எல்லோருக்குமே அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால், அதற்கான முயற்சியும் பயிற்சியும் நம்மிடம் இருக்கிறதா என ஒரு முறைக்கு 100 முறை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்காமல், ஆசை உந்தித் தள்ள அவசரக் கோலத்தில் பணத்தை அள்ளிச் செலவு செய்தால், நிலைமை என்ன ஆகும்? புதுச்சேரியைச் சேர்ந்த தினேஷ் குமாரின் (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது) பரிதாபக் கதையைக் கேளுங்கள்.

“எனக்கு வயது 30. நான் பி.இ சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தேன். சேர்ந்த ஆறே மாதங் களில் பதவி உயர்வுடன் சம்பளம் ரூ.1.5 லட்சமாக அதிகரித்தது. நல்ல சம்பளம், சலுகைகள் என இருந்தாலும் என் மனம் திருப்தி அடையவில்லை. காரணம், என்னுடன் படித்த என் நண்பன் ரவிராஜ். (பெயர் மாற்றப் பட்டுள்ளது.)

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவனுக்கும் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அவன் வேலையில் சேராமல் கட்டுமானத் தொழில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தான். பழைய வீட்டைக் குறைந்த விலைக்கு வாங்கி, சில மாற்றங்களைச் செய்து விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதித்தான். ஆண்டுக்கு ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என வருமானம் வருகிறது. அவனை விட நன்றாகப் படித்த எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. எனக்கும் பிசினஸ் செய்து கோடி களைச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்பாவிடம் சொன்னேன். அவர் ஒப்புக் கொள்ள வில்லை.

‘உன் நண்பனைப் பார்த்து முடிவு செய்வது சரியல்ல. அவன் தொழிலில் வெற்றி பெற படித்த படிப்போ, மார்க்கோ காரணம் அல்ல. அவனுடைய மாமா 40 ஆண்டுக் காலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறார். அவருடைய ஆலோசனை, பயிற்சிதான் உன் நண்பன் வெற்றிக்குக் காரணம். அனுபவம், தொடர்புகள் இந்தத் தொழிலில் ரொம்ப முக்கியம்’ எனச் சொல்லி முட்டுக்கட்டை போட்டார்.

ஆனால், நான் சமாதானம் ஆகவில்லை. கடந்த ஆண்டு வேலையை விட்டுவிட்டு, ஊருக்கு வந்து கட்டுமான நிறுவனத்தை ஆரம்பித்தேன். மனை வாங்கி, சின்னச் சின்ன அடுக்குமாடி வீடுகளைக் கட்டி விற்பதுதான் என் பிளான்.

கையில் இருந்த ரூ.20 லட்சத்துடன் அப்பாவிடம் சண்டை போட்டு வாங்கிய பூர்வீகச் சொத்து விற்ற பணம் ரூ.25 லட்சத்தையும் சேர்த்து இரண்டு கிரவுண்ட் மனை வாங்கி மூன்று அடுக்கில் 12 வீடுகள் கட்ட திட்டமிட்டு காரியங்களில் இறங்கினேன். வீடு ஒன்றின் விலை ரூ.30 லட்சம் என நிர்ணயம் செய்து எட்டு பேரிடம் தலா ரூ.5 லட்சம் முன்பணமும் வாங்கிவிட்டேன். ஓராண்டுக்குள் வீட்டைக் கட்டி ஒப்படைப்பதாக ஒப்பந்தம்.

வீட்டுக்கான பிளான் அப்ரூவல் வாங்கி கடந்த பிப்ரவரியில் வேலை களைத் தொடங்கினேன். அடுத்த ஒரு மாத காலத்துக்குள் கொரோனா ஊரடங்கு போடப்பட, கட்டுமான வேலைகள் நின்றுபோனது. வடநாட்டுப் பணியாளர்களில் பலரும் சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். கட்டுமானப் பொருள் களை மொத்தமாக வாங்கிப் போட்டு விட்டதால், பராமரிக்க முடியாமல் வீணானது. கட்டுமான வேலைகளை ஆரம்பிக்கலாம் என அரசு அனுமதி வழங்கிய நிலையிலும் என்னால் ஆள் பற்றாக்குறை, பொருள் சேதாரம் என முழுவீச்சில் வேலைகளை ஆரம்பிக்க முடியவில்லை.

