Published:Updated:

கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் SBI வங்கி; யாரெல்லாம் பெற முடியும்?

எஸ்.பி.ஐ கவாச் தனிநபர் கடன் திட்டத்துக்கு சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தொற்றால் இந்தியா பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்த பிறகு, மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதர செலவுகளுடன் சேர்த்து, மருத்துவமனைச் செலவுகளுக்கும் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயன்பெரும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ (State Bank of India) கொரோனோ சிகிச்சைக்காகக் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடன் சலுகையை அறிவித்துள்ளது.

கடன் சுமை
கடன் சுமை

இந்த வங்கி அறிமுகம் செய்துள்ள `கவாச் பர்சனல் லோன்' (Kavach Personal Loan) என்கிற தனிநபர் கடன் திட்டத்தின் மூலம், கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்ச கடன் தொகை ரூ.25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி விகிதம் 8.5%. திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 5 ஆண்டுகள்.

இந்தக் கடன் திட்டம் குறித்து எஸ்.பி.ஐ தலைவர் தினேஷ்குமார் காரா, ``கொரோனா நெருக்கடியை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எஸ்.பி.ஐ கவாச் தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா சிகிச்சை தொடர்பான செலவுகளை எந்தவித இடையூறும் இல்லாமல் நிர்வகிக்க இந்தப் புதிய திட்டம் மக்களுக்கு உதவும் என நம்புகிறோம். இந்தக் கடன் வாடிக்கையாளரின் சுய மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனோ சிகிச்சைக்கான செலவுகளை ஈடுசெய்யும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

எஸ்.பி.ஐ கவாச் தனிநபர் கடன் திட்டத்துக்கு சம்பளதாரர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே எஸ்.பி.ஐ வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருப்பவர்களும், இந்தக் கடன் திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு