Published:Updated:

Mastercard: ஆர்.பி.ஐ விதித்த திடீர் தடை; எந்தெந்த வங்கிகள் பாதிக்கப்படும்?

Master card
Master card ( Photo: Pixabay )

இந்தியாவில் மாஸ்டர்கார்டு நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ, ஆர்.பி.எல் போன்ற பல வங்கிகளிடம் டை-அப் செய்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு, இந்தியாவில் ஜூலை 22-ம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்குப் போதிய அவகாசம், வாய்ப்புகள் கொடுத்த பின்பும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறை என்ன?

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை, இந்தியாவிற்குள் மட்டும்தான் சேமிக்க வேண்டும்; அந்த விவரங்களை வெளிநாட்டில் இருக்கும் சர்வர்களின் சேமிக்கக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. இந்த விதிமுறையை மாஸ்டர்கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை. இதற்கு முன்பாக, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மற்றும் டைனர்ஸ் கிளப் நிறுவனத்துக்கும் கடந்த மே 1-ம் தேதி, இதே போன்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Vikatan

இந்தியாவில் மாஸ்டர்கார்டு நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ, ஆர்.பி.எல் போன்ற பல வங்கிகளிடம் டை-அப் செய்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் மொத்த கார்டு பேமென்ட் சேவையில், மாஸ்டர்கார்டு சுமார் 30% பங்கு வகிக்கிறது. ரிசர்வ் வங்கியின் தற்போதைய தடை உத்தரவால் இனி வங்கிகள் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

குறிப்பாக, ஆர்.பி.எல் பேங்க், இதுநாள் வரை, மாஸ்டர்கார்டு உடன் மட்டுமே இணைந்து, கிரெடிட் கார்டுகளை வழங்கி வந்தது. இனி தனது வங்கியில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்க விசா கார்டு சேவை நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் எனத் தெரிகிறது. இதே போல மாஸ்டர் கார்டு சேவையை, தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த வங்கிகள், விசா மற்றும் இதர கார்டு சேவை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கின்றன.

Cards
Cards
Photo: Pixabay
ஒரே நாளில் 14 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி; என்ன காரணம்?

ரிசர்வ் வங்கியின் தடையால் மாஸ்டர் கார்டு நிறுவனம், புதிய கார்டுகளை விநியோகிக்க முடியாது என்றாலும், மாஸ்டர் கார்டு வாடிக்கையாளர்களிடம் ஏற்கெனவே உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழக்கம் போல பயன்படுத்திக் கொள்லலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு