Published:Updated:

இனி 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை..! - உடனடியாக பணம் அனுப்ப எளிய வழி!

ஆர்.டி.ஜி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.டி.ஜி.எஸ்

MONEY TRANSFER

ர்.டி.ஜி.எஸ் (Real Time Gross Settlement System) சேவையானது இதுநாள் வரை வங்கியின் வேலை நாள்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இனி வங்கி வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் இந்தச் சேவை கிடைக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி, இந்தச் சேவை டிசம்பர் 14, 2020 முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

ஆண்டு முழுக்க ஆர்.டி.ஜி.எஸ் சேவையை வழங்கும் வெகு சில நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது இந்திய வங்கித் துறையின் மிகப் பெரிய வளர்ச்சி ஆகும்.

இனி 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை..! - உடனடியாக பணம் அனுப்ப எளிய வழி!

ரூ.2 லட்சத்துக்குமேல் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குப் பணம் அனுப்பும் எவ்விதக் கட்டணமும் இன்றி பணம் அனுப்பலாம். அதே நேரத்தில், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கியில் வைத்திருக்கும் கணக்குக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப ரூ.24.50 கட்டணமாகவும், ரூ.5 லட்சத்துக்குமேல் பணம் அனுப்பினால் ரூ.49.50 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாம் அனுப்பும் பணம் உடனடியாகச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த வசதியை இனி தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்!