Published:Updated:

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 2 - அகலக்கால் ஆபத்து... கடன் வலையிலிருந்து மீள என்ன வழி..?

கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

வழிகாட்டும் ஆலோசனைகள்

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 2 - அகலக்கால் ஆபத்து... கடன் வலையிலிருந்து மீள என்ன வழி..?

வழிகாட்டும் ஆலோசனைகள்

Published:Updated:
கடன்
பிரீமியம் ஸ்டோரி
கடன்

SOLUTION

ம்முடைய சக்தி என்ன எனத் தெரியாமல் அகலக் கால் வைத்து கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு பிசினஸ்மேனின் அனுபவம்...

“என் பெயர் கணேஷ்குமார். நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு நகரம் ஒன்றில் ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். என் மகன் 11-ம் வகுப்பும், என் மகள் 9-ம் வகுப்பும் படிக்கிறார்கள். பாகப்பிரிவினை மூலம் கிடைத்த 14 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் வரை விற்றுக் கிடைத்த தொகை ரூ.10 லட்சத்தில்தான் கடந்த 5 ஆண்டு களுக்கு முன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 2 - அகலக்கால் ஆபத்து... கடன் வலையிலிருந்து மீள என்ன வழி..?

நிறுவனம் ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே நன்றாக முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்தது. மகிழ்ச்சியாகத் தொழிலைக் கவனித்து வந்த எனக்கு நண்பர் ஒருவரின் வடிவத்தில் சிக்கல் வந்தது. வட இந்தியாவைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்றுக்கு சப்ளை ஆர்டர் பெற்றுத் தருவதாகச் சொன்னார். போன் மூலம் ரூ.20 லட்சத்துக்கான ஆர்டரையும் பெற்றுத் தந்தார். இரண்டு மூன்று லட்சம் அளவுக்கு மட்டுமே பிசினஸ் செய்து வந்த எனக்கு இந்த பெரிய ஆர்டரை விட்டுவிட மனம் வரவில்லை.

ஒரு பிசினஸின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கடன் வாங்குவது தவறில்லை. ஆனால் போன் மூலம் ஆர்டர் பெற்றதைக் கொண்டு அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் செய்தது மகா தவறு.

20 சதவிகிதக்கு மேல் வட்டிக்குக் கடன் வாங்கி புதிதாக எந்திரங்களை வாங்கினேன். கூடுதலாக 20-க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தினேன். ரூ.10 லட்சத்துக்கு மூலப்பொருள்களை வாங்கினேன்.

ஆர்டர் செய்த அத்தனையையும் மூன்றே மாதங்களில் உற்பத்தி செய்தோம். பொருள்களை டெலிவரி செய்யும்போதுதான் பிரச்னை வந்தது. ஆர்டர் செய்த நிறுவனத்தில் சொத்து பிரச்னை ஏற்பட்டு மூன்று நிறுவனமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. எனக்கு ஆர்டர் கொடுத்தவர் டெலிவரி எடுக்கும் சூழல் இப்போது இல்லை என கூறிவிட எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் நண்பர் இப்படி ஆகும் என எதிர்பார்க்கவே இல்லை என நழுவிக்கொண்டார். உற்பத்தி செய்த அத்தனை சரக்குகளும் தேங்கிவிட்ட நிலையில் என்னால் சமாளிக்க முடியவில்லை. ஆள்களுக்கு சம்பளம் தர இயலாத சூழலில், புதிதாக வேலைக்கு சேர்த்தவர்களை நிறுத்திவிட்டேன்.

உற்பத்தி செய்த பொருள்களை என்னால் விற்க இயலவில்லை. தட்டுத் தடுமாறி பாதி அளவுக்குத்தான் தள்ளிவிட முடிந்தது. அதுவும் லாபமே இல்லாமல். இன்றைக்கு பிசினஸுக்காக வாங்கிய வங்கிக் கடன் ரூ.10 லட்சமும், வெளியில் வட்டிக்கு வாங்கிய கடன் ரூ.12 லட்சமும் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் மேலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டிய நிலை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

சொத்து என்றால் மீதமிருக்கும் 7 ஏக்கர் நிலமும், மகளுக்காக வாங்கி வைத்துள்ள 15 சவரன் நகையும் உள்ளது. குடியிருக்கும் வீடு ரூ.15 லட்சம் பெறும். தொழில் நடத்தும் நிறுவனமும் மெஷின்களும் சேர்த்து ரூ.20 லட்சம் பெறும். நிறுவனத்தை விற்றுவிடலாமா என்றுகூட யோசனையாக உள்ளது.

வளர்ந்துவரும் நிறுவனத்தை விற்காதீர்கள் என உறவினர்கள் சொல் கிறார்கள். நான் என்ன செய்வது எனக் குழப்பத்தில் இருக்கிறேன். குழந்தை களுக்காக உள்ள சொத்தை விற்றுக் கடனை அடைப்பதா, தொழில் நிறுவனத்தை விற்றுக் கடனை அடைப்பதா எனத் தெரியவில்லை. நான் என்ன செய்தால் சிக்கல் இல்லாமல் கடனிலிருந்து மீண்டு வர முடியும்? தொழில் நிறுவனத்தைத் தக்கவைத்துக் கொண்டு கடனைக் கட்டி முடிக்க ஏதாவது வழி இருக்கிறதா..? சரியான வழிகாட்டினால் உதவியாக இருக்கும்.”

இவருக்கு நம்முடைய ஆலோசனை இனி...

கடன்
கடன்

``பிசினஸில் ஜெயிக்க வேண்டும் என்றால் சமயோசித யோசனை அவசியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு பிசினஸின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், போன் மூலம் ஆர்டர் பெற்றதைக் கொண்டு அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் செய்தது மகா தவறு. ஒரு பெரிய ஆர்டரை பெறும் முன் எழுத்துபூர்வமான ஒப்பந்தம், மெயில் மூலமான பரிவர்த்தனை, கொடுத்த ஆர்டருக்கான முன்பணம் என இப்படி எதுவுமே இல்லாமல் எந்த நம்பிக்கையில் பெரிய அளவிலான முதலீட்டைக் கடன் வாங்கிச் செய்தீர்கள் என்பதுதான் வியப்பாக உள்ளது. குறிப்பிட்ட அளவுக்காவது முன்பணம் பெற்றிருந்தால் ஓரளவு நஷ்டத் தைத் தடுத்திருக்கலாம்.

நீங்கள் முதலில் அடைத்து முடிக்க வேண்டியது வெளியிடங்களில் வாங்கிய கடனைத்தான். இதைக் கட்டி முடித்துவிட்டாலே போதும், உங்களுக்கு மனரீதியாக முழு கடனையும் கட்டி முடித்த நிம்மதி வந்துவிடும்.

முன்னேற்றப் பாதையில் சென்ற உங்கள் தொழிலைப் படிப்படியாக அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றிருந்தால் நிச்சயம் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பீர்கள். எப்போதுமே சிறுதொழில் செய்கிறவர்கள் படிப்படியான வளர்ச்சியை நோக்கி நகர்வதுதான் நல்லது. பெரிதாக முயற்சி எடுக்கும் நிலையில் தன்னுடைய தாங்கும் சக்தி எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஒரே ஒரு ஆர்டருக் காகத் தொழில் கட்டமைப்பையே முற்றிலுமாக மாற்றி அமைத்தது தான் உங்களுடைய சிக்கலுக்குக் காரணம். அனுபவமே பாடம் என்பார்கள். உங்களுடைய இந்த அனுபவத்தில் இனி இது போன்ற தவறுகளை நிச்சயம் செய்ய மாட்டீர்கள். தோல்வியில்கூட நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். எனவே, இந்த வீழ்ச்சியைத் தற்காலிகமானதாக எடுத்துக் கொண்டு மீண்டு வருவதுதான் புத்திசாலித்தனம். கடன் சிக்கல் என்பதைத் தவிர உங்கள் பிசினஸில் சிக்கல் ஏதும் இல்லாத நிலையில் தொழிலைக் கைவிட வேண்டாம். புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் மூலம் பெற முயற்சி எடுத்தால் தொழிலை வளர்த் தெடுக்கலாம்.

கோவிட் காரணமாக வங்கி களில் கடன் மறு சீரமைப்பு செய்து தருகிற வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் கடன் வாங்கிய வங்கியில் பேசி ரீஸ்ட்ரெக்சர் செய்ய முயற்சி எடுத்தால் நிச்சயம் இந்த பிரச்னை தீர்ந்துவிடும். நீண்டகாலக் கடனாக மாற்றி அமைத்துக்கொண்டால் இ.எம்.ஐ குறைந்த அளவு செலுத்தினால் போதும். பிசினஸ் மூலமான வருமானத்திலிருந்தே இதைச் செலுத்திவிடலாம்.

நீங்கள் முதலில் அடைத்து முடிக்க வேண்டியது வெளியிடங் களில் வாங்கிய கடனைத்தான். இதைக் கட்டி முடித்துவிட்டாலே போதும், உங்களுக்கு மன ரீதியாக முழு கடனையும் கட்டி முடித்த நிம்மதி வந்துவிடும். இந்தக் கடன் ரூ.12 லட்சம்தான் உங்களுக்கான சுமை. உங்களிடம் உள்ள நகை 15 சவரனை விற்றால் ரூ.4.5 - 5 லட்சம் வரை கிடைக்கும். உங்கள் மகள் இப்போதுதான் 9-ம் வகுப்பு படிக்கிறார் என்பதால் நகையை, பிறகு வாங்கிக்கொள்ள முடியும். இந்தத் தொகையைக் கொண்டு கடனை அடைத்து விட்டால் மீதம் ரூ.7 லட்சம் மட்டுமே இருக்கும்.

கடன் வாங்கிய நபர்களைச் சந்தித்து சூழ்நிலையை விளக்கி செட்டில்மென்ட் பேசுங்கள். வட்டியை 12 - 13% அளவுக்குக் குறைக்கவும், எட்டு ஆண்டுகளில் செலுத்தி முடிக்கும் வகையிலும் பேசுங்கள்.

அப்படி அமையும்பட்சத்தில் மாதம் ரூ.28,000 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் தொழில் மூலம் மாதம் ரூ.60,000 - 65,000 வருமானம் கிடைக்கும்பட்சத்தில் கடன் இ.எம்.ஐ செலுத்தியது போக குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியும். படிப்படியாகத் தொழிலை மேம்படுத்திக் கொள்ளும் நிலையில் சுலபமாகக் கடன் சிக்கலிலிருந்து மீண்டுவிடலாம். இந்தச் சூழல் அமைவதில் ஏதாவது இடையூறு இருக்கும்பட்சத்தில், கடைசி முயற்சியாக உங்களிடம் உள்ள 7 ஏக்கரில் தேவைக் கேற்ப விற்றுக் கடனை அடைக்கவும். சிக்கல் இல்லாத சீரான வளர்ச்சிக்கு வாழ்த்துகள்.’’

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டு வரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

ஐந்துவிதமான அனுபவப் பாடங்கள்!

1.
படிப்படியான வளர்ச்சி சிறிய பிசினஸில் சிக்கலை ஏற்படுத்தாது.

2. பெரிய முயற்சிக்கு முன் ரிஸ்க் அனாலிசிஸ் முக்கியம்.

3. பிசினஸில் எழுத்துபூர்வமான ஒப்பந்தம், முன்பணம் இல்லாமல் ஆர்டர் எடுக்கக் கூடாது.

4. கடன் வாங்கும் முன் குறைந்தபட்ச வட்டியில் கடன் வாங்க உள்ள வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

5. கடன் வலையில் சிக்கிய பிறகு, பதற்றப்படாமல் யோசித்தால் மீண்டுவரக்கூடிய வழிகள் கண்ணுக்குத் தெரியும்.

நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 2 - அகலக்கால் ஆபத்து... கடன் வலையிலிருந்து மீள என்ன வழி..?

கோவிட் காரணமாக வங்கிகளில் கடன் மறு சீரமைப்பு செய்து தருகிற வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீங்கள்கடன் வாங்கிய வங்கியில் பேசி ரீஸ்ட்ரெக்சர் செய்ய முயற்சி எடுத்தால் நிச்சயம் இந்த பிரச்னை தீர்ந்துவிடும்.