சிலருக்கு எதற்காகக் கடன் வாங்க வேண்டும், வாங்கிய கடன் பணத்தை எப்படிச் செலவு செய்யப்போகிறோம், எப்படித் திரும்பக் கட்டப் போகிறோம் என்பது பற்றி எந்தத் திட்டமும் இருப்பதில்லை. கடன் கிடைத்தால் போதும், உடனே வாங்கிவிடுவார்கள். கடன் தொகை பெரிய அளவில் சேர்ந்து, வருமானத்தில் பெரும்பகுதி இ.எம்.ஐ கட்டவே செல்லும்போதுதான் அவர்கள் செய்த தவற்றை உணர்வார்கள்.

இதே தவற்றைத்தான் செய்திருக்கிறார் தர்மபுரியைச் சேர்ந்த அன்பு. தன் மாத வருமானத்தில் முக்கால்வாசியை இ.எம்.ஐ செலுத்தவே செலவழித்து விட்டு, இப்போது நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் அவர். அவர் வாங்கிய கடன்களை முதலில் பார்ப்போம்.

“நான் அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக உள்ளேன். என் மனைவியும் ஆசிரியையாக உள்ளார். என் சம்பளம் ரூ.52,000. என் மனைவி யின் சம்பளம் ரூ.33,000. நான் என் சொந்த ஊரில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளேன். வாடகை வருமானம் ரூ.4,500 வருகிறது.

நான் சில காரணங்களால் பல விதமான கடன்களையும் வாங்கி யுள்ளேன். என் கடன் விவரங்கள் இனி...

1. வீட்டுக் கடன் ரூ.20 லட்சம் - இ.எம்.ஐ ரூ.15,482 செலுத்தி வருகிறேன். இன்னும் 245 மாதங்கள் இ.எம்.ஐ கட்ட வேண்டும்.

2. வீட்டு டாப்அப் லோன் ரூ.5 லட்சம் - இ.எம்.ஐ ரூ.5,158. இன்னும் 160 மாதங்கள் இ.எம்.ஐ கட்ட வேண்டும்.

3. பர்சனல் லோன் (பொதுத்துறை வங்கியில்) ரூ.90,000 - இ.எம்.ஐ ரூ.2,996. இன்னும் 24 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும்.

4. பர்சனல் லோன் (தனியார் வங்கியில்) ரூ.1 லட்சம் - இ.எம்.ஐ ரூ.2,416. இன்னும் 53 மாதங்கள் கட்ட வேண்டும்.

5. கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் ரூ.12 லட்சம் - இ.எம்.ஐ ரூ.23,500. (மாதம் 150 ரூபாய் இ.எம்.ஐ குறையும்). இன்னும் 90 மாதங்கள் இ.எம்.ஐ கட்ட வேண்டும்.

6. பர்சனல் லோன் என் மனைவி பெயரில் (தனியார் வங்கியில்) ரூ.2.5 லட்சம் - இ.எம்.ஐ ரூ.8,603 கட்டுகிறேன். இன்னும் 14 மாதங்கள் இ.எம்.ஐ கட்ட வேண்டும்.

7. பர்சனல் லோன் என் மனைவியின் பெயரில் (பொதுத்துறை வங்கி) ரூ.80,000 - இ.எம்.ஐ ரூ.2,663 கட்டுகிறேன். இன்னும் 24 மாதங்கள் கட்ட வேண்டும்.

8. பர்சனல் லோன் மனைவியின் பெயரில் (பொதுத்துறை வங்கியில்) ரூ.4 லட்சம் - இ.எம்.ஐ ரூ.9,500 கட்டுகிறேன். இன்னும் 20 மாதங்கள் கட்ட வேண்டும்.

9. நகைக் கடன் 64,000 ரூபாயும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மீது 65,000 ரூபாயும் கடன் வாங்கியுள்ளேன்.

நான் தற்போது தர்மபுரியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். வாடகை ரூ.10,000. இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சில எடுத்துள்ளேன். நான், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு இன்ஷூ ரன்ஸ் பிரீமியமாக மாதம்தோறும் ரூ.3,046 கட்டி வருகிறேன். கையிருப்பாக ரூ.2.5 லட்சம் மட்டுமே வைத்திருக் கிறேன். இதுவும் மாதம்தோறும் குறைந்து வருகிறது. எனக்கு ஏற்பட்டிருக்கும் கடன் சிக்கலிலிருந்து நான் விடுபடுவதற்கான வழிகளைக் காட்டுங்கள்’’ என்று அவர் நமக்கு அனுப்பி மின் அஞ்சலில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு நாம் தரும் ஆலோசனைகள் இனி... “பொதுவாக, தேவைக்குக் கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தேவையே இல்லாமல் கடன் வாங்குவது மகா தவறு. நீங்கள் எங்கே யெல்லாம் கடன் வாங்க வாய்ப்புக் கிடைத்துள்ளதோ, அங்கேயெல்லாம் வாங்கியுள்ளீர்கள். கடன் வாங்கி என்ன பயனுள்ள செலவுகளைச் செய்திருக் கிறீர்கள் என்பதும் புதிராக உள்ளது. வாழ்க்கையில் நல்ல வேலை, வருமானம் அமைந்தும் நீங்களும், உங்கள் மனைவியும் இலக்குகளை உருவாக்கிக் கொண்டு முதலீடுகளைச் செய்யாமல், கடன் வாங்கி, கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்ததுதான் நீங்கள் செய்த தவற்றின் அடிப்படை.

பொதுவாக, ஒருவர் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கு ஒரு ‘தம்ப் ரூல்’ உண்டு. ஒருவரின் மாத வருமானத்தில் 40 சதவிகிதத்துக்குமேல் இ.எம்.ஐ செல்லும் வகையில் கடன் வாங்கக் கூடாது.

உங்கள் மொத்த மாத வருமானம் ரூ.89,000. ஆனால், உங்கள் பெயரில் 49,552, உங்கள் மனைவியின் பெயரில் 20,766 என நீங்கள் மாதம்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ தொகை 70,318. உங்களுக் கான மாதச் செலவுகளைச் சமாளிக்க சுமார் ரூ.19,000 மட்டுமே மீதம் உள்ளது. நீங்கள் குடும்பப் பாதுகாப்புக்குத் தேவையான டேர்ம் இன்ஷூரன்ஸ், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் என எதுவும் எடுக்கவில்லை. நிதி நிர்வாகத்தின் அடிப்படை விஷயங்களை மட்டுமாவது நீங்கள் பின்பற்றி யிருந்தால் உங்களுக்கு இவ்வளவு கடன் சுமை வந்தே இருக்காது.

இவ்வளவு கடனை நீங்கள் எதற்காக வாங்கியிருந்தாலும் சரி, ‘இனி புதிதாக எந்தக் கடனையும் ் வாங்க மாட்டோம்’ என நீங்களும் உங்கள் மனைவியும் உறுதி எடுக்கும்பட்சத்தில் மட்டுமே இந்தக் கடன் சுமையிலிருந்து நீங்கள் மீண்டு வர இயலும்.

வீட்டுக் கடன் ரூ.20 லட்சம் வாங்கி வீடு கட்டிவிட்டு, ரூ.15,482 இ.எம்.ஐ செலுத்தும்நிலையில், வெறும் 4,500 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளீர்கள். ஆனால், நீங்கள் ரூ.10,000 செலுத்தி வாடகை வீட்டில் குடியிருக் கிறீர்கள். நீங்கள் குடியிருக்க வீடு தேவைப்படாத நிலையில், கடன் வாங்கி வீடு கட்ட வேண்டியதன் அவசியம் என்ன? அதை நீங்கள் செய்யாமல் இருந்திருக்கலாமே!

உங்கள் மனைவியின் கடன் அனைத்துமே இரண்டு ஆண்டு களுக்குள் முடிந்துவிடக்கூடிய வையாக இருக்கின்றன. அந்த வகையில் 14 மாதங்களுக்குப் பிறகு, உங்களுக்கு மீதமாகும் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதைக் கொண்டு உங்கள் மனைவியின் கடன்கள், நகைக் கடன், இன்ஷூரன்ஸ் பாலிசிக் கடன்களை முதலில் அடைத்துவிடுங்கள். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளில் உங்கள் மனைவியின் கடன்கள், நகைக் கடன், பாலிசி கடன் அனைத்தும் அடைந்துவிடும். உங்களுடைய பெயரில் உள்ள பர்சனல் லோன் ஒன்றும் அடைந்துவிடும்.

அதன்பிறகு உங்கள் பெயரிலுள்ள நான்கு கடன்கள் மட்டுமே இருக்கும். இவை அனைத்தும் நீண்டகாலக் கடன் என்பதால், இப்போது செலுத்து வதைப்போல இ.எம்.ஐ செலுத்தி வரலாம்.

இப்படி முடிக்கப்பட்ட கடன்களுக்குச் செலுத்திவந்த இ.எம்.ஐ தொகை ரூ.24,000, தற்போது மீதமாகும் தொகை ரூ.19,000 என மொத்தம் ரூ.43,000 உங்களிடம் இருக்கும். வாடகை, குடும்பச் செலவுகளுக்கு ரூ.30,000 போக, ரூ.13,000-ஐ ஆர்.டி அல்லது லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். அப்போதுதான் நெருக்கடியான சூழல் வரும்போது மேற்கொண்டு, கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்கான நான்கு கடன்களுக்கு மட்டும் நீங்கள் ரூ.46,000 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும். நீண்டகாலக் கடனாக இருப்பதால், நீங்கள் ரூ.1 கோடிக்கும், உங்கள் மனைவிக்கு ரூ.50 லட்சத்துக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. கூடுதல் பணம் கிடைக்கும்பட்சத்தில் அப்போது கூட்டுறவுக் கடனை அடைத்துவிடலாம். சம்பள உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் தொகையைக் குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். கையிருப் பாக உள்ள ரூ.2.5 லட்சத்தைக் கொண்டு பற்றாக்குறையைச் சமாளியுங்கள். முக்கியமாக, குடும்பச் செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ளாமலும், புதிய கடன்களை வாங்காமலும் இருந்தால், கடன் சுமையைக் குறைந்து நீங்கள் நிம்மதி அடையலாம்.”

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அறிய வேண்டிய 5 பாடங்கள்!

1. கடன் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விடுவதில் லாபம் இருக்காது.

2. பர்சனல் லோன் சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காக வாங்கக் கூடாது.

3. வருமானத்தில் 40 சதவிகிதத்துக்குமேல் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் கடன் வாங்கக் கூடாது.

4. வருமானம் இருந்தும் அடிப்படை இலக்குகளுக்கான முதலீட்டைக்கூட ஆரம்பிக்காமல் இருப்பது தவறு.

5. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது டேர்ம், ஹெல்த் இன்ஷூரன்ஸுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்

பிட்ஸ்

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 11% பேர் எந்தவிதமான மருத்துவக் காப்பீடும் இல்லாமலே இருக்கின்றனர். 14% பேர் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கவரேஜுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீட்டை வைத்துள்ளனர்!