பாரபட்சம் பார்க்காமல் மொத்தம் 14 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ஆர்.பி.ஐ வரலாற்றிலேயே பல்வேறு வங்கிகள் மீது ஒரே நாளில் ரூ.14.50 கோடி அபராதம் விதித்தது இதுதான் முதல்முறை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கும் தகவல்தான்.

 Banking
Banking
கொரோனாவால் குறைந்த குடும்ப நிதி சேமிப்பு..! ரிசர்வ் வங்கி தகவல்...

வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC) கடன் கொடுத்தல், கடன் மற்றும் அட்வான்சஸ் பிரிவில் செய்த முறைகேடுகள், விதிமீறல்களைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி இந்த அபராதத்தை விதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் பெரும் பகுதி முறைகேடுகள் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் அதன் துணை நிறுவனக் கணக்குகள் தொடர்புடையதாக இருப்பதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

14 வங்கிகள் பட்டியல்!

எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, பாந்தன் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கிரெடிட் சுயிஸ், இந்தியன் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், கர்நாடகா பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், ஜம்மூ காஷ்மீர் பேங்க், உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளுக்கு மொத்தம் ரூ14.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இதில் அதிகபட்சமாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அபராதமாக எஸ்.பி.ஐ-க்கு ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வங்கிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது ஆர்.பி.ஐ.

அடுத்த கட்டுரைக்கு