பணம் கொடுத்தவர்களிடம் கொரோனா சூழ்நிலையைச் சொல்லி ஆறு மாதங்கள் கால நீட்டிப்பு செய்து புதிதாக ஒப்பந்தம் செய்து பணியாளர் களைத் திரட்டி வேலையைத் தொடங்கும் சூழலில் இன்னொரு சிக்கல் வந்து எல்லாமே முடங்கிப் போனது. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், அந்த இடம் தன்னுடையது என ஆவணங்களைக் காட்டினார். நீதிமன்றம் மூலம் கட்டுமானத்தைத் தொடர முடியாமல் தடை ஆணையையும் வாங்கி விட்டார். பிறகுதான் அது போலிப் பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது தெரிந்தது.

இப்போது வீடு வாங்கக் கொடுத்த முன்பணத்தை, பொருள்கள் வாங்கியதில் நிலுவைத் தொகை என ரூ.50 லட்சம் கடன் என் தலையில் விழுந்துவிட்டது. மனை வாங்கிய ரூ.45 லட்சம் போனது போனதுதான். மிச்ச மீதி கட்டுமானப் பொருள்களை இன்னொரு பில்டருக்கு விற்றதன் மூலம் ரூ.20 லட்சம் தேறியது. இன்னும் ரூ.30 லட்சம் இருந்தால்தான் இந்தச் சிக்கலில் இருந்து மீண்டு வர முடியும்.

அப்பாவிடம் ஏற்கெனவே சண்டை போட்டு ரூ.25 லட்சம் வாங்கிவிட்டதால், அவரிடம் பேச்சுவார்த்தை இல்லை. அப்பாவிடமே, உறவினர்களிடமோ உதவி கேட்க தயக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில், என் சூழ்நிலையை அறிந்துகொண்டதன் மூலம் நான் வேலை பார்த்த ஐ.டி நிறுவனத்தில் என்னை மீண்டும் பணிக்கு அழைக் கிறார்கள். ஆனால், என்னால் மனரீதியாகத் தயாராக முடிய வில்லை. என் வாழ்க்கையே மூழ்கும் கப்பல் போல ஆகிவிட்ட தாக உணர்கிறேன். நான் நீந்தி கரைசேர வழி ஏதும் இருக்கிறதா..?”

இனி இவருக்கு நம்முடைய ஆலோசனைகள்...

‘‘பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருப்பது தவறல்ல. ஆனால், அதற்கான அனுபவங்களைப் பெறாமல், ஆசைகளை மட்டுமே வைத்துக்கொண்டு தொழிலில் இறங்குவது ஆபத்தில் முடிய வாய்ப்பு அதிகம். உங்கள் அப்பா ஆரம்பத்திலேயே சொன்ன அறிவுரை சரிதான். அதற்காக பிசினஸ் ஆரம்பிக்கக் கூடாது எனச் சொல்லவரவில்லை.

பிசினஸ் ஆரம்பிக்க நினைப்ப வர்கள் சில விஷயங்களை அறிந்து கொண்டு அதன்பிறகு களத்தில் இறங்க வேண்டும். வளர்ந்த நாடுகளிலேயே ஆரம்பிக்கப்படும் பிசினஸ்களில் மூன்றில் இரண்டு குளோஸ் ஆகிவிடுகிறது. 33% பேர் மட்டுமே தொழிலை தொடர் கிறார்கள். அதில் வெற்றி பெறு கிறவர்களின் சதவிகிதம் இன்னும் குறைவு. இதற்கான காரணங்களை பிசினஸ் ஆரம்பிக்க நினைப்ப வர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ரிஸ்க்கைப் புரிந்து கொண்டு இறங்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

பிசினஸ் ஆரம்பிக்கும்போதே, அந்த பிசினஸ் எதிர்பார்த்தது போல நடக்காமல் போனால், என்ன செய்வது என ஒரு மாற்றுத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயாராக வைத் திருக்க வேண்டும். பொதுவாக, தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பவர்கள் மூன்று ஆண்டு களுக்கு குடும்பச் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான தொகையைக் கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். காரணம், ஒரு தொழில் நிலைத் தன்மையை அடைய குறைந்தது மூன்று ஆண்டுகளும், வளர்ச்சி யைக் கொடுக்க ஆறு முதல் ஏழு ஆண்டுகளும் ஆகும். நீங்கள் அதுபோல குடும்பச் செலவு களுக்காகத் திட்ட மிடாமல் பிசினஸ் முதலீடுகளை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டது உங்களுடைய அனுபவமின்மை யையே காட்டுகிறது.

நீங்கள் ஆரம்பித்த ரியல் எஸ்டேட் பிசினஸ் பல நுட்பங்களைக் கொண்டது. அதில் உங்களுக்குப் போதிய அனுபவம் இல்லாதபட்சத்தில் அனுபவம் உள்ள நபர்களை பார்ட்னர்களாக இணைத்துக் கொண்டு ஆரம்பித்திருந்தாலும் ரிஸ்க் குறைந்திருக்கும்.

