Published:Updated:

புதிய பகுதி : நெருக்கும் கடன், நிரந்தரத் தீர்வு! நிம்மதி தரும் ஆலோசனை... உங்கள் கடனைச் சொல்லுங்கள்!

SOLUTION

பிரீமியம் ஸ்டோரி
ம் நாட்டு மக்களுக்கும் சரி, உலக நாடுகளில் உள்ள மக்களுக்கும் சரி, 2020-ம் ஆண்டு சோதனை நிறைந்த சவாலான ஆண்டுதான்! உலகெங்கிலும் பல லட்சம் மக்கள் வேலையை இழந்தனர். இன்னும் பல லட்சம் பேர் தங்களது சம்பளம் கணிசமாகக் குறைந்ததையும் கண்டு வருந்தினர். பெரிய நிறுவனங்களே 40% அளவுக்கு சம்பளத்தைக் குறைத்தன. இது தமிழ்நாட்டிலேயே பல இடங்களில் நடந்தது. இதுகூட ஒரு வகையில் பரவாயில்லை, சிறு தொழில் செய்பவர்கள் பலர் தங்களது கடைகளையும் தொழில்களையும் மூடிவிட்டு, 100 ரூபாய்கூட வருமானம் இல்லாமல் சில மாதங்கள் இருந்தனர்.

திடீரென்று யாரும் எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால், பல கோடி பேர்கள் பாதிக்கப்பட்டனர். கூலி வேலை செய்பவர்களுக்கு அன்றாடச் செலவுக்குக் கூட பணம் கிடைக்கவில்லை. இன்னும் பலர், வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல் தவித்தனர். வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன் எனப் பலவிதமான கடன்களை வாங்கியவர்கள் பாடு திண்டாட்டம்தான். நமது ரிசர்வ் வங்கி ஒரு வகையில் கடன் வாங்கியவர் களுக்கு சலுகை வழங்கி ஆறு மாத காலத்துக்குக் கடனிலிருந்து காப்பாற் றியது. ஆனாலும், முழு நிவாரணம் கிடைக்கவில்லை. கட்ட வேண்டிய கடனை ஒத்திப் போட வேண்டிய கட்டாயமே பலருக்கும் ஏற்பட்டது.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

போதிய அளவு சம்பாத்தியம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்ட ஒரு பக்கம் தவிப்பு, மறு பக்கமோ பயமுறுத்திக் கொண்டிருக்கும் கடன் என மன உளைச்சலுக்கு உள்ளானவர்கள் பலர். யாரிடம் சென்று இந்தப் பிரச்னைகளைப் பேசுவது என்ற தவிக்கும் நிலையில், சொந்தக் காரர்கள் மற்றும் நண்பர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்லி குழப்பவே செய்கின்றனர். இதில் எது சரி, எது தவறு என்று நாம் அறிந்துகொள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.

புதிய பகுதி : நெருக்கும் கடன், நிரந்தரத் தீர்வு! நிம்மதி தரும் ஆலோசனை... உங்கள் கடனைச் சொல்லுங்கள்!

கடனிலிருந்து மீள இடத்தை விற்பதா அல்லது தங்கத்தை விற்பதா அல்லது கடனை மாற்றி அமைப்பதா அல்லது இருக்கும் பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை விற்பதா அல்லது இன்ஷூரன்ஸை பாலிசியை குளோஸ் செய்வதா அல்லது இவை எதுவுமே செய்யாமல் இருந்தது இருந்தபடியே சமாளிப்பதா?

இதுபோல பல குழப்பங்கள் உங்கள் மனதில் இருக்கலாம். இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு நல்ல ஆலோசனைக் காகச் செல்லலாம் என்றால், முதலில் கைதேர்ந்த ஆலோசகரைக் கண்டுபிடிப்பது பெரிய வேலை; அவ்வாறு கண்டுபிடித்தாலும் கட்டணம் அதிகமாக இருக்குமோ என்ற கவலை.

இதுபோன்ற பல குழப்பங்களை நிவர்த்தி செய்யத்தான் இந்தத் தொடர். இந்தத் தொடர் மூலம் உங்கள் கடன் பிரச்னையிலிருந்து நீங்கள் மீண்டுவரத் தேவையான ஆலோசனைகளைச் சொல்லத் தயாராக இருக்கிறேன். உங்கள் கடன் பிரச்னையை உடனே விளக்கமாக எழுதி அனுப்புங்கள்.

(கடனிலிருந்து மீள்வோம்)

செய்ய வேண்டியது என்ன?

வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், தெரிந்த வர்களிடம் வாங்கிய தனிப்பட்ட கடன் என நீங்கள் வாங்கிய கடன் எதுவாக இருந்தாலும் அந்தக் கடனை எப்போது வாங்கினீர்கள், எவ்வளவு சதவிகித வட்டிக்கு வாங்கினீர்கள், உங்களின் தற்போதைய வருமானம் எவ்வளவு, உங்களிடம் உள்ள சொத்துகள் என்ன, தங்க நகைகள் என்ன, மனை ஏதும் உண்டா, அதன் மதிப்பு எவ்வளவு என்பதை எல்லாம் விளக்கமாக எழுதி தபால் மூலமும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: நாணயம் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-02 அல்லது finplan@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். உங்கள் கடனுக்கான தீர்வு வேண்டி அனுப்பும்போது உங்கள் செல்போன் நம்பர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு