திருமணத்துக்குப் பிறகு ஆண், பெண் என இருவருக்குமே வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்றாலும், பெண்களுக்கு மாற்றம் என்பது கொஞ்சம் அதிகம். பொதுவாகவே, திருமணத்துக்குப் பிறகான நிதி சார்ந்த மாற்றங்கள் சிலருக்கு சிக்கலான மாற்றங்களாக அமைந்து நிம்மதியைப் பறித்து விடுவதும் உண்டு. திருமணத்துக்குப் பிறகு, கடன் சுமையில் சிக்கி கலங்கி நிற்கும் திருவள்ளூரைச் சேர்ந்த சுமதி (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது), தன் நிலையை விவரிக்கிறார்.

“எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவர் ராகவன். பெரிய நிறுவனங்களுக்கு ஜாப் வொர்க் செய்துதரும் எஸ்.எம்.இ நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், சொந்த வீடு சென்னை புறநகரில் இருப்பதாகவும் ராகவனின் பெற்றோர்கள் சொன்னார்கள். என் பெற்றோரும் அவர்கள் சொன்னதை மேற்கொண்டு விசாரிக்காமல் என்னை அவருக்குத் திருமணம் செய்துகொடுத்தனர்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்துதான் பல உண்மைகள் தெரிய வந்தது. வீட்டு வசதி நிறுவனம் ஒன்றில் ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கித்தான் அவர் வீடு வாங்கி யிருந்தார். அவர் நடத்தும் தொழில் நிறுவனம் பெயரிலும் வங்கியில் ரூ.18 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதில் இன்னும் ரூ.16 லட்சம் நிலுவை யில் உள்ளது. அது தவிர, வெளியில் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி யிருந்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி இ.எம்.ஐ செலுத்தவே போனதால், குடும்பச் செலவுக்குப் போதிய பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. ‘இவ்வளவு கடனை வாங்கிவிட்டு, என்னிடம் எதுவும் சொல்லாமல் ஏன் மறைத்தீர்கள்..?’ என நான் கேட்க, ‘‘நீங்கள் சொத்து, வேலை குறித்துதான் கேட்டீர்கள்... கடன் பற்றி ஏதும் கேட்கவில்லையே’’ என்று பதில் சொன்னார்.

பிறகு பணப் பிரச்னையாலேயே எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. ஆனாலும், சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டேன். ஐ.டி நிறுவனம் ஒன்றில் நான் ரூ.45,000 சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். அவருடைய வருமானம் முழுக்க கடன் கட்டவே சரியாகப் போய் விடுவதால், என் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளைச் செய்து வந்தேன்.

ஆனால், விதியின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கும்முன் என் கணவர் விபத்து ஒன்றில் பலியாகி விட்டார். ஒரு வயதாகும் பெண் குழந்தையுடன் எப்படி வாழ்க்கையைக் கடத்துவது எனத் தடுமாறிப் போனேன். கம்பெனியை, வேலை பார்க்கும் ஊழியர்கள் பொறுப்பில் நடத்தினேன். ஊரடங்கின்போது வருமானம் குறைந்து போனதால், இ.எம்.ஐ செலுத்தவே சிரமப்பட்டேன்.

வேலை பார்த்துக்கொண்டே தொழில் நிறுவனத்தை சிரமப்பட்டுக் கவனித்தேன். ஊழியர்கள் சரியாகச் செயல்படாததால் புதிய ஆர்டர்கள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. இயந்திரங்கள் உட்பட கம்பெனியை ரூ.22 லட்சம் வரை கேட் கிறார்கள். கம்பெனியைக் கைமாற்றிவிட்டு கடனை அடைத்துவிடலாமா என்றுகூட யோசனையாக உள்ளது.

வீட்டுக் கடன் ரூ.20 லட்சம், பிசினஸ் கடன் ரூ.16 லட்சம், வெளிக்கடன் ரூ.8 லட்சம் என ரூ.44 லட்சம் கடனில் இருக்கிறோம் என நினைத்தாலே பயமாக உள்ளது. இப்போதைக்கு நான் பார்க்கும் வேலைதான் என் செலவுகளைச் சமாளிக்க உதவியாக உள்ளது. நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?”

இனி இவருக்கு நாம் வழங்கும் ஆலோசனைகள்...

“எதிர்பாராத விபத்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புக்கு அனுதாபங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொதுவாக ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டு கிறேன். திருமணத்துக்கு முன்பே பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் அவரவரின் குடும்பப் பொருளாதார நிலை களைத் தெளிவாகப் பகிர்ந்து கொள்ளும்பட்சத்தில், திருமணத் துக்குப்பிறகு, சிக்கல் வராமல் இருக்கும். சொத்து என்ன இருக்கிறது, சொந்த வீடு இருக்கிறதா, இல்லையா, என்ன வேலை / என்ன தொழில், எவ்வளவு சம்பளம் எனத் தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, கடன் எவ்வளவு உள்ளது எனத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

நீங்கள் செய்துள்ள தவறும் அதுதான். திருமணத்துக்கான முடிவை எடுக்கும் முன் குடும்பப் பொருளாதார சூழல்களைப் பகிர்ந்துகொள்வது மிக அவசியம் என்பதை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அறிந்திருக்க வில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

ஒருதரப்பினர் கேட்கவில்லை என்பதற்காக முக்கியமான விஷயங்களைச் சொல்லாமல் விடுவது மிக மிகத் தவறு. உங்கள் கணவர் தரப்பினர் கடன் விஷயத்தைச் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லி நீங்கள் பரவாயில்லை என ஏற்றுக் கொண்டிருக்கும்பட்சத்தில், பண ரீதியான பிரச்னைகளால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருக்காது. நீங்களும் முழு மனதுடன் கடன் சுமையைப் பகிர்ந்துகொண்டிருப்பீர்கள்.

சரி, நடந்தவை நடந்தவை யாக இருக்கட்டும். இன்றைய உங்கள் கடன் பிரச்னைக்கான தீர்வுகளைப் பார்ப்போம்.

உங்களுக்கு ரூ.44 லட்சம் கடன் இருக்கிறது என்பது மன ரீதியாக சுமையைக் கொடுத் துள்ளதே தவிர, கொஞ்சம் பிரச்னைக்கு வெளியில் இருந்து யோசித்தால், உங்களுக்கு பெரிதாகக் கடனே இல்லை என்றே சொல்லலாம்.

உங்கள் கணவர் நிர்வகித்து வந்த கம்பெனி, தொழில் குறித்த அனுபவம் உங்களுக்கு இல்லை என்பதாலும், அதில் ஆர்வம் இல்லை என்கிற நிலையிலும் நீங்கள் அதை விட்டு வெளியில் வருவதுதான் நல்லது. ரூ.22 லட்சத்துக்கு நிறுவனத்தைக் கேட்கிறார்கள் எனச் சொல்லி யுள்ளீர்கள். வங்கியில் கடன் பெற்றுள்ளதால், நீங்கள் வங்கியில் சொத்தை விற்றுக் கடனை செட்டில்மென்ட் செய்யும் திட்டத்தைத் தெரிவிக்கவும். வங்கியில் உங்கள் சூழலை விளக்கிச் சொல்லி கடன் தொகையைக் குறைக்க முயற்சி எடுங்கள்.

பிறகு, உங்கள் நிறுவனத்தை வாங்கத் தயாராக இருப்பவருடன் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டு, பணத்தைப் பெற்று வங்கிக் கடனை அடைத்து ஆவணங் களைப் பெற்றுக்கொள்ளவும். அடுத்து, ஒப்பந்தம் செய்தபடி உங்களுக்குப் பணம் கொடுத்த நபர் பெயருக்கு ஆவணங்களை ஒப்படைக்கவும். வங்கிக் கடன் செலுத்தியதுபோக, மீதியுள்ள தொகையைக் கொண்டு வெளிக் கடனை அடைத்து முடிக்கவும். கடன் கொடுத்தவர்களிடம் பேசி தொகையைக் குறைக்கவும்.

அடுத்து, உங்களுக்கு இருப்பது வீட்டுக் கடன் மட்டுமே. வீடு விஷயத்தில் இரண்டு விதமான முடிவுகளை எடுக்க முடியும். வீடு உங்களுக்கு வேண்டும் என்றால், உங்கள் கணவரின் குடும்பத்தாருடன் பேசி, உங்கள் பெயருக்கு வீட்டையும், வீட்டுக் கடனையும் மாற்றிக்கொள்ளவும். உங்களுக்குத் தேவையில்லை எனில், உங்கள் கணவரின் பெற்றோரிடம் வீட்டை ஒப்படைத்து, அவர்களை கடனைக் கட்டுமாறு சொல்லிவிடவும். உங்களுக்கு சின்ன வயது என்பதால், எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துகொள்ளப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் அறிவீர்கள். அதற்கேற்ப வீட்டு விஷயத்தில் முடிவை எடுக்கவும்.

வீட்டை நீங்கள் எடுத்துக்கொள்வதாக இருந்தால்கூட, நீங்கள் ரூ.45,000 சம்பளம் வாங்குவதால், உங்களுக்கு இ.எம்.ஐ செலுத்துவதில் பிரச்னை இருக்காது.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய 5 பாடங்கள்...

1. தம்பதிகள் ஆகப்போகிறவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் குடும்பப் பொருளாதார சூழ்நிலைகளைப் பகிர வேண்டும்.

2. கண்ணுக்குத் தெரியும் சொத்தை அறியும் ஆர்வம், கண்ணுக்குத் தெரியாத கடனை அறிவதிலும் இருக்க வேண்டும்.

3. பணச்சிக்கலை முதன்மையாகக் கருத ஆரம்பித்துவிட்டால், குடும்பத்தில் நிம்மதி போய்விடும்.

4. அனுபவம், ஆர்வம் இல்லாத தொழிலில் போராடிக் கொண்டிருப்பது நல்ல அணுகுமுறை அல்ல.

5. கடனைச் செலுத்தி முடிக்கும் வாய்ப்புகளைக் கண்டறியக் கற்றுக்கொண்டால், பெரிய நம்பர்களைப் பார்த்து பயம்கொள்ளத் தேவையில்லை.