சரி, போனது போனதாகவே இருக்கட்டும். இனி என்ன செய்வது எனப் பார்ப்போம்.

ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனத்தில் மீண்டும் வேலைக்கு அவர்களே அழைப்பது நல்ல விஷயம். கொஞ்சமும் யோசிக் காமல் சேர்ந்துவிடுங்கள். ‘பிசினஸ் ஆரம்பித்து தோற்று விட்டோம்’ என நினைக்காமல் உடனே பணியில் சேர்ந்து விடுங்கள்.

உங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய சம்பளம் என்றாலும்கூட நல்லதுதான். வேலையில் சேர்வது என்பது உங்களுக்கு உள்ள ரூ.30 லட்சம் கடனை அடைத்து முடிக்க நம்பிக்கையைக் கொடுக்கும்.

முன்பணம் கொடுத்தவர்களை அழைத்து சூழ்நிலையை விளக்கி, வட்டியுடன் இ.எம்.ஐ-ஆக மாதம்தோறும் செலுத்திவிடுவதாகச் சொல்லுங்கள். ஒப்புக்கொள்கிறவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் இ.எம்.ஐ-ஆக செலுத் துங்கள். ஒப்புக்கொள்ளாதவர்கள் இரண்டு, மூன்று பேர் இருப்பின் அவர்களுக்கு மொத்தமாகப் பணத்தைக் கொடுக்க முயற்சி எடுங்கள்.

முதலில் கையில் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணமாக்குங்கள். ஏதாவது ஒரு வகையில் சேமிப்பு என ஏதாவது கொஞ்சம் இருந்தாலும் அவற்றையும் திரட்டுங்கள். உங்கள் அப்பாவிடமோ, நெருங்கிய உறவினரிடமோ தயக்கத்தை விட்டுக் கேட்டுப் பெறுங்கள். பர்சனல் லோன் வாங்குங்கள். இப்படி பல முயற்சிகளிலும் பணத்தைப் பெற்று இ.எம்.ஐ-க்கு ஒப்புக் கொள்ளாத முன்பணம் கொடுத்தவர் களுக்கு பணத்தைச் செலுத்திவிடுங்கள்.

பிறகு நகைக்கடன், பர்சனல் லோன், உறவினரிடம் வாங்கிய கடன் இப்படி எதுவாக இருப்பினும் இ.எம்.ஐ செலுத்தி வாருங்கள். நான்கு, ஐந்து வருடங்களில் கடனைக் கட்டி முடித்துவிடலாம். அதற்குப் பிறகு இரண்டு, மூன்று ஆண்டு களுக்கு வேலை மூலம் பணம் சேர்த்துக் கொண்டு, தற்போதைய அனுபவத்தைப் பாடமாக மனதில் வைத்து பிசினஸ் தொடங்குங்கள்.

அனுபவம் கொண்ட நம்பிக்கை யானவர்களை பார்ட்னராக சேர்த்துக் கொண்டு பிசினஸ் ஆரம்பிக்கலாம். வேலைதான் சரி என உங்களுக்குத் தோன்றினால், அப்போதைய சூழலை வைத்து முடிவு செய்யுங்கள். இன்பமோ, துன்பமோ எல்லாமும் கடந்து போகும். திறமை உள்ள நீங்கள் மனஉறுதியை விடாமல் இருந்தால் எல்லாக் கஷ்டங் களில் இருந்தும் மீண்டு வந்துவிடலாம்.”

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

ஐந்து அனுபவப் பாடங்கள்!

1. அனுபவம் இல்லாமல் பெரிய முதலீடுகளைச் செய்யக் கூடாது.

2. அடுத்தவர்களைப் பார்த்து காப்பியடித்துச் செய்வது சரியான அணுகுமுறை அல்ல.

3. மனை, நிலம், வீடு வாங்கும்போது ஆவணங்களை சரிபார்ப்பதில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

4. படிப்பு வேறு, அனுபவம் வேறு. வெற்றிக்கு இரண்டும் அவசியம்.

5. நெருக்கடி வந்தபிறகு கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

பிட்ஸ்

கடந்த ஆண்டைவிட டிராக்டர்களின் விற்பனை 41% அதிகரித் திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 50,803 டிராக்டர்கள் விற்பனை ஆனது; ஆனால், கடந்த டிசம்பரில் 71,700 டிராக்டர்கள் விற்பனை ஆனது!